Description
ஒவ்வொரு அமலுக்கும் கூலியை நிர்ணயித்த அல்லாஹ் நோன்புக்கு மட்டும் கூலியை நிர்ணயிக்கவிலலை. தன்னுடைய உணவு பானம் மற்றும் இச்சையை அல்லாஹ் வுக்காக விட்டுவிடுகின்ற அடியானுக்காக கூலிகளை கணக்கின்றி அள்ளி வழங்குகின்றான்.
நோன்பின் மாண்பு
] Tamil – தமிழ் –[ تاميلي
M.S.M.இம்தியாஸ் யூசுப்
2014 - 1435
فضيلة الصيام
« باللغة التاميلية »
محمد إمتياز يوسف
2014 - 1435
நோன்பின் மாண்பு
M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி
புன்னியம் பூத்த ரமழானை எதிர்பார்த்த உள்ளங்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. அல்லாஹ்வுடைய அருளையும் அன்பையும் பெற்றுக் கொள்கின்ற வாய்ப்பும் கிட்டி யுள்ளது.
சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கின்ற ஆரவாரம் செய்கின்ற காட்சிகளை பாரக்கின்றோம். வாழ்த் துக்களை பரிமாறுகின்ற நெஞ்சங்களையும் காண்கின் றோம். ரமழான் முழுவதையும் அடைந்து கொள்ள வேண்டும். பாக்கியம் பொருந்திய லைலதுல் கத்ரு இரவை அடைய வேண்டும். பாவங்களை விட்டும் மன்னிக்கப் பட்டவர் களாக மாற வேண்டும் என்று மனதார ஏங்குகின்ற மனிதர்களையும் காண்கின்றோம். சந்தோசங்களுடன் மன நிறைவாக மூச்சு விடுகின்ற முஸ்லிம்களையும் காண்கின்றோம்.
ரமழானை முன்னிட்டு பல ஏற்பாடுகள் வீடுகளிலும் பள்ளி வாயல்களிலும் செய்யப் படுகின்றன. இபாதத்கள் மேற் கொள்வதற்கும் ஆயத்தங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. எத்தனை இன்பங்கள் என்னென்ன சந்தோசங்கள். அத்தனை நன்மைகளையும் அள்ளித் தருவதற்கு ரமழான் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
ரமழானை நினைத்து மனித உள்ளங்கள் இப்படி ஏக்கம் கொள்கின்றது என்றால் ரமழானை தந்த வல்ல ரஹ்மான் எவ்வளவு சந்தோசம் கொள்வான். தன் அடியார்கள் மீது இரக்கம் கொண்ட அந்த ரஹ்மான் எத்தனை நன்மைகளை தயார்படுத்திவைத்திருப்பான்.
وفي صحيح البخاري
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: قال الله عز وجل: كل عمل ابن آدم له، إلا الصوم فإنه لي وأنا أجزي به - -
ஆதமுடைய மகன் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அவனுக்குரிய கூலி உண்டு. நோன்பைத் தவிர ஏனெனில் நோன்பு எனக்குரியது. நானே நோன்புக்கு கூலி வழங் குகிறேன். என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) (நூல் :புகாரி.)
ஒவ்வொரு அமலுக்கும் கூலியை நிர்ணயித்த அல்லாஹ் நோன்புக்கு மட்டும் கூலியை நிர்ணயிக்கவிலலை. தன்னுடைய உணவு பானம் மற்றும் இச்சையை அல்லாஹ் வுக்காக விட்டுவிடுகின்ற அடியானுக்காக கூலிகளை கணக்கின்றி அள்ளி வழங்குகின்றான். எனவே ரமழானின் அருளை பெறுவதற்காக ரஹ்மத்து டைய வாசல்களையும் திறந்து விடுகின்றான்.
صحيح مسلم (2ஃ 758)
عَنِ ابْنِ أَبِي أَنَسٍ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الرَّحْمَةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ»
ரமழான் வந்து விட்டால் ரஹ்மத்துடைய வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) (நூல்: முஸ்லிம்)
சுவனத்தை நெருங்குவதற்காக சுவனத்தின் அத்தனை கதவு களையும் திறந்து நரகத்தின் கதவுகளையும் அல்லாஹ் மூடிவிடுகின்றான் .
صحيح البخاري (3ஃ 25)
سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِّحَتْ أَبْوَابُ السَّمَاءِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ
ரமழான் மாதம் வந்து விட்டால் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான் களுக்கு விலங்கிடப் படுகின்றன. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி)
புகாரியில் வரக்கூடிய இன்னுமொரு அறிவிப்பில் ரமழான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக் கப்படுகின்றன எனநபி(ஸல்) கூறினார்கள்.
அதுமட்டுமன்றி தன்னுடைய அடியார்கள் இந்த நோன் பின் மூலம் நன்மையின் பால்விரைந்து செல்ல வேண்டும் நரகவிடுதலைப் பெற வேண்டும் என்பதற்காக விஷேடமான அறிவிப்பொன்றையும் அல்லாஹ் விடுக்கச் செய்கின்றான்.
நன்மையினை தேடுகின்றவரே நன்மையான காரியங்களை மேற் கொள்வீராக. தீமை புரிகின்றவே தீமைய விட்டு விடுவீராக. அல்லாஹ்வினால் நரகவிடுதலை செய்யப் படுகின்றவர்களும் (இந்த மாதத்தில்) இருக்கின்றார்கள். இந்த அழைப்பு ரமழானின் ஒவ்வொரு நாள் இரவிலும் விடுக்கப் படு கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி இப்னுமாஜா மற்றும் திர்மிதியில் பதிவு செய் யப்பட்டுள்ளது.
நோன்பாளிக்கென இத்தனை சிறப்புக்களை வழங்கிய அல்லாஹ் பிரத்தியேகமான சுவன மொன்றையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளான்.
صحيح البخاري (3ஃ 25)
عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ' إِنَّ فِي الجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ القِيَامَةِ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، يُقَالُ: أَيْنَ الصَّائِمُونَ؟ فَيَقُومُونَ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ '
சுவனத்தில் ஒரு வாயில் உண்டு. அதற்கு ரய்யான் என கூறப்படும். மறுமையில் நோன்பாளிகளைத் தவிர எவரும் அதில் நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என அழைக்கப்படும். நோன்பாளிகள் அவ்வாயிலினூடாக நுழைந்தவுடன் அவ்வாயல் மூடப்படும். அதன் பின் எவரும் நுழைய முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல்(ரலி) நூல்: புகாரி)
தன்னுடைய அடியார்கள் மீது அன்பும் அருளும் கொண்ட அல்லாஹ் அத்தனை பாக்கியங்க ளையும் இந்த நோன்பின் மூலம் வழங்கி யுள்ளான்.
அல்லாஹ்விடமிருந்து நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்கும் போது அதற்கும் நினைத்துப்பார்க்க முடியாத நன்மைகளை வழங்குகிறான்.
صحيح البخاري (3ஃ 26)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
யார் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி)
ரமழான் பாவங்களை சுட்டெரிக்கும் காலம். நன்மைகளை சுருட்டிக் கொள்ளும் பருவம். எனவே இந்த நோன்பையும் அதன் பாக்கியத்தையும் அடைந்து கொள்ள எம்மனை வருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.