×
New!

Bayan Al Islam Encyclopedia Mobile Application

Get it now!

உயிர் வாழும் அவ்லியாக்களும் உதவி தேடும் முஸ்லிம்களும் (தமிழ்)

ஆக்கம்: முஹம்மத் இம்தியாஸ்

Description

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154) அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.

Download Book

    உயிர் வாழும் அவ்லியாக்களும் உதவி தேடும் முஸ்லிம்களும்

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப்

    2014 - 1435

    أولياء الله الأحياء

    و توسل المسلمين بهم

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    உயிர் வாழும் அவ்லியாக்களும் உதவி தேடும் முஸ்லிம்களும்

    இறந்தவர்கள் செவியேற்பார்களா?

    M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி

    وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ

    “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154)

    மரணித்த நல்லடியார்கள், மகான்கள் என்பவர் களிடத்தில் உதவி தேடலாம் அவர்கள் கப்ருக் குள்ளே உயிரோடு இருக்கிறார்கள். பிராத்தனைகளுக்கு பதிலளிப்பார்கள் என்று மேலேயுள்ள வசனத்தை ஆதாரமாகக் காட்டி ஒரு சாரார் வாதம் புரிகிறார்கள்.

    மேலும் மகான்களின் பெயரால் கப்ருகளை கட்டி, புனிதப் படுத்தி, பச்சைபோர்வை போர்த்தி, ஊதுபத்தி பற்ற வைத்து, விளக்கேற்றி, எண்ணெய் ஊற்றி, அபிசேகம் பண்ணி, வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    தங்களது கஷ்ட நஷ்டங்களை முறையிடுவதற்கு அந்த கபுரடியில் ஒன்று கூடி தங்களது வேண்டுதல்களை முன் வைக்கிறார்கள்.

    அதுமட்டுமன்றி மாற்று மதத்தவர்களும் அங்கே வந்து பூஜிக்கும் காரியத்திலும் எண்ணெய் அபிஷேகத்திலும் அழுது பிரார்த்திக்கும் காரியத்திலும் ஈடுபடுகிறார்கள். இவர்களுக் காக யாஸீன் ஓதி துஆ பிரார்த்தனையும் செய் கிறார்கள்

    இவர்களுடைய நம்பிக்கையின்படி முஸ்லி மல்லாதவர்களுக்கும் யாஸீன் ஓதி அவ்லியா விடம் உதவி தேட முடியும். அந்த அவ்லியா வுக்கு மதம் அல்லது மார்க்கம் முக்கியமில்லை என்பதாகும்.

    திருமணம் முடித்த புதுத் தம்பதியினர், புதிதாக தொழிலை ஆரம்பிப்பவர்கள், வெளிநாடுக்கு பயணம் செல்பவர்கள் தர்கா (கப்ருக்)கு வந்து நல்லாசி பெற்று செல்கிறார்கள்.

    இத்தகைய செயற்பாடுகளுக்கும் நம்பிக்கை களுக்கும் இவ் வசனம் சான்றாக அமைந்துள் ளதாக அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். இது பல காரணங்களால் தவறாகும்.

    இவ்வசனம் நல்லடியார்கள் மற்றும் மகான்களைக் கொண்டாடவோ, அவர்களுக்கு வழிபாடு நடத்துவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை.

    ஜிஹாதில் பங்கு கொண்டு உயிர் தியாகம் செய்யும் ஒருவரின் அந்தஸ்து, மற்றும் கண்ணியம் பற்றி எடுத்து ரைக்கவே அருளப்பட்டது.

    இவ்வசனம் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித் தோழர்களோ, அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட வர்களை அழைக்கவோ, பிரார்த்திக்கவோ அவர்கள் பெயரில் கப்றுகள் கட்டி பூஜிக்கவோ இல்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    இவ்வசனத்தை கவனமாக ஆய்வு செய்தால் அவர்களின் விளக்கம் தவறு என்பதை அவர்களே விளங்கிக் கொள் வார்கள்.

    2:154 வசனத்தில் யுத்தத்தில் கொல்லப் பட்டோர் உயிருடன் உள்ளனர் என்பதுடன் “எனினும் நீங்கள் உணர மாட் டீர்கள்” என்றும் கூறப்பட்டுள்ளது...

    கொல்லப்பட்டோர் உயிருடன் இருப்பது நாம் உணர்ந்து புரிந்து வைத்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தையே இவ்வசனம் தெரிவிக்கிறது. இக் கருத்தை வலியுறுத்தும் மற்றொரு வசனமும் அல்குர்ஆனில் பின்வருமர்று காணப்படுகிறது.

    وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ

    “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோ ரை இறந்தோர் என்று எண்ணாதீர்கள்.மாறாக அவர்கள் தமது இரட்சகனிடம் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் உணவளிக்கப்படு கின்றனர்.” (3:169)

    فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ

    “அவர்களுக்கு அல்லாஹ் தனது அருட் கொடையிலிருந்து வழங்கியதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்த வர்களாகவும், தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (வீரமரணம் அடையாது உயிருடன்) இருப்ப வர்கள் பற்றி அவர்களுக்கு யாதொரு பயமு மில்லை அவர்கள் துக்கப் படவும் மாட்டார்கள் என்று மகிழ்வுற்றவர்களாகவும் இருக்கின் றார்கள்.

    அல்லாஹ்விடமிருந்துள்ள பாக்கியத்தைக் கொண்டும் அருளைக் கொண்டும் மேலும் நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை யாளர்களின் கூலியை வீணாக்கி விடமாட்டான் என்பதனா லும் அவர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கின் றனர்.” (3:170- 171)

    யுத்தத்தில் பங்கு கொண்டு தங்களது உயிர் களை இழந்தவர்கள் “அல்லாஹ் விடத்தில் உயிருடன் இருக்கின்றார்களே தவிர இந்த உலகத்தில் உயிருடன் இல்லை. இந்த உலகத்தில் நடப்பவைகள் பற்றி அறிந்தவர் களாகவும் இல்லை. என்பதை அல்லாஹ் மிகத் தெளிவாக விளக்கப் படுத்துகிறான்.

    யுத்தத்திற்காக அனைத்தையும் இழந்து கொல்ல ப் பட்ட தனால் அவர்களுக்கு கிடைத்திருக்கும் பாக்கியமோ மகத்தானது. அப்பாக்கியத்ததை மற்றவர்களும் (உலகத்தில் உயிருடன் இருப்ப வர்களும்) அடையவேண்டும் என்று ஆவல் கொண்டோராகவும் உள்ளனர் என்ற செய்தியை அல்லாஹ் தெரிவிக்கின்றான்.

    இவ்வசனம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறிய விளக்கம் முக்கியமானதாகும்.

    صحيح مسلم (3/ 1502)

    عَنْ مَسْرُوقٍ، قَالَ: سَأَلْنَا عَبْدَ اللهِ عَنْ هَذِهِ الْآيَةِ: {وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ} [آل عمران: 169] قَالَ: أَمَا إِنَّا قَدْ سَأَلْنَا عَنْ ذَلِكَ، فَقَالَ: «أَرْوَاحُهُمْ فِي جَوْفِ طَيْرٍ خُضْرٍ، لَهَا قَنَادِيلُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ، تَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شَاءَتْ، ثُمَّ تَأْوِي إِلَى تِلْكَ الْقَنَادِيلِ، فَاطَّلَعَ إِلَيْهِمْ رَبُّهُمُ اطِّلَاعَةً»، فَقَالَ: " هَلْ تَشْتَهُونَ شَيْئًا؟ قَالُوا: أَيَّ شَيْءٍ نَشْتَهِي وَنَحْنُ نَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شِئْنَا، فَفَعَلَ ذَلِكَ بِهِمْ ثَلَاثَ مَرَّاتٍ، فَلَمَّا رَأَوْا أَنَّهُمْ لَنْ يُتْرَكُوا مِنْ أَنْ يُسْأَلُوا، قَالُوا: يَا رَبِّ، نُرِيدُ أَنْ تَرُدَّ أَرْوَاحَنَا فِي أَجْسَادِنَا حَتَّى نُقْتَلَ فِي سَبِيلِكَ مَرَّةً أُخْرَى، فَلَمَّا رَأَى أَنْ لَيْسَ لَهُمْ حَاجَةٌ تُرِكُوا "

    அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த 3:169.வசனம் குறித்து நாம் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டோம் அப்போது நபியவர்கள் உயிர்த் தியாகிகளின் உயிர்கள், பச்சை நிறப் பறவை களின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறையணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப் பட்டுள்ள கண்ணாடி கூண்டுக் குள் வந்து அடையும். சுவர்க்கத்தில் விரும்பிய வாறு சுற்றித்திரியும். அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் தோன்றி உங்களுக்கு ஏதேனும் ஆசையுண்டா? என்று கேட்பான் அதற்கு அவர்கள் நாங்கள் தாம் சுவர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக் கிறோமே (இதற்கு மேல்) நாங்கள் ஆசை படுவ தற்கு என்ன இருக்கிறது? என்று பதிலளிப் பார்கள்.

    இவ்வாறு மூன்று முறை அவர்களிடம் அல்லாஹ் கேட்பான். ஏதாவது அல்லாஹ் விடம் கேட்காமல் விடப்பட மாட்டோம் என்பதைப் புரிந்து கொள்ளும் அவர்கள் எங்கள் இரட்சகனே! எங்கள் உயிர்கள் மறுபடியும் எங்கள் உடல்களில் நீ செலுத்த வேண்டும் என விரும்புகிறோம் என்று கூறுவார்கள். இதை தவிர அவர்களுக்கு வேறு எந்த தேவையும் இல்லை என்று இறைவன் கண்டு கொள்ளும் போது (அவர்கள் இந்த நிலையிலே சுவர்க்கத்தில் இருக்கட்டும் என்று) விடப்படுவார்கள் என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்-)

    உயிர் தியாகிகள் மனித வடிவில் இல்லாமல் கப்றிலும் இல்லாமல் பச்சை நிறப் பறவை களாக சொர்க்கத்தில் சுற்றி வருகிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    ஆகவே அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.

    ஈஸா நபியவர்கள் இன்றுவரை அல்லாஹ் விடத்தில் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் கப்றில் கூட அடக்கம் செய்யப்பட வில்லை. அவர்களிடம் உதவி கேட்டு கஷ்ட நஷ்டங் களை முறையிட்டு உதவி தேடலாமா, பிரார்த்திக்கலாமா என்றால் அது கூடாது என்று முஸ்லிம்கள் விளங்கி வைத்துள்ளார்கள். கிறிஸ்தவ மக்கள் ஈஸா நபியின் மூலம் உதவி தேடுவது வணங்குவது தவறு என்றும் புரிந்து வைத்துள்ளார்கள். அப்படியாயின் ஈஸா நபிக்குச் சமமாக இல்லாத ஏனையவர்களிடம் உதவி தேடுவது எந்த வகையில் என்பதை கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?

    ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைத் தவிர யாரையும் அழைத்து பிரார்தித்து உதவி தேடக் கூடாது,

    அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து, அனைத்துக்கும் ஆற்றல் உள்ளவனான அல்லாஹ்விடம் தான் பிரார்த்திக்க வேண்டும்.

    அல்லாஹ்வைத் தவிர மற்ற அனைத்து படைப்புகளுக்கு மரணமும் அழிவும் இருக்கி றது. அல்லாஹ் மட்டுமே நித்திய ஜீவன் என்றும் உயிருடன் இருப்பவன் எனவே அல்லாஹ்வினால் படைக்கப்பட்டவர்கள் அல்லாஹ்விட மே பிரார்த்திக்க வேண்டும்.

    எந்த மனிதன் மரணித்தாலும் அவருக்கும் உலகிற்குமுள்ள தொடர்பு மரணத்தோடு முடிந்து விடுகிறது. அவர் மகானாக இருந்தாலும், சாதாரண மனிதராக இருந்தாலும் சரியே! சாலிஹான நல்ல மனிதர்களும் சுவனத்தின் பேருகளைப் பெற்று புது மாப்பிள்ளை போல் தூங்கி விடுவர். பாவி களோ தண்டனைப் பெற்றவர்களாக இருப்பர். அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்பும் வரை இருசாராரின் நிலை இதுவாகத்தான் இருக்கும் என நபி(ஸல்) கூறிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குறிப்பிடு கின்றன

    இந்த அடிப்படையை மக்கள் புரிந்து கொள்ளும் நேரம் வந்தால் கபுரடியில் மண்டியிட்டு கிடக்கும் செயலை கண்டிப்பாக தவிர்ப்பார்கள்.

    அல்லாஹ்வைத் தவிர எவறும் பதிலளிக்க மாட்டார்கள். மரணித்தவர்கள் எதனையும் கேட்கும் சக்தியோ, நன்மை தீமை செய்யும் ஆற்றலோ பெற்றவர்கள் அல்ல என்பதை திருமறை குர்ஆனூடாக பின்வரும் வசனங்க ளில் அல்லாஹ் விளக்கப்படுத்துகிறான்.

    إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ فَادْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا لَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

    “அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கி றீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்.” (7:194)

    وَالَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ

    “அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர் கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களும் படைக் கப்பட்டவர்கள். அவர்கள் இறந்தவர்கள். உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.”(16:20-21)

    وَلَا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِينَ وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ

    (நபியே!) அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர் (அவ்வாறு) நீர் செய்தால் நிச்சயமாக நீர் அனியாயக்காரர்களில் உள்ளவ ராவீர். அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது.” (10:106-107)

    لَهُ دَعْوَةُ الْحَقِّ وَالَِّينَ يَدْعُونَ مِنْ دُونِهِ لَا يَسْتَجِيبُونَ لَهُمْ بِشَيْءٍ إِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَاءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهِ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ

    “உண்மையான பிரார்த்தனை அல்லாஹ்வுக்கு உரியது அவனையின்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்ப வனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.” (13:14)

    وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَقُولُ أَأَنْتُمْ أَضْلَلْتُمْ عِبَادِي هَؤُلَاءِ أَمْ هُمْ ضَلُّوا السَّبِيلَ قَالُوا سُبْحَانَكَ مَا كَانَ يَنْبَغِي لَنَا أَنْ نَتَّخِذَ مِنْ دُونِكَ مِنْ أَوْلِيَاءَ وَلَكِنْ مَتَّعْتَهُمْ وَآَبَاءَهُمْ حَتَّى نَسُوا الذِّكْرَ وَكَانُوا قَوْمًا بُورًا فَقَدْ كَذَّبُوكُمْ بِمَا تَقُولُونَ فَمَا تَسْتَطِيعُونَ صَرْفًا وَلَا نَصْرًا وَمَنْ يَظْلِمْ مِنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا

    அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிய வற்றையும் அல்லாஹ் ஒன்று திரட்டும் (மறுமை) நாளில் எனது அடியார் களை நீங்கள்தான் வழிகெடுத்தீர்களா? அவர்களாக வழிகெட்டார்களா? என்று கேட்பான்.

    (அதற்கு அவர்கள் யாஅல்லாஹ்!) நீ தூயவன். உன்னை யன்றி அவ்லியாக்களை ஏற்படுத்து வது எங்களுக்குத் தகாது. நீ அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய். (உன்னை) நினைக்க மறந்தனர். (இவர்கள்) அழிந்து போகும் கூட்டமாக ஆகிவிட்டனர் என்று அவர்கள் கூறுவார்கள்.” (25:17-18)

    وَالَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِهِ مَا يَمْلِكُونَ مِنْ قِطْمِيرٍ إِنْ تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ

    “நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியேற்க மாட்டார் கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு பதில் தர மாட்டார் கள். கியாமத்து நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.” (35:14)

    قُلْ أَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ ائْتُونِي بِكِتَابٍ مِنْ قَبْلِ هَذَا أَوْ أَثَارَةٍ مِنْ عِلْمٍ إِنْ كُنْتُمْ صَادِقِينَ وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ (

    “அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள் அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா என்பதற்குப் பதில் சொல்லுங்கள். நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள் என்று நபியே கேட்பீராக.

    கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறி யாது உள்ளனர்.

    மக்கள் ஒன்று திரட்டப்படும்போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார் கள்.“ (46:4-6)

    மரணித்துப்போன மனிதர்கள், அல்லது நல்லடி யார்கள், மகான்கள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் கப்ரில் உயிரோடு இல்லை. நீங்கள் அவர்களை பிரார்தித்து அழைத்தாலும் பதில் தரமாட்டார்கள். நாளை மறுமையில் அவர்களையும் அவர்களை அழைத்து பிரார்த் தித்தவர்களையும் அல்லாஹ் ஒன்று திரட்டி அல்லாஹ்வை விட்டு விட்டு உங்களிடம் பிரார்த்திக்கச் சொன்னீர்களா? என்று விசாரிப்பான். ஆனால், அவர்களோ “நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. எங்களுக்கும் அவர் களது காரியங்களுக்கும் எந்த தொடர்புமில்லை” என்று கூறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். பலமுறை இக்குர்ஆன் வசனங்களை அமைதியாக படித்துப் பாருங்கள்.

    மேலும் அல்லாஹ்விடம் தங்களது கஷ்ட துன்பங்களை முறையிட்டு பிராத்திக்காத வர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹ் கண்டிக்கிறான். வழிகேடர்கள் நரகத்திற்குரிய வர்கள் என்றும் எச்சரிக்கிறான்.

    அல்லாஹ்வை விட்டு விட்டு வேறொருவரிடம் பிரார்த்திப்பது என்றால் அல்லாஹ் பலஹீன மாவனமாக, இயலாதவனாக, துஆவுக்கு பதில் சொல்ல முடியாதவனாக, இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ் தனது இறைமைத்துவத்தை இன்னுமொருவருக்கு விட்டுக் கொடுத்து விட்டு ஓய்வெடுக்க் கூடியவனாக இருக்கவேண்டும். இந்த மாதிரி எக்குறையும் இல்லாத அல்லாஹ் வை விட்டு விடுவது, மற்றவர்களிடம் தங்களது கஷ்ட துன்பங்களை கூறி பிரார்த்திப்பது, வணக்கங்களை செய்வது மிகப் பொரும் அனியாயமாகும்.

    மேலும் மக்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் எளிமையாக ஒரு செய்தியையும் அல்லாஹ் சொல்கிறான்

    وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ

    உயிருடன் உள்ளவரும் மரணித்தவரும் சமமாக மாட்டார் கள் (35:22)

    சிந்திக்கின்ற மக்களுக்கு இந்த ஒரு வசனமும் போதுமானது.

    எனவே அன்புக்குரிய அல்லாஹ்வின் நல்லடி யார்களே! உங்களை படைத்து இருபத்தி நான்கு மணித்தியாலங்களும் உங்களை கண் காணித்துக் கொண்டு, என்றும் உயிரோடு இருக்கும், அல்லாஹ்விடம் கேளுங்கள் அவனி டமே சரணடையுங்கள்.ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் கருத்துக்களை எமக்கு அறிவியுங்கள்

    [email protected]

    معلومات المادة باللغة العربية