அல்லாஹ் எம்மீது கொண்ட அன்பின் காரணமாக சில அமல்களையும் நாட்களையும் சிறப்பாக்கி தந்திருக்கின்றான். அப்படியான ஒன்று தான் துல்-ஹஜ் மாதத்தின் முதற் பத்து நாட்களாகும். குறிப்பாக மனிதன் தனது பாவக் கறைகளில் இருந்து தௌபாச் செய்து மீட்சிபெற வோண்டிய காலமாகும், அது மாத்திரமல்ல இக்காலத்திலே செய்யப்படுகின்ற அமல் ஜிகாத்தை விட முற்படுத்திக் கூறப்பட்டுள்ள அளவு சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான அமல்கள் என்ன என்பதை இவ் உரை தெளிவுபடுத்துகின்றது.
பல்வேறுபட்ட மொழிகளில் இஸ்லாத்தைக் கற்பிக்கவும், அறிமுகம் செய்வதற்குமாக குறிப்பிட்ட சில தலைப்புக்களை உள்ளடக்கிய இலத்திரனியல் களஞ்சியம்