Description
அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் பொய்ப்பித்த நிலையில் அல்லது பொய்ப்பிக் காத நிலையில் ஈமான் கொள்ளாமல் இருப்பதே குப்ராகும்
இறை நிராகரிப்பு
(குப்ரு பற்றிய விளக்கம்)
] Tamil – தமிழ் –[ تاميلي
ஷெய்க் சாலிஹ் அல் பவுஸான்
தமிழில்
M.S.M.இம்தியாஸ் யூசுப்
2014 - 1435
الكفر معناه وأقسامه
« باللغة التاميلية »
الشيخ صالح بن فوزان الفوزان
محمد إمتياز يوسف
2014 - 1435
இறை நிராகரிப்பு
(குப்ரு பற்றிய விளக்கம்)
அரபு: கலாநிதி சாலிஹ் அல் பவ்ஸான்
தமிழில்: M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி
குப்ரு என்பது மறைத்தல் மூடுதல் என்ற பொருளில் அரபு பாஷையில் பயன்படுத்தப் படுகிறது. ஈமான் எனும் சொல்லுக்கு எதிர்பதமே குப்ர் ஆகும்.
அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் பொய்ப்பித்த நிலையில் அல்லது பொய்ப்பிக் காத நிலையில் ஈமான் கொள்ளாமல் இருப்பதே குப்ராகும். சந்தேகம், பொறாமை, பெருமை அல்லது மமதை காரணமாக இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு ஈமான் கொள்ள மறுத்தலும் குப்ராகும். மேலும் இறைத்தூதர்களை உண்மை யென ஏற்றுக் கொண்டு பொறாமையின் காரணமாக விசுவாசம் கொள்ளாது நிராகரிப் பதும் குப்ராகும். (நூல்:மஜ்மூஉல் பதாவா ஷைய்குல் இஸ்லாம்.)
குப்ரின் வகைகள்- இருவகைப்படும்.
1. குப்ர் அக்பர். பெரும் நிராகரிப்பு:
இந்நிராகிப்பு மார்க்கத்திலிருந்து வெளியேற்றி விடும்; இது ஐந்து பிரிவாகும்.
முதலாவது பிரிவு:.
பொய்பித்து நிராகரிப்பதாகும்.
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَاءَهُ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْكَافِرِينَ
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது தன்னிடம் வந்த சத்தியத்தை பொய்பித்தவனை விட மிகப் பெரும் அனியாயக்காரன் யார்? நிராகரிப் பாளர்களுக்கான தங்குமிடம் நரகத்தில் இல்லையா? (29:68)
இரண்டாம் பிரிவு:
உண்மையென புரிந்து கர்வம், ஆணவம் காரணமாக நிராகரிப்பது.
{وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ} البقرة: 34
பின்னர் நாம் வானவர்களிடம் சுஜூது செய்யுங்கள் என கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் சுஜூது செய்தனர். அவன் மறுத்தான் பெருமையும் கொண்டான். நிராகரிப்பாளர்களில் ஆகிவிட்டான்.(2:34)
மூன்றாவது பிரிவு:
சந்தேகத்தின் காரணமாக நிராகிரப்பது.
وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَنْ تَبِيدَ هَذِهِ أَبَدًا (35) وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُدِدْتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِنْهَا مُنْقَلَبًا (36) قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا (37) لَكِنَّا هُوَ اللَّهُ رَبِّي وَلَا أُشْرِكُ بِرَبِّي أَحَدًا }
தனக்குத்தானே அவன் அனியாயம் செய்த நிலையில் தனது தோட்டத்தில் நுழைந்து இது (இத்தோட்டம்) ஒரு போதும் அழியும் என்று நான் நினைக்க வில்லை என்று கூறினான். மறுமை நிகழும் என்றும் நான் நினைக்க வில்லை. எனது இரட்சகனிடம் நான் மீட்டப் பட்டாலும் இதைவிட சிறந்த மீளுமிடத்தை நான் நிச்சயமாக பெறு வேன் என்று கூறினான். நம்பிக்கையாளரான அவனது தோழன் இவனுடன் உரையாடிக் கொண்டிருக் கும் போது உன்னை மண்ணாலும், பின்னர் இந்திரியத்துளியாலும் படைத்து, பின்னர் உன்னை மனிதனாக அமைத்தவனையா நீ நிராகரிக்கின்றாய்? எனினும் அல்லாஹ்வே எனது இரட்சகன், எனது இரட்சகனுக்கு ஒருவனையும் நான் இணையாக்க மாட்டேன் என இவனிடம் கூறினான். (18:35-38)
நான்காவது பிரிவு:
புறக்கணித்து நிராகரிப்பது.
{وَالَّذِينَ كَفَرُوا عَمَّا أُنْذِرُوا مُعْرِضُونَ
எனினும் நிராகரிப்பவர்களோ எச்சரிக்கை செய்யப்படுவதை புறக்கனிப்பவர்களாகவே இருக்கின்றனர்.(46:3)
ஐந்தாவது பிரிவு:
நயவஞ்சகம் காரணமாக நிராகரிப்பது.
{ذَلِكَ بِأَنَّهُمْ آمَنُوا ثُمَّ كَفَرُوا فَطُبِعَ عَلَى قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُون
நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் அவர்கள் நிராகரித்ததே இதற்குக் காரணமாகும். எனவே அவர்களது உள்ளங்கள் மீது முத்திரை குத்தப்பட்டு விட்டது. ஆகவே அவர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார் கள்.(63:3)
2. குப்ரு அஸ்கர் . சிறிய நிராகரிப்பு.
இது மார்க்கத்திலிருந்து வெளியேற்றாது. இது அமல் சார்ந்த குப்ராகும். அல்குர்ஆனும் சுன்னாவும் குப்ரு என குறிப்பிடும் பாவங்களை இது குறிப்பிடும். குப்ரு அக்பர் என்ற நிலைக்கு இது இட்டுச் செல்லாது.
உதாரணமாக அல்லாஹ்வின் அருட் கொடைகளை நிரா கரிப்பது
அல்லாஹ் கூறுகிறான்:
{وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ}
பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருந்த கிராமத்தை அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். அக்கிராமத்திற்கான ஆகாரம் அனைத்து இடங்களிலிருந்தும் தாராளமாக அதனிடம் வந்து கொண்டிக்கிறது. பின்னர் அக்கிராமம் அல்லாஹ்வின் அருட் கொடைகளை நிராகரித் தது. எனவே அக்கிராமத்தவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரண மாக அல்லாஹ் அக்கிராமத்துக்கு பசி மற்றும் பயம் எனும் ஆடையை சுவைக்கச் செய்தான். (16:112)
ஒரு முஸ்லிமை கொலை செய்வது
صحيح مسلم (1ஃ 81)
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம், அவனை கொலை செய்வது குப்ராகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் முஸ்லிம்.
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது
صحيح البخاري (1ஃ 35)
عَنْ جَرِيرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ فِي حَجَّةِ الوَدَاعِ: «اسْتَنْصِتِ النَّاسَ» فَقَالَ: «لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ
உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்துக்களை வெட்டுவது கொண்டு காபிர்களாகி விடாதீர் கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜரீர் (ரலி) நூல் புகாரி முஸ்லிம்)
அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்வது
سنن الترمذي ت شاكر (4ஃ 110)
ابْنُ عُمَرَ: لَا يُحْلَفُ بِغَيْرِ اللَّهِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ
அல்லாஹ் அல்லாத வற்றின் மீது சத்தியம் செய்பவன் குப்ரு செய்து விட்டான், இணைவைத்து விட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர்(ரலி) (நூல் திர்மிதி)
(இத்தகைய) பெரும் பாவங்களை செய்யக் கூடியவர்களை முஃமின்கள் என்றே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى}
நம்பிக்கை கொண்டோரே கொலை செய்யப்பட்டோர் விஷயத்தில் பழிவாங்குவது உங்கள் மீது விதியாக்கப்பட் டுள்ளது.(2:178)
சகோதர முஸ்லிமை கொலை செய்த கொலை யாளியை முஸ்லிம்களின் வட்டத்திலிருந்து அகற்றி விடாமல் அவனை கொலை செய்யப்பட்டவனின் சகோதரன் என்று கூறுகிறான்.
{فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ }
கொலை செய்தவனுக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனின் (இஸ்லாமியச்) சகோதரன் மூலம் அவனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.(2:178)
{وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا}
நம்பிக்கையாளர்களில் இருசாரார் தங்களுக் கிடையில் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங் கள்(49:9)
(நூல்: ஷரஹ் தஹாவி பக்கம் 361)
குப்ரு அக்பர் மற்றும் குப்ரு அஸ்கருக்குமிடையிலுள்ள வேறுபாடுகள்
இதனை பின்வருமாறு சுருக்கமாக கூறலாம்
1.குப்ரு அக்பர் செய்யக்கூடியவனை மார்க்கத்திலிருந்து வெளியேற்றி விடுவதுடன் அவனது எல்லா நன்மைகளும் அழிந்து விடும்.
குப்ரு அஸ்கர் செய்பவன் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடாதவனாகவும் அவனது நன்மைகைளயும் அழித்து விடாததாகவும் இருக்கும். அவனது செயலுக்கேற்ப நன்மைகள் குறைந்து போகக் கூடியதாக இருக்கும். எனினும் இந்த நிலையை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறு அவன் எச்சரிக்கைக்கு உட்பட்டவனாக இருப்பான்.
2.குப்ரு அக்பர் செய்யக்கூடியவன் நிரந்தர நரகவாதியாக இருப்பான். குப்ரு அஸ்கர் செய்பவன் நரகத்தில் நுழைந்தாலும் நிரந்தர மாக இருக்கமாட்டான். அல்லாஹ் அவனது குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடியவனாக இருப்பான்.
3. குப்ரு அக்பர் செய்யக்கூடியவனின் இரத்தமும் சொத்தும் ஹலாலானது. குப்ரு அஸ்கர் செய்பவனின் நிலை அப்படியானதல்ல.
4. குப்ரு அக்பர் செய்யக்கூடியவனுக்கும் முஃமின்களுக்கு மிடையில் குரோதம் காணப் படும். முஃமின்கள் அவர்களை நேசிப்பதோ பாகாவலராக ஏற்பதோ கூடாது. அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே.
ஆனால் குப்ரு அஸ்கரை செய்பவனை ஒரேயடி யாக பகைப்பது கூடாது. அவன் அவனது ஈமானுக்கேற்ப நேசிப்பதோ அவனது பாவங்களுக்கேற்ப கோபிக்கவோ படுவான்.