Description
வாழ்க்யில் ஒழுக்கத்தை கடைப்படிக்க வேண்டிய அவசியத்தை முழுமையாக அறிந்துக் கொண்ட முஸ்லிம்கள், மற்றவர்களும் அதன் சிறப்பை அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தமது இச்சைப்படி வாழும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் நரகத்தை அவர்கள் அறிவார்கள். ஆகையால் இந்த மூமின்கள் உலகில் வாழும் அனைத்து மக்களும் அல்லாஹ் எற்றுக்கொள்ளும் வழியில் வாழ்ந்து, நரகத்தின் கொடுமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நாடுகிறார்கள்.
உண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை
الدعوة إلى الحق واجب على المسلمين
< தமிழ்>
اسم المؤلف: هارون يحيا
ஜாசி பின் தஇயான்
முஹம்மத் அமீன்
ترجمة: جاسم بن دعيان
مراجعة: محمد أمين
உண்மையின் பக்கம் மக்களை அழைப்பது
மூமின்களின் கடமை
ஹாருன் யஹ்யா
http://www.arabnews.com/islam-perspective/news/714226
அரப் நியூஸ் பத்திரிகை 2015, மார்ச் 6 திகதி
பிரசுரமாகிய கட்டுரை
தமிழில்
ஜாசிம் பின் தய்யான்
இஸ்லாத்தைப் பற்றி ஏனைய சமூகத்தவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டும் அளவுக்கு இஸ்லாத்தில் என்ன தான் இருக்கிறது? இஸ்லாம் சம்பந்தமாக ஆர்வத்துடன் செயல் புரிவதற்கு முஸ்லிம்களை தூண்டுவது என்ன?
நன்மையை ஏவி, தீமையை தடுக்கும் ஒரு மூமின்கள் கூட்டம் இருக்க வேண்டும் என அல் கூர்ஆன் அணையிடுகிறது.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَـٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿١٠٤﴾
“இன்னும் (விசுவாசம் கோண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார்- அவர்கள் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களா கவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும். அவர்களே தாம் வெற்றி பெற்றோர்.'" சூரா ஆலு இம்ரான் 3;104.
இந்த வசனத்தின் அடிப்படையில், இஸ்லாத்தைப் பற்றி, அதன் சிறப்பைப் பற்றி, அதன் அற நிலை பற்றி, இஸ்லாம் கூறும் ஆன்மீக அறக் கட்டளைக்கு மாற்றமாக இயங்கும் வாழ்க்கையின் வெறுமையை பற்றி ஏனையவர்களுக்கு எடுத்துக் கூறவது தமது கடமை என்று உண்மையான முஸ்லிம்கள் கருதுவார்கள்.
வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப்படிக்க வேண்டிய அவசியத்தை முழுமையாக அறிந்துக் கொண்ட முஸ்லிம்கள், மற்றவர்களும் அதன் சிறப்பை அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தமது இச்சைப்படி வாழும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் நரகத்தை அவர்கள் அறிவார்கள். ஆகையால் இந்த மூமின்கள் உலகில் வாழும் அனைத்து மக்களும் அல்லாஹ் எற்றுக்கொள்ளும் வழியில் வாழ்ந்து, நரகத்தின் கொடுமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நாடுகிறார்கள்.
இந்த நன்மையான செயலில் ஈடுபடுதற்கு முன்னர், உண்மை என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம். இதற்கு காரணம், இந்த குறுகிய கால வாழ்க்கையில் எமது செயல்களின் அடிப்படை யில் தான் மறுமையில் எமக்கு தீர்ப்பு வழங்கப் படுகிறது. எமது செயல்களுக்கு பகரமாக கொடுக்கப் படும் எமது நிரந்தர வாழ்க்கை அமைவது சுவர்க்கத்திலா அல்லது நரகத்திலா என அந்தத் தீர்ப்பு கூறும்.
இதன் காரணமாக ஒவ்வொரு மனிதரையும் அல்லாஹ்வின் கருணையின் பக்கம் அழைத்து, நரக நெருப்பிலிருந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் மூமின்கள் தங்களால் இயன்ற அளவில் பாடுபடுகிறார்கள். மக்களை நேர் வழிக்கு அழைக்கும் முயற்சியில் தமது முழு நேரத்தையும்செலவிடுகிறார்கள்.
இப்படிப்பட்ட தாஈகள், மூமின்களிடமிருந்து உடலாலும் உள்ளத்தாலும் பெரும் சக்தி பெற்று ஒரு மனிதனையேனும் நேர்வழியில் நடாத்தி செல்ல முடியாது போனாலும், உற்சாகத்துடனும், உறுதியுடனும் தொடர்ந்து செயல் புரிவார்கள். நேர் வழிக்கு அழைப்பு கொடுப்பது மாத்திரமே அவர்களது கடமை, தான் விரும்பியவர்களை நேர்வழியில் அழைத்துச் செல்வது அல்லாஹ்வின் பொறுப்பாகும். நபி (ஸல்) அவர்களின் விடா முயற்சியின் மத்தியிலும் மக்காவின் மக்கள் பெரும் பான்மையோர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த போது அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்.
“(நபியே!) நிச்சயமாக நீர் விரும்பியோரை நேர் வழியில் செலுத்த மாட்டீர். எனினும், அல்லாஹ் தான் நாடியோரையே நேர் வழியில் செலுத்துகின்றான். மேலும் நேர் பெறுகிறவர்களை அவனே மிக்க அறிந்தவன்.
மூமின்களின் பலம் எங்கிருந்து கிடைக்கிறது?
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّـهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّـهِ ۚ أُولَـٰئِكَ هُمُ الصَّادِقُونَ ﴿١٥﴾
“(உண்மையான) விசுவாசிகள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசம் கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய செல்வங்களாலும் தம் உயிர்களாலும் (ஜுஹாத் எனும்) அறப் போர் செய்தார்களே அத்தகையோர் தாம், அவர்களே (தங்கள் விசுவாசத்தில்) உண்மையானவர்கள்." அல் குர்ஆன் 49 -15.
மூமின்களின் இந்த பண்பு, அவர்கள் உள்ளத்தில் உள்ள பெரும் ஆர்வத்தை தெளிவாக விளக்குகிறது. அதே போன்று விசுவாசிகளும், தமது முயற்சியின் விளைவுகள் எதுவானாலும் தமது ஈமான் கொடுக்கும் ஆர்வத்தின் பலத்தில், தமது உறுதியான விசுவாசத்துக்காக பாடுபடுகிறார்கள். விசுவாசிகளின் ஆர்வத்தை வளர்க்கும் இன்னுமொரு காரணம், அவர்கள் பயத்தோடும், நம்பிக்கையோடும் வாழ்வது என அல் குர்ஆன் விளக்குகிறது.
وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ اللَّـهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ ﴿٥٦﴾
“.....(இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடை அருளை) எதிர் பார்த்தும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக்க சமீபத்தில் இருக்கிறது." சூரா 7;56
பயத்துக்கும், எதிர்பார்ப்புக்கும் இடையில் வாழ்வது என்பது, “ஒரு மூமின், தனது நற்செயல்கள் மூலம் சுவர்க்கம் நிச்சயமாக கிடைக்குமா? அவை அல்லாஹ்விடம் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதா, இல்லையா என்ற கேள்விகளுக்கு உறுதியான விடை தெரியாமல் தவிக்கும் நிலையை குறிக்கும். ஆகையால் தீர்ப்பு நாளின் கொடுமைகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் மூமின்கள் தமது நடத்தைகளை சீர்திருத்துவதற்கு முழு மனதுடன் முயற்சி செய்வார்கள். அளவற்ற அருளாலனாகிய அல்லாஹ்வின் கிருபையால் தமக்கு சுவர்க்கத்தின் பூங்கா கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கை அவர்கள் உள்ளத்தில் உண்டு. இவ்வாறு பயம் நம்பிக்கை எனும் இரு உணர்வுகளுக்கு ஆளாகும் மூமின்கள், தாம் செய்த நற்கருமங்கள் போதும் என்றோ, தாம் பிழைகளோ, குற்றங்குறைகளோ செய்ய மாட்டோம் என்றோ ஒரு போதும் கருத மாட்டார்கள். அதனை பற்றி அல்லாஹ் இவ்வாறு அறிவிக்கின்றான்.
وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّـهُ بِهِ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ ﴿٢١﴾
“தங்கள் இரட்சகனுக்குப் பயந்தும் நடப்பார்கள். கேள்வி கணக்கின் கடுமையையும் பயந்து கொண்டிருப்பார்கள்." குர்ஆன் 13;21
அல்லாஹ்வின் தண்டனையின் வேதனையை பற்றி அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவு வைத்திருப்பார்கள். இப்படிப் பட்ட மூமின்களுக்கு அல்லாஹ் பின்வரும் நற்செய்தியை அறிவிக்கிறான்.
وَبَشِّرِ الْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ اللَّـهِ فَضْلًا كَبِيرًا ﴿٤٧﴾
“(நபியே!) விசுவாசிகளுக்கு - அல்லாஹ்விடமிருந்து, நிச்சயமாக அவர்களுக்கு - பெரும் பேரருள் உண்டு என்று நீர் நன்மாராயமும் கூறுவீராக." குர்ஆன் 33;47.
இஸ்லாத்தை பரப்புவதில் நபி (ஸல்) வகித்த தீவிர பங்கு
அல்லாஹ்வின் மார்க்கத்தை பரப்பும் முயற்சியில் ஒவ்வொரு நபியும் பெரும் கஷ்டத்திற்கு ஆளானார்கள். தமது சமூகத்தை நேர் வழியில் இட்டும் செல்லும் மகத்தான பொறுப்பில் தமது உயிருக்கும், பொருட்களுக்கும் பெரும் ஆபத்துக்கள் ஏற்படக் கூடிய போராட்டங்களை எதிர் நோக்கினார்கள்.
நூஹ் நபி (அலை) அவர்களின் நேர்மையான நடவடிக்கைகள் பற்றி அல்லாஹ் இவ்வாறு குர்ஆனில் கூறுகிறான்.
قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا ﴿٥﴾ فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا ﴿٦﴾ وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا ﴿٧﴾ ثُمَّ إِنِّي دَعَوْتُهُمْ جِهَارًا ﴿٨﴾ ثُمَّ إِنِّي أَعْلَنتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًا ﴿٩﴾ فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا ﴿١٠﴾
“அவர், என் இரட்சகனே! நிச்சயமாக நான் என்னுடைய சமூகத்தாரை (உன் வழியில்) இரவிலும், பகலிலும் அழைத்தேன் என்று கூறினார். என்னுடைய அழைப்பு, அவர்களுக்கு வெருண்டு ஓடுவதையே அன்றி (வேரொன்றையும்) அதிகப் படுத்தவில்லை. மேலும் நிச்சயமாக நான் _ அவர்களுக்கு நீ மன்னிப்பளிப்ப தற்காக (உன் பக்கம்) நான் அழைத்த போதெல்லாம் (அதை கேட்காது இருக்க) தங்களுடைய காதுகளில் விரல்களை விட்டுக் கொண்டார்கள். (என்னை பார்க்காதிருக்க) தங்கள் ஆடைகளைக் கொண்டு தங்க(ளின் முகங்)களை மூடிக் கொண்டுமிருந்தனர். மேலும், (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தனர். பெரும் அகந்தையாகவும் அகந்தை கொண்டனர். பின்னும் நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்தேன். பின்னும் நிச்சயமாக நான் அவர்களுக்கு (அழைப்பை) பகிரங்கப் படுத்தினேன். அவர்களுக்கு (எனது பிரசாரத்தை) மறைமுகமாக மறைத்தும் செய்தேன். ஆகவே (முந்திய உங்கள் பாவங்களுக்காக) உங்கள் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான் என்றும் கூறினேன்." சூரா 71; 5 முதல் 10 வரை.
நூஹ் (அலை) தனது மக்கள் எவ்வளவு புறக்கணித்த போதும், அவற்றை பொருட் படுத்தாது, மதத்தின் நல்விளைவுகளை எடுத்துக் கூறி, அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு காட்டிய ஆர்வத்தின் காரணமாக, தனது குறிக்கோளில் உறுதியாக நின்றார்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துக் கூற பெரிதும் பாடுபட்ட நூஹ் (அலை) அவர்களும், அவரை போன்ற ஏனையவர்களும், அல்லாஹ்வின் வழியில் மக்களை அழைப்பதற்கு எடுத்துக்கொண்ட ஒவ்வொரு முயற்சிக்கும், பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்லாஹ்விடம் பெரும் பரிசுகள் கொடுக்கப்படுவார்கள் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது என்பது மிகவும் முக்கியமாகும்.
لتَّائِبُونَ الْعَابِدُونَ الْحَامِدُونَ السَّائِحُونَ الرَّاكِعُونَ السَّاجِدُونَ الْآمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنكَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّـهِ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ ﴿١١٢﴾
“பாவத்திலிருந்து மன்னிப்புக் கோரி மீண்டவர்கள், (அல்லாஹ் ஒருவனையே) வணங்குபவர்கள், புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகுஉ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள், நன்மையான காரியங்களை செய்யும் படி ஏவுபவர்கள், தீமையானவற்றை விட்டும் விலக்குபவர்கள், அல்லாஹ்வுடைய வரம்புகளை பேணுபவர்கள் (அவர்கள் தான் அல்லாஹ்விடம் தங்களை விற்றவர்கள் ஆவார்கள்) விசுவாசிகளுக்கு (சுவனபதி உண்டென்று நபியே!) நீர் நன் மாராயம் கூறுவீறாக." சூரா தவ்பா 9;112.
முற்றும்