×
ஆக்கம்: முஹம்மத் இம்ரான் ஜமாலுத்தீன்

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி (தமிழ்)

1. லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள். 2. ஓரிறைக் கொள்கையின் வகைகள், ருபூபிய்யா, அதனை மறுத்தவர்கள், உலூஹிய்யா, அதில் மாறு செய்தோர், பெயர்கள், பண்புகள், அதில் வழிதவறியோர். 3. இணைவைப்பு என்றால் என்ன? அதன் விபரீதங்கள், எப்போது அது உருவானது? தற்போது சமூகத்திலுள்ள இணைவைப்புக்கள் 4. நபியவர்களின் சுருக்க வரலாறு, அவர்களை ஏற்றுக் கொள்வதன் அர்த்தம், அதில் உள்ளடக்கப்பட வேண்டியவை, அவர்கள் விடயத்தில் மக்கள் நிலைப்பாடு. 5. வானவர்களை எவ்வாறு நம்ப வேண்டும்? எப்போது படைக்கப்பட்டார்கள்? அவர்களின் அங்க அமைப்பு, பண்புகள், தராதரங்கள், வசிப்பிடங்கள், எண்ணிக்கை, பெயர்களும் பொறுப்புக்களும், சக்திகள் 6. வேதங்களின் பால் மனிதன் தேவையுள்ளவன், வேதங்களை நம்புவதற்கான ஆதாரங்கள், எவ்வாறு நம்புவது? குர்ஆனில் கூறப்பட்டுள்ள வேதங்கள், ஸுஹுபுகள், இறுதிவேதம் அல்குர்ஆன், முன்னைய வேதங்கள் பற்றி சுருக்கப் பார்வை, அவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன 7. ரிஸாலத், ரஸூல்மார்களின் பால் மனிதனின் தேவைப்பாடு, மறைவான விடயங்களை இறைத்தூதர்கள் மூலமே அறியலாம், நேர்வழியை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது, தூதர்கள் ஏன் மனிதர்களாக அனுப்பப் பட்டார்கள்? இறைத்தூதர்கள் பற்றி அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடு. 8. மரணத்தை படைத்தது மனிதனை சோதிப்பதற்கே, அல்லாஹ்வை வணங்கி நபி வழியில் வாழ்ந்தீர்களா, அல்லது ஷெய்தானுக்கு வழிப்பட்டீர்களா என்று சோதிக்கப்படுவீர்கள். வாழ்வும் உலகமும் நிரந்தமல்ல. உலக அழிவின் போது மனிதனின் நிலை. பூமியும் மலைகளும் பஞ்சு போல் பறக்கும். 9. விதி என்றால் என்ன? விதியின் படித்தரங்கள் : அறிவு, எழுதி வைத்தல், நாட்டம், படைத்தல். பாவம் செய்ய விதி காரணமாக மாட்டாது. 10. வுழூவின் முக்கியத்துவம், அதன் நிபந்தனைகள், கடமைகள், ஸுன்னத்துக்கள், பரிபூரணமாக வுழூச் செய்யும் முறை, வுழூவை முறிப்பவை 11. நபியவர்களின் தொழுகை முறை, ஸலாம் கொடுத்த பின் திக்ருகள், உபரியான தொழுகை, கூட்டுத்தொழுகை. 12. ஸகாத்தின் முக்கியத்துவம், முன்னைய சமூகங்களில் ஸகாத், அதன் ஆதாரங்கள், அதனை மறுப்பவனின் நிலை, யாருக்கு எப்போது கடமை? ஸகாத்தின் தனிநபர் சமூகப் பயன்பாடுகள், விதியாகும் பொருட்கள், யாருக்கு வழங்க வேண்டும்? 13. ரமழான் மாதத்தின் சிறப்பு , நோன்பு விதியாகிய படிமுறைகள் , நோன்பின் சிறபபு, ரமழானில் செய்யும் அமல்கள் 14. நோன்பின் கடமைகள் : 1. எண்ணம் (நிய்யத்), அதன் நேரம், அதில் கடமையான, உபரியான நோன்புகளுக்கிடையே உள்ள வேறுபாடு. 2. நோன்பை முறிக்கும் விடயங்களைத் தவிர்த்தல். நோன்பின் நேரம், நோன்பை முறிக்கக்கூடியவை : பகலில் உறவு கொள்ளல், விந்தை வெளிப்படுத்தல், உண்ணல், பருகல், வாந்தியை வரவழைத்தல், அதிக இரத்தம் வெளியேற்றுதல். கேள்வி - பதில் 15. விடுபட்ட நோன்பைப் பூர்த்தி செய்தல் : காரணமின்றி நோன்பை விட்டவர், காரணத்துடன் நோன்பை விட்டவர். பிரயாணி, நோயாளி, மாதவிடாய், பிரசவத்தீட்டுள்ள பெண்கள் ஆகியோரின் சட்டங்கள். வயோதிபர், தீராத நோயுள்ளவர்களின் சட்டம். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சட்டம். விடுபட்ட நோன்புகளை அடுத்த வருடம் வரை பிற்படுத்தியோர் , அதற்கு முன்னர் மரணித்தோரின் சட்டங்கள். 16. ஹஜ்- அறிமுகம், ஆதாரங்கள், எப்போது விதியானது? அதன் சட்டம், அதன் நோக்கம், வரலாற்றுப் பிண்ணனி, சிறப்பு, யாருக்குக் கடமை? 17. ஹஜ்ஜுக்குத் தயாராகுதல்- உள்ளச்சம், நபிவழி, தூய்மையான பணம், தேவையான பொருட்கள் இஹ்ராம் என்றால் என்ன? நிய்யத் வைக்கும் காலமும் இடமும். இஹ்ராத்தின் ஸுன்னத்துக்கள், அதனுடன் தடுக்கப்பட்டவை. நிய்யத்தின் வகைகள் : தமத்துஃ, கிரான், இப்ராத். 18. ஹஜ் செய்யும் முறை: தமத்துஃ : உம்ராவுடைய தவாப், ஸஈ, முடி சிரைத்தல், இஹ்ராத்தைக் களைதல். மீண்டும் 8ம் நாள் ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்தல் கிரான், இப்ராத் : தவாபுல் குதூம், ஹஜ்ஜுடைய ஸஈ. துல்ஹஜ் 8ம் : மினாவில் தரித்தல். 9ம் நாள் : அரபாவுக்குச் செல்லல், முஸ்தலிபாவில் இராத்தரித்தல் 10ம் நாள் : மினாவுக்குச் சென்று கல்லெறிதல், பலியிடல், முடி சிரைத்தல், ஹஜ்ஜின் தவாப், ஸஈ. மினாவில் இராத்தரித்தல். 11, 12, 13ம் நாட்கள் : கல்லெறிதல். 11, 12ம் நாட்கள் : மினாவில் இராத்தரித்தல். பிரியாவிடைத்தவாப்.

Play
معلومات المادة باللغة العربية