×
New!

Bayan Al Islam Encyclopedia Mobile Application

Get it now!

பெரிய ஷிர்க் இணைவைப்பு (தமிழ்)

ஆக்கம்: முஹம்மத் இம்தியாஸ்

Description

1.படைப்புகளை அல்லாஹ்வுக்கு சரிசமமாக ஆக்குவது அல்லது எண்ணுவது, அதனடிப்படையில் செயற்படுவது, 2.அல்லாஹ்வுக்குரிய பண்புகள் அதிகாரங்கள் ஏனையவர் களுக்கும் உண்டு என்று நம்புவது

Download Book

    ஷிர்க் (இணைவைப்பும்) அதன் வகைகளும்

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப்

    2014 - 1435

    الشرك الأكبر

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    ஷிர்க் (இணைவைப்பும்) அதன் வகைகளும்

    M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி

    ஷிர்க் என்றால் அல்லாஹ் அல்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு சரிசமமாக ஆக்குவது அல்லது எண்ணுவது அதனடிப்படையில் செயற்படுவது

    படைப்புக்களை தெய்வீகத் தன்மைகளில் படைப்பாளனாகிய அல்லாஹ்விற்கு ஒப்பாக்கு

    வது;

    அல்லாஹ்வுக்குரிய பண்புகள் அதிகாரங்கள் ஏனையவர்களுக்கும் உண்டு என்று நம்புவது என்பது இணைவைப்பாகும்.

    அல்லாஹ்வுக்கு இணைவைப்பதற்கு அல்லாஹ் எந்த வொரு ஆதாரத்தையும் மனிதர்களுக்கு இறக்க வில்லை. மாறாக இறைத்தூதர்கள் மூலமாக இணைவைப்பை வன்மையாக கண்டித்திருக்கிறான்.

    அல்லாஹ் கூறுகிறான்.

    وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ أَفَلَا تَتَّقُونَ

    ஆத் சமூகத்திடம் அவர்களது சகோதரர் ஹூதை (தூதராக அனுப்பினோம்). அவர் எனது சமூகத்தினரே நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனையன்றி வணங்கப்படத் தகுதியானவன் உங்களுக்கில்லை. நீங்கள் அவனை அஞ்சி நடக்க வேண்டாமா? என்று கூறினார்.(7:65)

    قَالُوا أَجِئْتَنَا لِنَعْبُدَ اللَّهَ وَحْدَهُ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُمْ مِنْ رَبِّكُمْ رِجْسٌ وَغَضَبٌ أَتُجَادِلُونَنِي فِي أَسْمَاءٍ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا نَزَّلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ فَانْتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ

    அதற்கவர்கள் எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் விட்டு விட்டு அல்லாஹ் ஒருவனை மட்டும் நாம் வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எம்மிடம் வந்துள்ளீரா?நீர் உண்மையாளர் களில் உள்ளவராக இருப்பின் எங்களுக்கு வாக்களிப்பதை எம்மிடம் கொண்டுவாரும் என்று கூறினர்.

    அதற்கவர் உங்கள் இரட்சகனிடமிருந்து வேதனையும் கோபமும் நிச்சயமாக உங்கள் மீது ஏற்பட்டுவிட்டன. நீங்களும் உங்களுடைய மூதாதையர்களும் சூட்டிக் கொண்ட பெயர்கள் விஷயத்திலா நீங்கள் என்னுடன் தர்க்கிக்கிறீர் களா? அதற்கான எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கிவைக்கவில்லை. (அல்லாஹ் வுடைய வேதனையை) நீங்கள் எதிர்பாருங்கள் நிச்சயமாக நாமும் உங்களுடன் எதிர்பார்ப்பவர் களில் உள்ளவனாவேன் என்று கூறினார். (7:70-71)

    مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

    அவனையன்றி நீங்கள் வணங்குபவை நீங்களும் உங்கள் மூதாதையர்களும் சூட்டிக் கொண்ட பெயர்களேயன்றி வேறில்லை. இதற்கு அல்லாஹ் எந்தவொரு ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. அதிகாரம் அல்லாஹ் வுக்கே உரியது. அவனையன்றி வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரிய மார்க்கமாகும். எனினும் மனிதர்களில் அதிக மானோர் அறிந்து கொள்ள மாட்டார்கள். (12:40)

    إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنْ يَتَّبِعُونَ إِلَّا

    الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنْفُسُ وَلَقَدْ جَاءَهُمْ مِنْ رَبِّهِمُ الْهُدَى

    இவை வெறும் பெயர்களேயன்றி வேறில்லை. நீங்களும் உங்கள் மூதாதையர்களுமே அவற்றை சூட்டிக் கொண்டீர்கள். அதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. அவர்கள் வெறும் யூகத்தையும் தங்கள் மனம் விரும்புவதையுமே பின்பற்று கிறார்கள். நிச்சயமாக அவர்களது இரட்சகனிட மிருந்து நேர்வழி அவர்களிடம் வந்தே இருக்கின்றது. (53:23)

    وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِنْدَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ المؤمنون: 117

    யார் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை அழைக்கின்றானோ அதற்கு அவனுக்கு எவ்வித ஆதாரமுமில்லை. அவனது விசாரணை அவனது இரட்சகனிடமே இருக்கின்றது. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள். (23:117)

    மக்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கிய ஏதும் பொருளையோ அல்லது கடவுளையோ அல்லது மரணித்த நல்லவரையோ அல்லது சிலையையோ அல்லாஹ் விரும்பி ஏற்பதாக தனது தூதர்கள் மூலம் அறிவிப்பு கொடுத்திருந்தால் அப்போது அதனை வணங்கலாம்.

    · உசைர்(அலை) அவர்களை அல்லாஹ்வின் மகன் என யூதர்கள் கூறிய போது;

    · ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ்வின் மகன் என கிறிஸ்தவர்கள் கூறிய போது;

    · லாத், மனாத், மற்றும் உஸ்ஸா ஆகிய நல்லமனிதர்களை மக்கத்து மக்கள் சிலைகளாக வடித்து வணங்கிய போது;

    · வத், சுவா, யகூத், யஊக் மற்றும் நஸ்ர் ஆகிய நல்லமனிதர்களை (சாலிஹான வர்களை) நூஹ் நபியின் சமுதாயத்தவர்கள் வணங்கிய போது அல்லாஹ் அவைகளை அங்கீகரிக்க வில்லை.

    நல்ல மனிதர்களோ நல்ல பொருட்களோ வணக்கங்களுக்கு தகுதியானவைகளல்ல என்பதைத் தான் அல்லாஹ் தன்னுடைய தூதர் கள் மூலமாக எடுத்துச் சொன்னான்.

    ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்கள் தங்கள் சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் நல்லது என பட்டவைகளை வணங்கத் துவங்கியதால் தான் இறைகோட்பாடு (தவ்ஹீத்) மாசுப்பட்டு இணைவைப்பு தோன்றலாயிற்று.

    அல்லாஹ்வுக்கு இணையாக ஒன்றை ஆக்குவ தென்றால் அல்லது கடவுளாக்குவதென்றால் அதற்கு அல்லாஹ்வின் அனுமதியும் திருப்தியும் கிடைக்கவேண்டும் என்பதை இணைவைப்பா ளர்கள் புரிந்து கொள்ள தவறிவிடுகிறார்கள்.

    قُلْ إِنْ كَانَ لِلرَّحْمَنِ وَلَدٌ فَأَنَا أَوَّلُ الْعَابِدِينَ سُبْحَانَ رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُونَ

    அல்லாஹ்வுக்கு பிள்ளை இருக்குமானால் (அதை) வணங்குபவர்களில்முதலாமானவன் நான் தான் என்று நபியே நீர் கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகனும் அர்ஷின் இரட்சகனுமாவன் (அல்லாஹ்) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் தூய்மை யானவன். (43:81.82)

    வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்கு இணையாக வணங்கப்படக்கூடிய ஒன்றும் இல்லை என்பதை அல்லாஹ் மிகத் தெளிவாக அறிவிக்கிறான்.

    எனவே ஷிர்க் செய்கின்றவர் ஆதாரமில்லாத கற்பனையாக வடித்து கொள்கின்ற காரியத்தை யே வணக்கமாக நினைத்து செய்கிறார்.

    إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ } [لقمان: 13

    நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அனியாய மாகும்.(31:13)

    அனியாயம் என்றால் ஒரு பெருளை அல்லது ஒரு விடயத்தை அதற்குரிய இடத்தில் வைக்கா மல் வேறு இடங்களில் வைப்பதாகும். அதன்படி அல்லாஹ் அல்லா தோரை வணங்கக் கூடியவன் வணக்கத்தை அதற்குரிய இடத்தில் வைக்காமல் வேறு இடத்தில் வைக்கிறான்.இது மிகப் பெரிய அநியாயமாகும்.

    தனக்குரிய இடம் அல்லது அந்தஸ்து உரிய முறையில் கிடைக்கப் பெற வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்கின்றான். எந்த சந்தர்ப்பத்திலும் தனது அந்தஸ்தை பாதிக்காத வகையில் காரியமாற்றுகிறான். அந்தஸ்து பாழ் படுத்துவதை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க தயாராகவுமில்லை.

    தனது மனைவி தனக்கு மட்டும் சொந்தமானவள் என்று கணவன் உரிமை கொண்டாடுகிறான். அந்த சொந்தத்தை பங்கு போட்டு கொடுக்க அவன் தயாராக இல்லை.

    அந்த சொந்தத்தை மனைவி வேறொருவ னுக்கு பங்கு போட்டால் கணவன் கொதித் தெழுகின்றான். மனைவி தனக்கு துரோக மிழைத்ததாக கர்ஜிக்கிறான். சில நேரம் கொலை கூட செய்கின்றான்.

    அது போல் தனது பிள்ளை தன்னை தான் தகப்பன் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அந்த உரிமையை பிள்ளை வேறொருவனுக்கு விட்டு கொடுப்பதை கண்டிக்கின்றான்.

    இவ்வாறாக உரிமை விடயத்தில் மனிதன் ரோஷத்துடன் நீதி, அநீதி, அனியாயம், ஆகியவற்றை கண்டறிந்து செயற்படுகிறான் என்றால் படைத்த ரப்புல் ஆலமீன் தன்னுடைய இறைவல்லமையை மனிதர்களுக்கிடையில் பங்கு போடுவதை விரும்புவானா? தனக்குரிய வணக்க வழிபாடுகளை இன்னுமாருவருக்கு செய்வதை அங்கீகரிப்பான?

    அல்லாஹ்வுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுக்காது அனியாயம் செய்யும் போது வானம் பூமி கூட அதிர்ந்து விடுகின்றது.

    وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا لَقَدْ جِئْتُمْ شَيْئًا إِدًّا تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْأَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا أَنْ دَعَوْا لِلرَّحْمَنِ وَلَدًا وَمَا يَنْبَغِي لِلرَّحْمَنِ أَنْ يَتَّخِذَ وَلَدًا إِنْ كُلُّ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَنِ عَبْدًا لَقَدْ أَحْصَاهُمْ وَعَدَّهُمْ عَدًّا وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا } [مريم: 88 - 95

    அர்ரஹ்மான் தனக்கென்று ஒரு பிள்ளையை எடுத்துக் கொண்டான் என அவர்கள் கூறுகி றார்கள். நிச்சயமாக நீங்கள் பெரும் அபாண்டத்தையே கொண்டுவந்து விட்டீர்கள். இதனால் வானங்கள் இடிந்து சிதறுண்டு விழப் பார்க்கின்றன. அர்ரஹ்மானுக்கு பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிட்டதே (இதற்குக் காரணம்.)

    ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள அர் ரஹ்மானுக்கு எந்த அவசியமுமில்லை. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு வரும் அர்ரஹ்மானிடம் அடிமையாகவே வருவர். நிச்சயமாக அவன் அவர்களை மதிப்பிட்டும் அவர்களை சரியாக கணக்கிட்டும் வைத்துள்ளான். அவர்கள் அனைவரும் மறுமை நாளில் அவனிடம் தன்னந்தனியாக வருவார்கள். (19:88- 95)

    சுலைமான் நபியின் காலத்தில் ஹூத்ஹூத் எனும் பறவை அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு ஆதங்கத் துடன் வந்து முறைப்பாடு செய்த சம்பவத்தை அல்லாஹ் பினவருமாறு குறிப்பிடுகிறான்.

    فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ

    إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ وَجَدْتُهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِنْ دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

    சிறிது நேரம் தாமதித்த அது (ஹூத்ஹூத் பறவை) அவரிடம் வந்து நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து ஸபஃ எனும் பிரதேசத்திலிருந்து உறுதியான ஒரு செய்தி யுடன் உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறியது.

    அவர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் தேவை யான அனைத்து பொருட்களும் வழங்கப் பட்டுள்ளாள். மேலும் அவளுக்கு மகத்தான தொரு சிம்மாசனமும் உள்ளது. அல்லாஹ்வை விட்டு விட்டு சூரியனை சுஜூது செய்பவளாக அவளையும் அவளது கூட்டத்தரையும் கண்டேன். ஷைத்தான் அவர்களது செயல் களை அவர்களுக்கு அலங்கரித்து காட்டி அவர்களை நேர்வழியை விட்டும் தடுத்து விட்டான். எனவே அவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள்.

    வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்ப வற்றை வெளிப் படுத்துகின்ற மேலும் நீங்கள் மறைப்பவற்றையும் பகிரங்கப்படுத்துப வற்றை யும் அறிகின்ற அல்லாஹ்வுக்கு அவர்கள் சுஜூது செய்ய வேண்டாமா? உண்மையாக வணங்கப்படத்தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறுயாரு மில்லை. அவன் மகத்தான அர்ஷின் இரட்சகனா வான்.(19:22-26)

    பறவையின் இந்த முறைப்பாட்டை கேட்டதும் சுலைமான் நபி அந்த அரசிக்கு இஸ்லாத்தைப் பற்றி எத்திவைக்கும் தூதை மேற்கொள்கிறார் கள். அந்த பறவையிடமே அந்த தூதை எழுதி கொடுத்தும் அனுப்புகிறார்கள். அதன் பின் அந்த அரசியும இஸ்லாத்திற்கு வருகிறாள் என்ற செய்தியை அல்லாஹ் இந்த தொடர் வசனங்களிலே குறிப்பிடுகிறான்.

    ஒரு பறவை, அல்லாஹ் ஒருவன் தான், அவனுக்கு இணையாக துணையாக எதுவும் வணங்கப்படமுடியாது என்பதை புரிந்திருந்து விளங்கியிருந்து இணைவைக்கும் கூட்டத்தா ரை நேர்வழிப்படுத்த எடுத்த முயற்ச்சியை மனித சமூகத்திற்கு அல்லாஹ் எடுத்து காட்டுகிறான். இந்த பறவைக்கு தெரிந்த நீதி அனியாயம் கூட மனிதன் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா?

    அல்லாஹ்வுடைய உரிமையில் இன்னமொ ருவரை கூட்டாக்கும் அனியாயத்தை செய்பவ ருக்கு மன்னிப்பு இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான்..

    إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا

    நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான் இதல்லாத மற்ற பாவங்களை தான் நாடி யோருக்கு மன்னிப்பான். எவன் அல்லாஹ் வுக்கு இணைவைக்கின்றரோ அவன் நிச்சயமாக பெரும் பாவத்தையே இட்டுக் கட்டியவராவார். (4:48)

    இணைவைப்போர் தாம் செய்யும் இந்த மகா பாதகத்தை உணர்ந்து மரணத்திற்கு முன் -மரணம் தொண்டைக் குழியை அடைவதற்கு முன் - பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் மன்னிப்பான்.

    மன்னிப்புக் கோராமல் தாம் செய்யும் இணை வைப்பில் மரணிப்பாரானால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை தடைசெய்கின்றான். நிரந்தர நரகவாதியாக ஆக்குகிறான்.

    إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ المائدة: 72

    நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது நிச்சயமாக சுவனத்தை அல்லாஹ் தடுத்து விட்டான். அவர் தங்குமிடம் நரகம் தான். மேலும் அனியாயக் காரர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை. (5:72)

    இணைவைப்பை செய்து கொண்டு நல்ல றங்கள் செய்தாலும் அந்த நல்லறங்களுக்கு அல்லாஹ் எந்த கூலியையும் கொடுக்கப் போதில்லை. எல்லா நன்மைகளை அழித்து விடுவான்.

    ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ الأنعام: 88

    இன்னும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டி ருந்த நன்மையானவைகள் யாவும் அவர்களை விட்டும் அழிந்து விடும். 6:88

    وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

    (நபியே) நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்கள் அழிந்து விடும். நிச்சய மாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகி விடுவீர் என உமக்கும் உமக்கு முன்னிருந்த வர்களுக்கும் (வஹி) அறிவிக்கப்பட்டது. (39:65)

    ஷிரக்கை இருவகையாக பிரித்து நோக்குவர்.

    1.பெரிய ஷிர்க்(இணைவைப்பு)

    2.சிறிய ஷிர்க் (இணைவைப்பு)

    பெரிய இணைவைப்பு:

    ருபூபியத்திலும் வணக்க வழிபாடுகளிலும் அல்லாஹ்வுக்கு நிகராக ஒன்றை ஆக்குவ தாகும்.

    அதாவது அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் ஒன்றை அல்லாஹ் அல்லாத படைப்புக்களுக்கு செய்வதாகும்.

    அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து பிரார்த்தித்தல்.

    அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்சை செய்தல்

    அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்து பலியிடல்

    அல்லாஹ் அல்லாதவர்களிடம் பாதுகாவல் தேடல்.

    அல்லாஹ்வை விட்டு விட்டு சிலைகளுக்கும் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் சாஸ்டாங்கம் செய்தல்.

    அல்லாஹ்வுக்கு குழந்தை மனைவி மக்கள் இருப்பதாக கூறுதல்,அதன் மூலமாக அல்லாஹ்விடம் நெருக்கத்தை தேடுதல் என்பன மாபெரும் பாவமாகும்.

    அல்லாஹ் கூறுகிறான்.

    وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ يونس: 18

    அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையை யோ அவர்களுக்கு நன்மையையோ செய்ய சக்தியற்றவர்களை அவர்கள் வணங்குகிறார் கள். மேலும் இவர்கள் அல்லாஹ்விடம் எமக்காக பரிந்துரை செய்வோர் என்றும் கூறு கின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் அறியாதவை (இருப்பதாக நினைத்து அவை) பற்றி நீங்கள் அவனுக்கு அறிவித்து கொடுக்கின்றீர்களா? அவன் தூய்மையானவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மேலானவ னாகிவிட்டான். என்று நபியே நீர் கூறுவீராக. (10:18)

    أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ الزمر: 3

    அறிந்து கொள்ளுங்கள். தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியதாகும். எவர்கள் அவனையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் இவர்கள் அல்லாஹ்விடம் எமக்கு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்திவைப்பதற்காகவே நாம் இவர்களை வணங்குகின்றோம் எனக்கூறுகின்றனர். அவர் கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் களோ அதில் அவர்களுக்கிடையே நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் பொய்யனையும் நிராகரிப்பவனை யும் நேர்வழியில் செலுத்தமாட்டான்.(39:3)

    வணக்க வழிபாடுகள் தூய்மையான எண்ணத்துடன் அல்லாஹ்வுக்கு வணக்கம் செலுத்துவதே மார்க்கத்தின் தூய்மையை நிலை நாட்டுவதாக இருக்கும் என்பதை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

    அல்லாஹ்வுக்கு மட்டும் வணக்கம் செலுத்தாது அவனுடன் வேறொருவரை கூட்டு சேர்ப்பதே (இணைவைப்பதே) இந்த மார்க்கத்தின் தூய்மை கெட்டு விடுவதாக அமைந்து விடுகிறது.

    அல்லாஹ் மனிதனையும் உலகிலுள்ள அத்தனையும் படைத்திருக்கும் போது அந்த ஆற்றலுக்கு எந்தவகையிலும் தகுதியில்லாத ஒன்றை இணையாக்கு மிகப் பெரிய பாவமாகும்.

    صحيح البخاري (6ஃ 18)

    عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ». قُلْتُ: إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ». قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ»

    நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது’ என்று கூறினார்கள். நான், ‘நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்’ என்று சொல்லிவிட்டு, ‘பிறகு எது?’ என்று கேட்டேன். உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது’ என்று கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஹூத் (ரலி)

    صحيح البخاري (9ஃ 114)

    عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مُعَاذُ أَتَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى العِبَادِ؟»، قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا، أَتَدْرِي مَا حَقُّهُمْ عَلَيْهِ؟»، قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «أَنْ لاَ يُعَذِّبَهُمْ

    நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவர்கள் அவனையே வணங்கு வதும் அவனுக்கு எதையும் இணை வைக்காம லிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, நான் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்’ என்று பதிலளித்தார்கள்.

    அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல்(ரலி)

    அல்லாஹ்வுக்கு எந்த வகையிலும் இணை வைக்காமல் வாழ்வதே ஒரு அடியானின் கடமையாகும். அந்த அடியானை சுவனம் நுழை விப்பதும் அல்லாஹ்வின் மீதும் கடமை யாகும்.

    எனவே அல்லாஹ் தன் கடமையை நிறை வேற்றுவதற்கு அடியான் தன் கடமையை நிறை வேற்றவேண்டும்.

    உங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

    معلومات المادة باللغة العربية