×
جدبد!

تطبيق موسوعة بيان الإسلام

احصل عليه الآن!

اليوم الآخر والناجون فيه (تاميلي)

إعداد: முஹம்மத் மக்தூம்

الوصف

مقالة باللغة التاميلية عبارة عن شرح حديث النبي - صلى الله عليه وسلم - "سبعة يظلهم الله في ظله يوم لاظل الا ظله إمامٌ عادل . وشاب نشأ في عبادة الله عز وجل , ورجل قلبه معلق في المساجد , ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه , ورجل دعته امرأة ذات حسن وجمال فقال اني اخاف الله رب العالمين . ورجل تصدق بصدقة فأخفاها حتى لاتعلم شماله ماتنفق يمينه , ورجل ذكر الله خالياً ففاضت عيناهُ".

تنزيل الكتاب

    இறுதிப் பயணத்தின் முடிவும், அதில் ஈடேற்றம் அடைவோரும்

    اليوم الآخر والناجون فيه

    < தமிழ் - تاميلي >

    A.J.M. மக்தூம்

    —™

    Translator's name:

    Reviser's name:

    முஹம்மத் அமீன்

    ترجمة:

    مراجعة: محمد أمين

    இறுதிப் பயணத்தின் முடிவும், அதில் ஈடேற்றம் அடைவோரும்

    A.J.M. மக்தூம்

    இந்த உலக வாழ்க்கை ஒரு பரீட்சைப் பீடம், அந்த பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு வழங்கப் படும் பரிசு சுவனம். சித்தியடையாதோர் செல்லுமிடம் நரகம். அதில் உயர் சித்தி பெற்றவர்கள் “தக்வா” உடையோர் எனும் சான்றிதழை பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களே இறுதியில் ஈடேற்றம் அடைந்து நரக வாழ்க்கையே அனுபவிக்காது சுவர்க்கம் செல்வோர்.

    இந்த உலகம் முழுதும் அழிக்கப் பட்டு மீண்டும் அனைவரும் எழுப்பப்பட்டு மஹ்ஷர் மைதானத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெரும்.

    மனிதர்கள் இரண்டாம் சூர் ஊதப் பட்டப் பின் மண்ணறைகளில் இருந்து எழும்புவார்கள். அனைவரும் நிர்வாணிகளாக, பாதணிகளின்றி காணப் படுவார்கள். சூரியன் தலை உச்சியில் இருந்து ஒரு மைல் தூரத்தில் நிறுத்தப் படும். அவரவர் செய்த பாவத்திற்கேற்ப வியர்வையில் மூழ்கி கிடப்பார்கள். பிறகு நபிமார்களின் நீர் தடாகத்திலிருந்து மக்களுக்கு நீர் வழங்கப் படும்.

    தொடர்ந்தும் இடம்பெறும் மஹ்ஷரின் அமளிதுமளி தாங்க முடியாமல் மக்கள் நபிமார்களிடம் அவர்களின் ஷபாஅத்தை எதிர் நோக்கியவர்களாக விரைந்து செல்வார்கள். இறுதியில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வருவார்கள். அவர்கள் மக்களின் வேண்டுதலை ஏற்று அனைவருக்காகவும் ஷபாஅத் செய்வார்கள்.

    அதன் பின் கேள்வி கணக்கிற்காக இறைவன் இறங்குவான். பிறகு மனிதர்களின் செயலேடுகள் வழங்கப் படும். முஃமின்களுடன் இறைவன் தனிமையில் உறையாடுவான். இவ்வாறு பல்வேறு நிகழ்வுகள் இடம் பெரும்.

    பிறகு சுவர்க்கத்திற்குரியவர்கள் சுவர்க்கம் செல்லு முன் இறுதியாக நரகத்தின் மீது ஒரு பாலம் நிறுவப் படும், அதனூடாக அனைவரும் நரகத்தைக் கடந்தேயாக வேண்டும். அந்த இறுதி கட்டத்தையும் கடந்து சுவனத்தை வெற்றிக் கொள்கிறவர்கள் தக்வா உடையவர்களே என்பதை அல் குர்ஆன் பின்வருமாறு தெளிவு படுத்துகிறது.

    وَيَقُولُ الْإِنسَانُ أَإِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا، أَوَلَا يَذْكُرُ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِن قَبْلُ وَلَمْ يَكُ شَيْئًا، فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا، ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمْ أَشَدُّ عَلَى الرَّحْمَٰنِ عِتِيًّا، ثُمَّ لَنَحْنُ أَعْلَمُ بِالَّذِينَ هُمْ أَوْلَىٰ بِهَا صِلِيًّا، وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا، ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوا وَّنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا (سورة مريم : 66، 67، 68، 69، 70، 71، 72)

    (எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று. (அல் குர்ஆன்:19:66)

    யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? (அல் குர்ஆன்:19:67)

    ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்ட வர்களாக ஆஜராக்குவோம். (அல் குர்ஆன்:19:68)

    பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். (அல் குர்ஆன்:19:69)

    பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அல் குர்ஆன்:19:70)

    மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். (அல் குர்ஆன்:19:71)

    அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். (அல் குர்ஆன்:19:72)

    பின்வரும் நீண்ட ஹதீஸ் மஹ்ஷர் மைதானத்தில் இடம்பெறும் சில நிகழ்வுகள் குறித்து தெளிவை ஏற்படுத்துகிறது.

    عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ « هَلْ تُضَارُونَ فِى رُؤْيَةِ الشَّمْسِ وَالْقَمَرِ إِذَا كَانَتْ صَحْوًا » . قُلْنَا لاَ . قَالَ « فَإِنَّكُمْ لاَ تُضَارُونَ فِى رُؤْيَةِ رَبِّكُمْ يَوْمَئِذٍ ، إِلاَّ كَمَا تُضَارُونَ فِى رُؤْيَتِهِمَا - ثُمَّ قَالَ - يُنَادِى مُنَادٍ لِيَذْهَبْ كُلُّ قَوْمٍ إِلَى مَا كَانُوا يَعْبُدُونَ . فَيَذْهَبُ أَصْحَابُ الصَّلِيبِ مَعَ صَلِيبِهِمْ ، وَأَصْحَابُ الأَوْثَانِ مَعَ أَوْثَانِهِمْ ، وَأَصْحَابُ كُلِّ آلِهَةٍ مَعَ آلِهَتِهِمْ حَتَّى يَبْقَى مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ أَوْ فَاجِرٍ ، وَغُبَّرَاتٌ مِنْ أَهْلِ الْكِتَابِ ، ثُمَّ يُؤْتَى بِجَهَنَّمَ تُعْرَضُ كَأَنَّهَا سَرَابٌ فَيُقَالُ لِلْيَهُودِ مَا كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ عُزَيْرَ ابْنَ اللَّهِ . فَيُقَالُ كَذَبْتُمْ لَمْ يَكُنْ لِلَّهِ صَاحِبَةٌ وَلاَ وَلَدٌ فَمَا تُرِيدُونَ قَالُوا نُرِيدُ أَنْ تَسْقِيَنَا ، فَيُقَالُ اشْرَبُوا فَيَتَسَاقَطُونَ فِى جَهَنَّمَ ثُمَّ يُقَالُ لِلنَّصَارَى مَا كُنْتُمْ تَعْبُدُونَ فَيَقُولُونَ كُنَّا نَعْبُدُ الْمَسِيحَ ابْنَ اللَّهِ . فَيُقَالُ كَذَبْتُمْ لَمْ يَكُنْ لِلَّهِ صَاحِبَةٌ وَلاَ وَلَدٌ ، فَمَا تُرِيدُونَ فَيَقُولُونَ نُرِيدُ أَنْ تَسْقِيَنَا . فَيُقَالُ اشْرَبُوا . فَيَتَسَاقَطُونَ حَتَّى يَبْقَى مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ أَوْ فَاجِرٍ فَيُقَالُ لَهُمْ مَا يَحْبِسُكُمْ وَقَدْ ذَهَبَ النَّاسُ فَيَقُولُونَ فَارَقْنَاهُمْ وَنَحْنُ أَحْوَجُ مِنَّا إِلَيْهِ الْيَوْمَ وَإِنَّا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِى لِيَلْحَقْ كُلُّ قَوْمٍ بِمَا كَانُوا يَعْبُدُونَ . وَإِنَّمَا نَنْتَظِرُ رَبَّنَا - قَالَ - فَيَأْتِيهِمُ الْجَبَّارُ . فَيَقُولُ أَنَا رَبُّكُمْ . فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا . فَلاَ يُكَلِّمُهُ إِلاَّ الأَنْبِيَاءُ فَيَقُولُ هَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُ آيَةٌ تَعْرِفُونَهُ فَيَقُولُونَ السَّاقُ . فَيَكْشِفُ عَنْ سَاقِهِ فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ ، وَيَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ لِلَّهِ رِيَاءً وَسُمْعَةً ، فَيَذْهَبُ كَيْمَا يَسْجُدَ فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا ، ثُمَّ يُؤْتَى بِالْجَسْرِ فَيُجْعَلُ بَيْنَ ظَهْرَىْ جَهَنَّمَ » . قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا الْجَسْرُ قَالَ « مَدْحَضَةٌ مَزِلَّةٌ ، عَلَيْهِ خَطَاطِيفُ وَكَلاَلِيبُ وَحَسَكَةٌ مُفَلْطَحَةٌ، لَهَا شَوْكَةٌ عُقَيْفَاءُ تَكُونُ بِنَجْدٍ يُقَالُ لَهَا السَّعْدَانُ ، الْمُؤْمِنُ عَلَيْهَا كَالطَّرْفِ وَكَالْبَرْقِ وَكَالرِّيحِ وَكَأَجَاوِيدِ الْخَيْلِ وَالرِّكَابِ ، فَنَاجٍ مُسَلَّمٌ وَنَاجٍ مَخْدُوشٌ وَمَكْدُوسٌ فِى نَارِ جَهَنَّمَ ، حَتَّى يَمُرَّ آخِرُهُمْ يُسْحَبُ سَحْبًا ، فَمَا أَنْتُمْ بِأَشَدَّ لِى مُنَاشَدَةً فِى الْحَقِّ ، قَدْ تَبَيَّنَ لَكُمْ مِنَ الْمُؤْمِنِ يَوْمَئِذٍ لِلْجَبَّارِ ، وَإِذَا رَأَوْا أَنَّهُمْ قَدْ نَجَوْا فِى إِخْوَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا إِخْوَانُنَا كَانُوا يُصَلُّونَ مَعَنَا وَيَصُومُونَ مَعَنَا وَيَعْمَلُونَ مَعَنَا . فَيَقُولُ اللَّهُ تَعَالَى اذْهَبُوا فَمَنْ وَجَدْتُمْ فِى قَلْبِهِ مِثْقَالَ دِينَارٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ . وَيُحَرِّمُ اللَّهُ صُوَرَهُمْ عَلَى النَّارِ ، فَيَأْتُونَهُمْ وَبَعْضُهُمْ قَدْ غَابَ فِى النَّارِ إِلَى قَدَمِهِ وَإِلَى أَنْصَافِ سَاقَيْهِ ، فَيُخْرِجُونَ مَنْ عَرَفُوا ، ثُمَّ يَعُودُونَ فَيَقُولُ اذْهَبُوا فَمَنْ وَجَدْتُمْ فِى قَلْبِهِ مِثْقَالَ نِصْفِ دِينَارٍ فَأَخْرِجُوهُ . فَيُخْرِجُونَ مَنْ عَرَفُوا ، ثُمَّ يَعُودُونَ فَيَقُولُ اذْهَبُوا فَمَنْ وَجَدْتُمْ فِى قَلْبِهِ مِثْقَالَ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ . فَيُخْرِجُونَ مَنْ عَرَفُوا » . قَالَ أَبُو سَعِيدٍ فَإِنْ لَمْ تُصَدِّقُونِى فَاقْرَءُوا ( إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا ) « فَيَشْفَعُ النَّبِيُّونَ وَالْمَلاَئِكَةُ وَالْمُؤْمِنُونَ فَيَقُولُ الْجَبَّارُ بَقِيَتْ شَفَاعَتِى . فَيَقْبِضُ قَبْضَةً مِنَ النَّارِ فَيُخْرِجُ أَقْوَامًا قَدِ امْتُحِشُوا ، فَيُلْقَوْنَ فِى نَهَرٍ بِأَفْوَاهِ الْجَنَّةِ يُقَالُ لَهُ مَاءُ الْحَيَاةِ ، فَيَنْبُتُونَ فِى حَافَتَيْهِ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِى حَمِيلِ السَّيْلِ ، قَدْ رَأَيْتُمُوهَا إِلَى جَانِبِ الصَّخْرَةِ إِلَى جَانِبِ الشَّجَرَةِ ، فَمَا كَانَ إِلَى الشَّمْسِ مِنْهَا كَانَ أَخْضَرَ ، وَمَا كَانَ مِنْهَا إِلَى الظِّلِّ كَانَ أَبْيَضَ ، فَيَخْرُجُونَ كَأَنَّهُمُ اللُّؤْلُؤُ ، فَيُجْعَلُ فِى رِقَابِهِمُ الْخَوَاتِيمُ فَيَدْخُلُونَ الْجَنَّةَ فَيَقُولُ أَهْلُ الْجَنَّةِ هَؤُلاَءِ عُتَقَاءُ الرَّحْمَنِ أَدْخَلَهُمُ الْجَنَّةَ بِغَيْرِ عَمَلٍ عَمِلُوهُ وَلاَ خَيْرٍ قَدَّمُوهُ . فَيُقَالُ لَهُمْ لَكُمْ مَا رَأَيْتُمْ وَمِثْلُهُ مَعَهُ » .

    அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்.

    நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், '(மேக மூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியத்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'இல்லை' என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்களுடைய இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள்' என்று கூறிவிட்டு (பின்வருமாறு) விளக்கினார்கள்.

    (மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், 'ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்' என்று அழைப்பு விடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டார்கள் தத்தம் கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டு நன்மைகளும் புரிந்துக் கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், 'நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை' என்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம், 'இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கவர்கள், 'எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!' என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), 'குடியுங்கள்' என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும் போது) அவர்கள் நரகத்தில் விழுந்து விடுவார்கள். பின்னர் கிறிஸ்தவர்களிடம், 'நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்; அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை' என்று கூறப்பட்ட பின் 'நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) 'குடியுங்கள்!' என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள்.

    இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் 'மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்துக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், '(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர்' 'ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்த அவர்களுடன் சேர்ந்துக்கொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று கூறுவார்கள். அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் முறையாக வந்து, 'நானே உங்கள் இறைவன் என்று கூறுவான். அதற்கு நம்பிக்கையாளர்கள், 'நீயே எங்கள் இறைவன்' என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, 'அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?' என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், '(இறைவனி) கால் (பாதம்) தான்' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தன்னுடைய காலை வெளிப்படுத்துவான். இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிரம் வணக்கம் செய்ய முடியாது.)

    பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு, நரகத்தின் மேலே கொண்டு வைக்கப்படும். (இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது,) நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன பாலம்?' என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'அது (கால்கள்) வழுக்குமிடம்; சறுக்குமிடம்; அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். 'நஜ்த்' பகுதியில் முளைக்கும் அவை 'கருவேல மர முற்கள்' எனப்படும்' என்றார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பி விடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார்.

    பின்னர், தாம் தப்பித்து விட்டோம் என்பதை இறை நம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்கத் தெளிவாகி விட்ட உரிமைக்காகக் கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்க மாட்டீர்கள். அப்போது அவர்கள், 'எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள்; எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)' என்று வேண்டுவார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், 'நீங்கள் சென்று, எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்' என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (நரகவாசிகளிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்துவிடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தம் பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதி கால்கள் மறையும் அளவிற்கு நரகினுள் கிடப்பார்கள். உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்று வார்கள். பிறகு மீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். 'எவருடைய உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறைநம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களை யும் வெளியேற்றுங்கள்' என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெரிந்தவர்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், 'எவருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்' என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுவார்கள்.

    இதன் அறிவிப்பாளரான அபூ ஸஈத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

    (இதை) நீங்கள் நம்பாவிட்டால், 'நிச்சயமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவு கூட அநீதி இழைக்கமாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதை இரட்டிப்பாக்குவான்' எனும் (திருக்குர்ஆன் 04:40 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர்கள், இறைநம்பிக்கை யாளர்கள் ஆகியோர் (தத்தம் தகுதிக்கேற்ப) பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்த (இறை)வன் '(இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கிறது' என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மக்களை அள்ளியெடுத்து அவர்களை வெளியேற்றுவான். அவர்கள் கரிந்து போயிருப்பார்கள். எனவே, சொர்க்க வாசலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள். அதற்கு 'ஜீவ நீர்' ('மாஉல் ஹயாத்') என்று பெயர். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இரண்டு மருங்கிலும் முளைத்து (நிறம் மாறி) விடுவார்கள். பாறையில் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும், நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும்.

    ஆக, இவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும்போது முத்தைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களின் கழுத்தில் (நரகத்திலிரந்து விடுதலை பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள். அப்போது சொர்க்கவாசிகள் (இவர்களைப் பார்த்து), 'இவர்கள் பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள்; இவர்கள் எந்த நற்செயலும் புரியாமல், எந்த நன்மையும் ஏற்கெனவே செய்திராமல் அவனே இவர்களைச் சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச் செய்தான்' என்று கூறுவர். பிறகு (அவர்களிடம்) நீங்கள் காண்கிறீர்களே இதுவும் உங்களுக்கு உண்டு; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு' என்று (நற்செய்தி) சொல்லப்படும். (ஆதாரம்: புகாரி)

    எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது உயரிய சுவனத்தில் நுழையும் பாக்கியத்தை தந்தருள்வானாக. ஆமீன்

    معلومات المادة باللغة الأصلية