Description
முகர்ரம் மாதமும் அதில் ஆஷூரா நோன்பு பிடிப்பதின் சிறப்பும்
முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்
] தமிழ் – Tamil –[ تاميلي
முஹம்மத் இம்தியாஸ் யூசுப் ஸலபி
2013 - 1434
شهر الله محرم والصيام فيه
« باللغة التاميلية »
محمد إمتياز يوسف السلفي
2013 - 1434
முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்
இம்தியாஸ் யூசுப் ஸலபி
முஹர்ரம் என்றால் புனிதமானது என்று அர்த்தமாகும். முஹர்ரம் மாதம் இஸ்லாமிய வருட கணக்கில் முதல் மாதமாகும். இம்மாதம் அல்லாஹ்வினால் புனிதப் படுத்தப் பட்ட மாதமாகும்.
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ:
நிச்சயமாக வானங்கள் பூமி படைக்கப் பட்டதிலிருந்து அல்லாஹ்வின் பதிவின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை யாகும். இது நேரான மார்க்கமாகும். எனவே அவற்றில் (போரை ஆரம்பிப்பதன் மூலம் உங்களுக்கு நீங்களே) அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்... '(9:36)
இவ்வசனத்தில் நான்கு மாதங்கள் புனிதமானவை என அல்லாஹ் கூறுகிறான்.
அந்நான்கு மாதங்கள் பற்றி நபி(ஸல்) அவர்கள் விளக்கப்படுத்தும் போது முஹர்ரம், ரஜப் துல்கஃதா, துல் ஹஜ்ஜு, ஆகியவையாகும் என்றார்கள். இந்நான்கு மாதங்களில் யுத்தம் தொடுப்பது முஸ்லிம்கள் மீது தடுக்கப் பட்டுள்ளது. எதிரிகள் முஸ்லிம்கள் மீது போர் தொடுத்தால் தற்காப்புச் சண்டையில் ஈடுபட மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஜாஹிலிய்யாக் காலம் தொட்டே இம்மாதங் களின் புனிதத்துவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
குறைஷிகள் நோன்பு நோற்றல்:
முஹர்ரம் மாதத்தின் நோன்பு பிறை பத்தில் நோற்கும் நோன்பாகும். இது ஆஷூரா நோன்பு எனப்படும். ஜாஹிலிய்யா காலத்தில் குறைஷி களும் இந்நோன்பை நோற்று வந்தார்கள் நபி(ஸல்) அவர்களும் நோற்று வந்தார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன் ஆஷூரா நோன்பே நடைமுறையில் இருந்தது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷூரா நோன்பு சுன்னத்தாக் கப்பட்டது.
صحيح البخاري (3ஃ 24)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا،: أَنَّ قُرَيْشًا كَانَتْ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فِي الجَاهِلِيَّةِ، ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصِيَامِهِ حَتَّى فُرِضَ رَمَضَانُ، وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَاءَ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَفْطَرَ
ஜாஹிலியா காலத்தில் குறைஷிகள் ஆஷூரா நோன்பை நோற்று வந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்படும் வரை அந்நோன்பை பிடிக்கு மாறு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். ரம்ழான் கடமையாக்கப் பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர் பிடிக்கலாம், விரும்பியவர் விட்டு விடலாம் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் : புகாரி
யூதர்கள் நேன்பு நோற்றல்:
மதீனாவுக்கு நபி(ஸல்)அவர்கள் ஹிஜ்ரத் செய்த பின்பும் இந்நோன்பை நோற்குமாறு முஸ்லிம் களுக்கு ஏவினார்கள். அதே வேளை யூதர்களும் இந்த ஆஷூரா நோன்பை நோற்று வந்ததையும் கண்டார்கள். இது பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) பின்வறுமாறு அறிவிக் கிறார்கள்.
صحيح البخاري (3ஃ 44)
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ فَرَأَى اليَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ: «مَا هَذَا؟»، قَالُوا: هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ، فَصَامَهُ مُوسَى، قَالَ: «فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ»، فَصَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் ஆஷூரா நோன்பு நோற்றதைக் கண்டார்கள். இதற்கான காரணம் என்ன என்று யூதர்களிடம் நபி(ஸல்) கேட்டார்கள். இது ஒரு நல்ல நாள். இந்நாளில் மூஸா (அலை) அவர்களையும் பனு இஸ்ரவேலர்களையும் அல்லாஹ் காப்பாற்றி னான். அதற்காக மூஸா நபிநோன்பு நோற்றார் எனக் கூறினார்கள்.
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் மூஸா வுடைய விடயத்தில் உங்களை விட நான் உரிமையுடையவன் எனக் கூறி தாமும் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்,)
ஆஷூரா தினத்தில் யூதர்கள் நோன்பு நோற்பது மட்டுமன்றி அந்நாளை பெருநாளாகவும் கொண்டாடி வந்தார்கள். எனவே அவர்களுக்கு முரண்படும் விதத்தில், யூதமதமும் இஸ்லாமும் ஒன்றல்ல என்ற அடிப்படையில் வித்தியாசப் படுத்திக் காட்டும் விதத்தில் - ஆஷூரா நோன்பும் அதற்கு முன்தைய நாள் நோன்பும் நோற்குமாறு முஸ்லிம்களுக்கு ஏவினார்கள்.
صحيح مسلم (2ஃ 797)
سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، يَقُولُ: حِينَ صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا: يَا رَسُولَ اللهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ» قَالَ: فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ، حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்று மக்களுக்கும் அந்நோன்பை பிடிக்குமாறு ஏவினார்கள்.அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே யூதர்களும் கிறிஸ்தவர்களும் அந் நாளை கண்ணியப் படுத்துகிறார்கள் (இன்னுமொரு அறிவிப்பில் பெருநாளாக கொண்டாடுகிறார்கள்) என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள் அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள்.ஆனால் அடுத்த வருடம் நபியவர்கள் இருக்கவில்லை வபாத்தாகி விட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.(நூல்முஸ்லிம்)
உண்மையில் மூஸா நபி மற்றும் ஈஸா நபி கொண்டு வந்த இறை தூதுத்துவத்தைத் தான் முஹம்மத் நபியும் கொண்டு வந்தார்கள். முஹம்மத் நபி பற்றி மூஸா (அலை) ஈஸா(அலை) ஆகியோர் தவ்றாத் மற்றும் இன்ஜீல் வேதங்களில் முன்னறிவிப்பும் செய்துள்ளார் கள்.எனினும் இந்த உண்மையை ஏற்காது மாறுப்பட்ட கொள்கையை யூத, கிறிஸ்தவர்கள் ஏற்று பின்பற்றுவதாலும் அவர்களுக்கும் அவர்க ளது பெருநாள் தினத்திற்கும் வித்தியாசத்தை காண்பிக்க இந்த இரு நாள் நோன்பை நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் பணித் துள்ளார்கள் என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இன்னுமொரு சாராரின் கலாசாரத்திலிருந்து தனித்துவம் பேணுவதை எமக்கு எடுத்து காட்டியுள்ளார்கள்.
நோன்பின்சிறப்பு:
ஆஷூரா நோன்பு ஒன்பதாம் பத்தாம் நாள் நோற்கும் இரு நோன்புகளாகும் என மேலேயுள்ள ஹதீஸ் மூலம் உறுதியாகின்றது.
صحيح مسلم (2ஃ 821)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلَاةِ، بَعْدَ الْفَرِيضَةِ، صَلَاةُ اللَّيْلِ
ரமழானுக்குப் பின் மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் பிடிக்கும் நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின் மிகச்சிறந்த தொழுகை இரவு தொழுகையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்)
ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பது முக்கியமான சுன்னத் என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.
عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ
ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பது முன்தைய வருடத்திற்கான பாவத்திற்கு பரிகாரமாக இருக்கும் என எண்ணுகிறேன் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல் திர்மிதி
இந் நோன்பின் பாக்கியத்தைப் பெற்று அல்லாஹ்வின் அருளை பெறுவோமாக.