×
New!

Bayan Al Islam Encyclopedia Mobile Application

Get it now!

இறை நேசர்களுக்குரிய கண்ணியங்கள் (கராமத்துக்கள்) (தமிழ்)

ஆக்கம்: அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ்

Description

(அவ்லியாக்கள்) இறைநேசர்களுக்கு (கராமத்துகள் எனும்) கண்ணியங்கள் உண்டா? வானங்களிலும், பூமியிலும் விரும்பிய வாறு அவர்களுக்கு காரியமாற்றலாமா? மண்ணரைகளில் வாழும் அவர்கள், உலகில் இருப்பவர்களுக்காக மன்றாடலாமா?

Download Book

    இறை நேசர்களுக்குரிய கண்ணியங்கள் (கராமத்துக்கள்)

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    எழுதியவர்;

    அஷ்ஷைக்​ அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்)

    தமிழாக்கம்.

    மௌலவி: அப்துல் சத்தார் மதனி

    M.A in (Edu) Sudan.

    2015 - 1436

    كرامات الأولياء

    « باللغة التاميلية »

    كتبها:

    الشيخ العلامة :عبد العزيز بن عبد الله بن باز (رحمه الله)

    ترجمة

    عبد الستار بن عبد الرشيد خان

    2015 - 1436

    நூலாசிரியர்

    அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் என்பதே இவர்களின் இயற் பெயராகும். இவர் ஹிஜ்ரி 1335 ல் ரியாத் நகரில் பிறந்தார்கள். இளம் வயதில் அல் குர்ஆனை மனனம் செய்த இமாம் அவர்கள் சகல துறைகளிலும் சிறந்து விளங்கியதால் ஹிஜ்ரி 1357 ல் சவூதி அரேபிய நீதித் துறையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்​. எனினும் தனது கல்விப் பயணத்தை தொடர விரும்பிய இமாம் அவர்கள் ஹதீஸ் கலையில் சிறந்து விளங்கினார்கள். சவ்தி அரேபியாவில் உள்ள தலை சிறந்த அறிஞர்களிடம் கல்வி பயின்ற அவர்கள் தமது சேவை காலத்திலும் பல மார்க்க வகுப்புகளை நடாத்தினார்கள். ஹிஜ்ரி 1381 ல் மதீனா பல்கலைக் கழகத்தின் உப தலைவராகவும் பின்னர் ஹிஜ்ரி 1390 ல் அதன் தலைவராகவும் நியமனம் பெற்றார்கள். பிரபலமான மார்க்க உபதேசியாகவும், பன்னூல் ஆசிரியாரகவும் திகழ்ந்த அவர்கள் சவ்தி அரசில் பல பதவிகளை வகித்தார்கள் அவர்களின் அனைத்து சேவைகளையும் அல்லாஹ் கபூல் செய்து பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை அவருர்களுக்கு வழங்குவானாக ஆமீன்.

    நன்றி

    இறை நேசர்களுக்குரிய கண்ணியங்கள் (கராமத்துக்கள்)

    கேள்வி; (அவ்லியாக்கள் எனும்) இறைநேசர்களுக்கு (கராமத்துகள் எனும்) கண்ணியங்கள் உண்டா? வானங்களிலும், பூமியிலும் விரும்பியவாறு அவர்களுக்கு காரியமாற்றலாமா? மண்ணரைகளில் வாழும் அவர்கள், உலகில் இருப்பவர்களுக்காக மன்றாடலாமா?

    விடை; இறைவிசுவாசிகளே இறைநோசர்களாவர், அல்லாஹ் கூறுகின்றான்;

    أَلا إِنَّ أَوْلِيَاء اللّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ * الَّذِينَ آمَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ (يونس62-63)

    கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

    அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். (ஸூரா யூனுஸ் 63,64)

    ஆகவே மனு, ஜின் ஆகிய இரு வகுப்பாரிலும் உள்ள ஆண்களிலும் பெண்களிலும் இறை நேசர்கள் இவர்களேயாவர்​.

    மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

    وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاء بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلاَةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللّهَ وَرَسُولَهُ أُوْلَئِكَ سَيَرْحَمُهُمُ اللّهُ إِنَّ اللّهَ عَزِيزٌ حَكِيمٌ (التوبة71)

    நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப் படு வார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன். (அத்தவ்பா 71)

    ஆம் இறை விசுவாசத்தில் நிலைத்திருக்கும் இவர்களுக்கு (கராமத்துகள் எனும்) கண்ணியங்கள் உள்ளன. சில சமயம் அல்லாஹ் அவர்களுடைய கடன் பழுவை நீக்க வழி செய்து கொடுத்து அவர்களை கண்ணியப்படுத்துவான், அல்லது எதிரிகளிடமிருந்தும், அவர்களுக்கு நிகழவிருக்கும் தீங்குகளிலிலிருந்து தப்பிக்க வழி செய்தும் அவர்களை கண்ணியப்படுதுவான். கள்வர்கள், கொடிய மிருகங்கள் முதலியவர்களிடமிருந்து காப்பாற்றியும் அவர்களை கண்ணியப் படுத்துவான்.

    இவைகளையே அவ்லியாக்களுக்குறிய (கராமத்து கள் எனும்) கண்ணியங்கள், அல்லது வழமைக்கு மாற்றமாக (அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு) கிடைக்கும் அருள்கள் என்கிறோம். இவ்வாறு, இறைத்தூதர்களுக்கு நிகழ்ந்தால் அதற்கு (முஃஜிஸத்) அற்புதம் என்று (வேறுபடுத்தி) பார்க்கப்படும்.

    ஆனால் இறைநேசர்களுக்கு கண்ணுக்கு புலப்படாத மறைவான உலகத்தில் காரியமாற்ற முடியாது அதாவது வானங்களிலோ பூமியிலோ காரியமாற்ற முடியாமல் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அனுமதித்த, அல்லது ஆகுமாக்கிய வைகளில் மாத்திரம் அவர்கள் காரியமாற்றலாம், அவர்கள் மறைவான விடயங்களை அறிய மாட்டார்கள், (சுறுங்கக் கூறின்) வானத்திலோ, பூமியிலோ அல்லாஹ் தன் அடியார்களுக்கு அனுமதித்த விவகாரங்களான விவசாயம், கொடுக்கல் வாங்கள், முதலியவை தவிர்ந்த ஏனைய விடயங்களில் அவனுடைய அனுமதியின்றி அவர்களால் செயலாற்றவே முடியாது.

    “இறை நேசர்கள் காரியமாற்றுகிறார்கள், அவர்களிடம் மறைவான அறிவு உள்ளது” என ஸூபியாக்களும் அவர்களை போன்றவர்களும் நினைப்பது அபத்தமும் முட்டால் தனமும் ஆகும். காரணம் இறை நேசர்கள் சாதாண மனிதர்களைப் போன்றே வியாபாரம் விவசாயம் முதலிய தொழில் முயற்சிகளுக்கு சொந்தக்காரர்கள்​. சில சமயம் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள அருளால் அவர்களின் கஷ்டத்தை நிவர்த்தி செய்தோ, அலுவல்களை இலகு படுத்தியோ அவன் அவர்களை கண்ணியப்படுத்துவான், அதாவது அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி அவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்துவான். உதாரணமாக குகை வாசிகள் சுமார் முன்னூறு வருடங்கள் குகையில் தங்கியிருக்க, அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் அல்லாஹ் அவர்களை பாதுகாத்து, பின்னர் அவன் (கழா கத்ரில்) தீர்ப்பளித்த நேரத்தில் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றினான்.

    இபாத் இப்னு பிஷ்ர், உ​ஸைத் பின் ஹீலைர் போன்றவர்களுக்கு நிகழ்ந்த விடயங்களையும் இவ்வாறே நோக்கலாம். அதாவது ஒரு அமாவாசை இரவில் நபி (ஸல்) அவர்களோடு கதைத்துவிட்டு இருவரும் விடைபெற்றுச் சென்றார்கள் அப்போது அவர்கள் இருவரும் வைத்திருந்த சாட்டைகள்​ ஒளிர்ந்து பிரகாசித்து வீடு செல்லும் வரை அவர்களுக்கு வழிகாட்டின. இது அல்லாஹ் அவர்கள் இருவருக்கும் வழங்கிய (கராமத்) கண்ணியமாகும்.

    அமர் இப்னு துபைல் என்பவருக்கும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு முறை அவர் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே எனது கூட்டத்கினருக்கு என்னை ஒரு அத்தாட்சியாக மாற்றி விடுங்கள்” என வேண்டினார், உடனே நபி (ஸல்) அவர்கள், அவரிடம் ஒரு அத்தாட்சியை உண்டாக்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார் கள், பிறகு அல்லாஹ் விளக்கைப் போல் அவருடைய முகத்திலிருந்து ஒளி சிந்த வைத்தான். உடனே அவர் இறைவா! இதை வேறு ஒரு இடத்துக்கு மாற்றுவாயாக என பிரார்த்தித்தார் பிறகு அவர் தன் கரத்தில் இருக்கும் தடியை உயர்த்தும் போதெல்லாம் அதிலிருந்து ஒலி சிந்தியது. அதன் மூலம் அவருடைய கூட்டத்தா ருக்கு அவர் ஒரு அத்தாட்சியாளராக மாறினார். பின்னர் அவர் மூலம் அல்லாஹ் அவருடைய கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டினான் இதன் காரணமாக அவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தை தழுவினார்கள்.

    இவை தான் (கராமத்துகள் எனப்படும்) கண்ணியங்களாகும் இது தவிர அவ்லியாக்களில் எவரும் மறைவான விடயங்களை அறியவுமில்லை, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவைகளை மீறியும், அவன் அனுமதியின்றியும் அவர்கள் காரியமாற்ற வில்லை.

    நன்றி.

    உங்கள் கருத்துக்களை எமக்கு அறிவிக்கவும். ​

    [email protected]

    معلومات المادة باللغة العربية