Description
உழ்ஹிய்யா கொடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்
குர்பான் கொடுக்கும் ஒழுங்கு முறைகள்
] தமிழ் – Tamil –[ تاميليي
M.S.M. இம்தியாஸ் யூசுப்
2013 - 1434
أحكام وآداب الأضحية
« باللغة التاميلية »
محمد إمتياز يوسف
2013 - 1434
குர்பான் கொடுக்கும் ஒழுங்கு முறைகள்.
M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி
»
ஹஜ்ஜுப் பெருநாள் தியாக வரலாற்றை நினைவுப்படுத்தும் திரு நாளாகும். நபிஇப்றாஹிம் (அலை) அவர்களும், அவர்களது குடும்பமும் அல்லாஹ்வுக்காக முற்றிலும் அர்பணித்து வாழ்ந்த வாழ்க்கையை நிதர்சனமாக எடுத்துக் காட்டுவதுதான் புனித ஹஜ்ஜும் அதன் கிரிகைகளுமாகும். அக்கிரிகைகளில் ஒன்று தான் உழ்ஹிய்யா என்னும் குர்பானாகும். இதன் சிறப்புக்கள் மற்றும் ஒழுங்குகளை சுருக்கமாக இப்பிரசுரத்தில் காண்போம்.
நோக்கம் :-
இக் குர்பான் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திலிருந்து அதாவது துல்ஹஜ் பிறை பத்திலிருந்து அதனை தொடர்ந்து வரக்கூடிய அய்யாமுத் தஷ்ரீக்குடைய பிறை 11, 12, 13 ஆகிய மூன்று தினங்கள் வரை கொடுக்க வேண்டிய நாட்களாகும். ஆடு,மாடு ஒட்டகம், ஆகிய இம்மூன்று பிராணிகளில் ஏதாவதொன்றை அல்லாஹ் வுக்காக அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்துப் பலி யிட்டு ஏழை எளியவர்களுக்காகவும், தங்கள் குடும்பங்களுக் காகவும் பங்கீடு செய்வதே
இவ்வணக்கத்தின் நோக்கமேதவிர அல்லாஹ்வுக்காக வீணாக இரத்தம் ஒட்டுவதோ, பிராணிகளை அறுத்து (உயிர் பலியிட்டு) பூஜை செய்வவோ அதன் அர்த்தமுமல்ல, நோக்கமுமல்ல.
(குர்பானின் போது) அவற்றின் மாமிசங்களோ அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை. எனினும் உங்களிடமிருந்து பயபக்தியே அவனைச் சென்றடையும்.. (அல்குர்ஆன் 22:37)
உமது இரட்சகனுக'காகத் தொழுது (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக (108:02)
இறையச்சத்தை மனதில் கொண்டு குர்பான் கொடுக்கும் ஒழுங் குகளை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவை:
ஒருவர் குர்பானி கொடுப்பதாக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல்பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும்வரை நகம், முடி ஆகியவைகளை நீக்கக்கூடாது
“உங்களில் ஒருவர் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்பினால் துல்ஹஜ் மாதம் தலைப்பிறை முதல் அதனை நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் என்பவற்றைக் களைவதைத் தவிர்த் துக்கொள்ளட்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். (உம்மு ஸல்மா(ரலி), முஸ்லிம்)
பிராணிகளை நன்கு பராமரித்தல்:-
குர்பானுக்காக தயார் படுத்தும் பிராணியை நன்கு பராமரித்து உணவளித்து மாமிசமுள்ள பிராணியாக வளர்க்க வேண்டும்.
நாங்களும் ஏனைய முஸ்லிம்களும் மதீனாவில் குர்பானிப் பிராணியை கொழுக்கச் செய்வோம்” என அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி)
பிராணிகளின் வயதும் ஏழு பேர் கூட்டுச் சேருதலும் :-
ஒரு ஆண்டைப் பூர்த்தி செய்த ஆடும் இரண்டு ஆண்டுககளைப் புர்த்தி செய்த ஒட்டகமும் குர்பான் கொடுப்பதற்கு உரிய பிராணிகளாகும்.
ஒரு ஆட்டை குர்பான் கொடுக்க நினைப்பவர் யாரையும் கூட் டுச் சேர்க்காமல் தனியாக கொடுக்கலாம். தனியாக குர்பான் கொடுக்க வசதி இல்லை என்றால் ஏழு பேர் கூட்டுச் சேர்ந்து ஒரு மாட்டை வாங்கி குர்பான் கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஒரு ஒட்டகம் ஏழு ஆடுகளுக்கு சமமாகவே இஸ் லாத்தில் கருதப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு மாட்டை அல்லது ஒட்டகத்தை ஏழுபேர் கூட்டாகச் சேர்ந்து குர்பான் கொடுத்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்ட ளையிட்டதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)
குறைகள் அற்ற பிராணிகளை அறுத்தல் :-
குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணிகள் கொம்பில் பாதிய ளவு ஒடிந்தவை. காதில் பாதியளவு (கிழிப்பட்டவை) அறுபட் டவை, கண் குருடானவை நன்கு தெரியும் படியான நோய், நன்கு தெரியும் விதமான நொண்டி, தானாக நடக்க முடியாத நிலையிலுள்ளவை, எழும்பு மஜ்ஜை பலவீனமானவை, வயது முதிர்ந்த பிராணி போன்ற எக்குறைகளும் அற்றதாக இருக்க வேண்டும். (நூல் அபூதாவூத், திர்மிதி)
தொழுகையை நிறைவேற்றிய பின் அறுத்தல் :-
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் அறுக்க வேண்டும். தொழுகைக்கு முன்பு அறுத்தால் அது குர்பானுக்காக அறுத்ததாக கருதப் படமாட்டாது. குர்பானுக் கான நன்மையிலும் சேராது.
“யார் நம் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பகரமாக மற்றொன்றை அறுக்க வேண்டும். யார் நம் தொழுகையை முடிக்கும் வரை அறுக்கவில்லையோ அவர் (தொழுத பின்) அல்லாஹ்வின் பெயரால் அறுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜுன்துப் (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் போது :-
கத்தியை நன்கு கூர்மையாக்கி பிராணியை கஷ்டப்படுத்தாமல் இலகுவாக அறுக்க வேண்டும். ஒட்டகத்தை நிற்க வைத்தும், ஆடு, மாடுகளை ஒரு பக்கம் படுக்கவைத்தும் அறுக்க வேண்டும். அறுக்கும் போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் “بسم الله والله أكبر“ என்று கூறி அறுக்க வேண்டும். (நூல் புகாரி முஸ்லிம்)
ஆயிஷாவே! கத்தியைக் கொண்டு வா! அதை ஒரு கல்லில் தீட்டி நன்கு கூர்மையாக்கிக் கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே ஆயிஷா (ரலி) அவர்கள் செய்தார்கள். அதன்பின் நபியவர்கள் கத்தியையும் ஆட்டையும் பிடித்துக் கொண்டு அதை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். “பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்” என்று கூறினார்கள். யா அல்லாஹ் இதனை முஹம்மதிட மிருந்தும், முஹம்மதின் குடும்பத்தினரிடமிருந்தும் முஹம்மத்தின் சமூகத்திடமிருந்தும் ஏற்றுக்கொள்வாயாக என்றும் கூறி னார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் புகாரி, முஸ்லிம்)
பெண்களும் பிராணிகளை அறுக்கலாம்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் மணி (கூரிய) கற்களால் ஒரு ஆட்டை அறுத்து கொண்டுவந்த போது அதனை சாப்பிடலாம் என கூறிய ஹதீஸ் இப்னு மாஜா, புகாரியில் பதிவாகியுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பான்:-
குர்பான் கொடுப்பவர் தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் ஒரு குர்பான் கொடுத்தால் போதுமானது. குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தவர்களுக்காகவும் குர்பான் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்பான் கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) யிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் நபி (ஸல்) அவர் களின் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தனது வீட்டுக்காகவும் ஒரு ஆட்டை குர்பான் கொடுப்பார். அதில் அவர்களும் சாப்பிட்டு பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெரு மையடிக்க ஆரம்பித்த போது (இன்று) நீ காணக்கூடிய நிலை (அதாவது ஒரு குடும்பம் பல ஆடுகளை அறுக்கும் நிலை) ஏற்பட்டு விட்டது என்று கூறினார்கள் அறிவிப்பவர் அதாஇப்னு யஸார் (ரலி) (நூல் : இப்னுமாஜா, திர்மிதி)
தாமே அறுப்பது சுன்னத்தாகும்.
உழ்ஹிய்யாக் கொடுப்பவர் அறுக்கத் தெரிந்தவராய் இருந்தால் – தனது பிராணியைத் தானே அறுத்தல் சுன்னத்தாகும்.நபிய வர்கள் – அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் பெயர் கூறித் தக்பீர் மொழிந்து “இறைவா! எனக்காகவும், உழ்ஹிய்யாக் கொடுக்காத என் உம்மத்தினர்களுக்காகவும்” என்று கூறி ஓர் ஆட்டை அறுத்தார்கள். (அபூதாவூத், திர்மிதீ)
பங்கீடு செய்தல் :-
குர்பான் மாமிசத்தை எந்தளவு பங்கீடு செய்ய வேண்டும் என்ற எந்த வரம்புமில்லை. விரும்பியவாறு விரும்பிய அளவு, தெரிந்த, தெரியாத முஸ்லிம்களுக்கும், இனபந்துக்களுக்கும், சொந்தக் காரர்களுக்கும் கொடுக்கலாம், சேமித்தும் கொள்ளலாம், சாப்பிட்டும் கொள்ளலாம்.
அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள் (அல்குர்ஆன் 22:28)
குர்பான் இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள், சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், தர்மமும் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் முஸ்லிம்)
குர்பானித் தோலைக் கூலியாக கொடுக்க லாகாது:-
குர்பான் கொடுப்பவர் தனது கையாலேயே அறுத்து பலியிடுவதுதான் சிறந்த செயலாகும். தனக்கு அறுக்க முடியாத போது இன்னுமொருவரிடம் கூறி அறுத்து உரித்து துப்பரவு செய்யும் போது அதற்கு கூலியாக அறுக்கப்பட்ட பிராணியின் தோல், மாமிசம், போன்ற எதையுமே அறுத்தவருக்கு கூலியாகக் கொடுக்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் குர்பான் கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நியமித்தார்கள். அவை களின் மாமிசம், தோல், சேனம் ஆகியவற்றை தர்மமாக கொ டுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதனையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கலாகாது என்றும் கூறினார்கள். நாங்கள் அறுப்பதற்கான கூலியைத் தனியாக கொடுப்போம் என் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல் : புகாரி)
மாற்று மத சகோதரர்களின் மனதை புண்படுத்தாமல் கண்ணியமாக நடந்து கொள்வோம்.
சகோதரர்களே! பல்வேறு மதத்தவர்கள் வாழும் நாடுகளில், ஒவ்வொரு மதத்தவர்களும் அவர்களுக்குரிய மார்க்க கிரியைகளை பின்பற்றி வாழ பூரண சுதந்திரமுண்டு. ஒருவர் மற்றவரின் மதச் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. அதே வேளை மாற்றுக் கருத்துக்களுடைய சகோதரர்களையும் மதத்தையும் மதிக்கும் பண்பும் இருக்க வேண்டும்.
சில நாடுகளில் பசுக்களை தெய்வமாக கருதி வழிப் படுபவர்களும் உள்ளனர். கடவுளின் பெயரால் பசுக்களை வாங்கி விடுதலை செய்து அச்செய்கை மூலம் தர்மம் தேடுபவர்களும் உள்ளனர். ஒவ்வொருவருடைய நம்பிக்கைகள், கொள்ளைகள், செயற்பாடுகள் வித்தியாசமானவைகள்.
எனவே இதனை நாம் புரிந்து கொண்டு நாம் குர்பான் கொடுக் கும் போது பிராணிகளின் எலும்பு, தோல் போன்ற கழிவுகளை பாதை ஓரங்களில் வடிகால்களில், அல்லது குப்பை தொட்டிகளில் வீசுவது அல்லது இரத்தம் வடிய வடிய குர்பானிய மாமிசங்களை எடுத்துச் செல்வது போன்ற செயல்களை முற்றாக தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட செயல்கள் இஸ்லாத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறே குர்பானிப் பிராணிகளை பாதையில் ஒட்டிச் செல்லும் போது அதற்கு வதை கொடுக்காமல் துன்புறுத்தி கஷ்டத்திற்குள்ளாக்கி இழுத்துச் செல்லாமல் அழகிய முறையில் ஓட்டிச் செல்ல வேண்டும். அல்லது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு வரவேண்டும்.
இந்த ஒழுங்குகளை குர்பான் கொடுக்கும் காலங்களிலும் ஏனைய காலங்களிலும் கடைபிடிக்க பழகிக் கொள்வோம். மாற்று மத சகோதரர்களின் மனதை புண்படுத்தாமல் கண்ணிய மாக நடந்து கொள்வோம்.
உயர்ந்த இஸ்லாமிய கொள்கைகளையும், அழகிய இஸ்லாமிய வாழ்க்கை முறைகளையும் மாற்று மதத்தவர்களுக்கு எடுத்துக் காட்டுது எமது கடமையாகும். பண்டைய கால முஸ்லிம்களின் உன்னத நடத்தை மூலம் இஸ்லாம் உலகெங்கும் பரவியது என்பதை, நாமும் இன்று முஸ்லிம்களாக பிறப்பதற்கு காரணமாயிருந்தது என்பதை நாம் மறக்கக் கூடாது. எங்கள் வாழ்க்கையை பார்த்து இன்னும் அதிகமான மக்கள் இஸ்லாத்தில் சேர்வதில் எமக்கு மகிழ்ச்சி இல்லையா?
அப்படியானால் அதற்குரிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஆரம்பிப்போம், இன்ஷா அல்லாஹ்.