الوصف
مقالة باللغة التاميلية تبين نص الرسالة التى أرسلها النبي محمد - صلى الله عليه وسلم - إلى هرقل عظيم الروم.
ரோம் சக்கரவர்த்தி ஹெர்குல் (Hercules) க்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.
] Tamil – தமிழ் –[ تاميلي
M.S.M.இம்தியாஸ் யூசுப்
2014 - 1435
رسالة الرسول صلى الله عليه وسلم
إلى هرقل عظيم الروم
« باللغة التاميلية »
محمد إمتياز يوسف
2014 - 1435
ரோம் சக்கரவர்த்தி ஹெர்குல் (Hercules) க்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.
M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி.
இஸ்லாம் சர்வதேச மார்க்கம்! முழுமனித சமூகத்திற்கும் வழிகாட்ட வந்த பூராணமான மார்க்கம்!
அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு இறைத்தூதரை அனுப்பிய வைத்தது போல் முழு மனித சமூகத்திற்கும் இறுதித்தூதராக நபி முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பிவைத்தான்.
இது குறித்து அல்லாஹ் கூறும் போது
{قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ} ஜالأعراف: 158
நபியே நீர் கூறும் மனிதர்களே நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதராவேன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியன. (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறுயாருமில்லை. அவனே உயிர்பிக்கிறான். இன்னும் மரணிக்கச் செய்கிறான் என்று நபியே கூறுவீராக. ஆகவே நீங்கள் அல்லாஹ்வையும் (எழுத்தறிவற்ற) உம்மி நபியாகிய அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரும் அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்பிக்கை கொள்கிறார். நீங்கள் நேர்வழி பெரும் பொருட்டு அவரையே பின் பற்றுங்கள். (7:157)
இஸ்லாத்தின் தூதை - அதன் வழிகாட்டுதலை உலக மக்களுக்கு எத்திவைக்கும் பணியில் முஹம்மது நாபி(ஸல்) தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள். மக்காவில் ஆரம்பித்த தூதுத்துவத்தை அரபு தீபகற் பத்திலும் அதற்கு வெளியிலும் கொண்டு சென்றார்கள். பல நாட்டு மன்னர்களுக்கு கடிதங்கள் எழுதி இத்தூதுத்துவத்தை எத்திவைத்தார்கள்.
இஸ்லாத்தின் தூதை - அதன் வழி காட்டுதலை உலக மக்களுக்கு எத்திவைக்கும் பணியில் நபி முஹம்மது (ஸல்) தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள். பல நாட்டு மன்னர்களுக்கு கடிதங்கள் எழுதினார்கள். தங்களது தோழர்களையும் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைத் தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் எழுதிய மன்னர்களுக்கு கடிதங்களை இத்தொடரில் வெளியிடுகிறோம்.
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களது காலத்துக்கு முற்பட்ட காலங்களிலும்,ரோம், பாரசீக எனும் இரு நாடுகள்,இருபெரும் வல்லரசுகளாக திகழ்ந்தன. இவ்விரு நாடுகளும் கிறிஸ்தவ நாடுகள்.
பாரசீக நாட்டை வெற்றிக் கொள்வதற் காக,ரோம் நாட்டு கிறிஸ்தவ மன்னன் ஹெர்கல் என்பவர் படையெடுத்துச் சென்றார். போரில் வெற்றியும் பெற்றார். ஹிம்ஸ் எனும் பகுதியிலிருந்து ஈலியாவை வெற்றி வாகை சூடிய மன்னன் புனித ஜெரூசலத்தை நோக்கி பயணமானார்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ரோம் மன்னருக்கு ஒரு கடிதம் எழுதி அதனை திஹ்யா அல் கலபி(ரலி) என்ற நபித்தோழரிடம் கொடுத்து,இக்கடிதத்தை புஸ்ரா நாட்டு மன்னரிடம் கையளித்து அவர் மூலமாக ரோம் மன்னருக்கு சமர்பிக்குமாறு உத்தரவிட்டு அனுப்பிவைத்தார்கள்.
கடிதம் ஹெர்குல் மன்னருக்கு கிடைத்தது கடிதத் தைப் படித்துப் பார்த்த மன்னர், நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வ தற்காக அவரது சமூகத்தைச் சார்ந்த யாராவது இருந்தால் அழைத்து வரும்படி அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.
வியாபார நோக்கமாக மக்காவிலிருந்து ஷாம் (சிறியா) நாட்டுக்கு வருகை தந்த குறைஷிகள் (முஹம்மது நபியின் குலத்தைச் சார்ந்தவர்களில்) சிலர் அங்கிருந்தனர். இவர்களை கண்ட மன்னரின் தூதர், இவர்களை அழைத்துக் கொண்டு ஜெரூஸலம் வந்து சேர்ந்தார்.
அரசவையில் மன்னருக்கு முன்னால் குறைஷி வியாபாரிகள் நிறுத்தப்பட்டார்கள். இவ்வியாபார கூட்டத்தில்,முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கிய உறவினரும், மக்காவின் தலைவருமான அபூ சுப்யான் அவர்களும் இருந்தனர். (அப்போது அபூசுப்யான் இஸ்லாத்தை ஏற்றிருக்க வில்லை)
அரசவையில் என்ன நடந்தது என்பதை அபூசுப்யான் விபரங்களை தெரிந்து கொள்வ தற்காக கொள்வோமா?இதோ அவர் கூறுகிறார்....
நாங்கள் மன்னரிடம் கொண்டு செல்லப்பட்டோம். மன்னர் கிரீடம் அணிந்த வராய் சிம்மாசனத்தில் வீற்றி ருந்தார். அவரைச் சூழ ரோம் நாட்டு அதிகாரிகள் பலரும் அமர்ந்திருந்தனர்.
மன்னர் தனது மொழிபெயர்ப்பாளரிடம், தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறிக்கொண்டிருக்கும் இந்த மனிதருக்கு (முஹம்மது நபிக்கு) இவர்களில் மிக நெருங்கிய உறவினர் யார் என்று கேளும் என கூறினார்.
அவ்வாறு கேட்கப்பட்ட போது ‘நான் அவருக்கு மிக நெருங்கிய உறவினராவேன்’ என்று கூறினேன்.
உமக்கும் அவருக்கும் (முஹம்மதுக்கும்) என்ன உறவு? எனக் கேட்டார்.
அவர் என் தந்தையின் சகோதரர் மகன் என்றேன். உடனே மன்னர்.இவரை என்னருகில் கொண்டுவாருங்கள் எனக்கூறி, என்னுடன் வந்த தேழர்களை என் முதுகுக்குப் பின்னே அணிவகுத்து நிற்கும் படி உத்தரவிட்டார்.
அவ்வாறே அவர்களை என் முதுகுக்குப் பின்னே நிறுத்தப்பட்டார்கள். பிறகு தன்னை அல்லாஹ்வின் தூதர் என கூறிக் கொண்டிருக்கும் இந்த மனிதரை (முஹம்மதை) குறித்து இவரிடம் விபரங்கள் கேட்கப் போகிறேன். இவர் பொய்சொன்னால் அதைப் பொய் என்று கூறி விட வேண்டும் என மன்னர் பணித்தார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! எனது தோழர்கள் என்னைக்குறித்து ‘இவர் பொய் சொல்கிறார்’ என்று சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் அன்று எனக்கில்லாது விட்டால், மன்னர் முஹம்மது நபியைப் பற்றி கேட்ட போது பொய் சொல்லியிருப்பேன்.
அந்த வெட்கத்தினாலயே முஹம்மது நபியைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு உண்மையைக் கூறினேன்.
மன்னர்: உங்களில் அவருடைய குலம் எப்படிப் பட்டது?
அபூசுப்யான் : அவர் எங்களிடையே உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர்.
மன்னர்: இவருக்கு முன்னால் உங்களில் யாராவது (நான் அல்லாஹ்வின் தூதர் என்ற) இந்த வாதத்தை செய்த துண்டா?
அபூசுப்யான்: இல்லை.
மன்னர்: இவர் இறைதூதர் என்ற இந்த வார்த்தையை கூற முன்பு,அவர் பொய் பேசுவதாக நீங்கள் குற்றம் சுமத்தியதுண்டா?
அபூசுப்யான்: இல்லை.
மன்னர்: இவரது முன்னோர்களில் எவராவது அரசாண்டதுண்டா?
அபூசுப்யான்: இல்லை.
மன்னர்: அவரை மக்களில் மேட்டுக் குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது பலஹீன மான வர்கள் பின்பற்றுகின்றரா?
அபூசுப்யான்: பலஹீனமானவர்கள் அவரை பின்பற்று ன்றனர்.
மன்னர்: அவரை பின்பற்றுவோர் அதிகரித்துச் செல்கின்றனரா?அல்லது குறைந்து செல்கின்ற னரா?
அபூசுப்யான்: அதிகரித்துச் செல்கின்றனர்.
மன்னர்: அவரது மார்க்கத்தை ஏற்ற பின்பு அதன் மீது அதிருப்தியுற்று யாராவது மதம் மாறிச் சென்றதுண்டா?
அபூசுப்யான்: இல்லை.
மன்னர்:இவர் வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்ததுண்டா?
அபூசுப்யான்: இல்லை. ஆனால் நாங்கள் இப்போது அவருடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உடன்படிக்கை (உதைபியா உடன்படிக்கை) செய்துள்ளோம். அதனை மீறிவிடுவாரோ என அஞ்சுகிறோம் ( அவரைப் பற்றி குறைச் சொல்லக் கூடிய இதைத்தவிர வேறொரு வார்த்தை அன்று எனக்கிருக்க வில்லை)
மன்னர்: நீங்கள் அவருடனும்,அவர் உங்களுடனும் போர் புரிந்ததுண்டா?
அபூசுப்யான்: ஆம்!
மன்னர்: உங்களது போர் முடிவுகள் எவ்வாறிருந்தன?
அபூசுப்யான்: வெற்றியும் தோழ்வியும் மாறி மாறி வந்துள்ளன.
மன்னர்: அவர் உங்களுக்கு எதனை ஏவுகிறார்.
அபூசுப்யான் : நாங்கள் அல்லாஹ் ஒருவனை மாத்திரம் வணங்கவேண்டும் அவனுக்கு எதனையும் இணைவைக் கக்கூடாது என எங்களுக்கு ஏவுகிறார். எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வங்களை நாங்கள் வணங்க கூடாது என்று எங்களைத் தடுக்கிறார். தொழுகையை நிறைவேற்றும் படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைகலப் பொருள்களை (அமானிதங்களை) பாதுகாப்பபாக திருப்பி கொடுக்கும் படியும்,எங்களுக்குக் கட்டளை யிடுகிறார்.
மன்னர் தனது சந்தேகங்களையும் விளக்கங்க ளையும் அபூசுப்யானிடம் கேட்டு தெரிந்த பிறகு பின்வருமாறு கூறினார்.
நான் உம்மிடம் உங்களிடையே முஹம்மது நபி (ஸல்) அவர்களது குலம் எப்படிப்பட்டது? எனக் கேட்டேன். அவர் உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர் என பதிலளித்தீர். (உண்மையில்) இறைதூதர்கள் உயர்குலத்தைச் சார்ந்தவர் களாகவே அனுப்பப்படுவார்கள்.
இவருக்கு (முஹம்மது நபிக்கு) முன்னர் உங்களில் எவராவது இந்த (நபித்துவ) வாதத்தை முன்வைத்த துண்டா? எனக் கேட்டேன். இல்லை என்று பதிலளித்தீர். இவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்திருந்ததாக நீர் சொல்லி யிருந்தால் தமக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் சொல் கின்ற ஒரு மனி தர் இவர் என்று நான் சொல்லியிருப்பேன்.
இவர் இந்த (நபித்துவ) வாதத்தை முன்வைப்பதற்கு முன்பு பொய் சொன்னதாக நீங்கள் குற்றம் சாட்டியதுண்டா?எனக் கேட்டேன். அதற்கு இல்லைஎன்று பதிலளித்தீர்
மக்களிடம் பொய் சொல்லாதவர் அல்லாஹ் வின் மீதும் பொய் சொல்லமாட்டர் என்று புரிந்துகொண்டேன்.
அவரது முன்னோர்களிடையே அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா? எனக் கேட்டேன். இல்லை என்று பதிலளித்தீர். அவரது முன்னோர்களிடையே அரசர் எவரும் இருந்திருப்பாராயின் தம் முன்னோர்களின் ஆட்சி அதிகாரத்தை (தாமும்) அடைய விரும்பும் ஒரு மனிதர் இவர் என்று நான் கூறியிருப்பேன்.
மக்களிடையே உயர்குலத்தை சார்ந்தவர்கள் இவரை பின் பற்றுகின்றனரா?அல்லது பலவீனர்கள் பின்பற்றுகின்றனரா? என்று கேட்டேன். பலவீனமானவர்கள் அவரை பின்பற்றுகின்றார்கள் என பதிலளித்தீர். பலவீனமானவர்கள் தான் இறைத் தூதர்களை பின்பற்றுவார்கள்.
அவரைப் பின்பற்றுவேர் குறைந்து செல்கின்றனரா? அதிகரித்துச் செல்கின்றனரா? என்று கேட்டேன் அதிகரித்துச் செல்கின்றனர் என பதிலளித்தீர். (ஆம்!) இறை நம்பிக்கை இத்தகையது தான். அது முழுமையடையும் வரை அதிகரித் துக் கொண்டே செல்லும்.
அவரது மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரில் எவராவது அதிருப்தியடைந்து அம்மார்க்கத்தி லிருந்து வெளியேறிச் சென்றதுண்டா? எனக் கேட்டேன். இல்லை என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை இத்தகையதே! அதன் எழில், இதயங்களில் கலக்கும் போது அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார்கள்.
அவர் வாக்கு மீறுவாரா?எனக் கேட்டேன் இல்லை என்று பதிலளித்தீர். இறை தூதர்கள் இத்தகையவர்களே! அவர்கள் வாக்கு மீற மாட்டார்கள்.
அவர் உங்களுடனுடம் நீங்கள் அவருடனும் போர் புரிந்ததுண்டா? எனக் கேட்டேன் போர் புரிந்ததுண்டு என்றும் எங்களுக்கும் அவருக்கு மிடையே முடிவுகள் (வெற்றி, தோழ்வி) மாறி மாறி வந்து கொண்டிருக்கும் என்றும் பதிலளித்தீர். இப்படித்தான் இறைத் தூதர்கள் சோதிக்கப் படுவார்கள். ஆனால் இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக் கும்.
உங்களுக்கு அவர் என்ன கட்டளை யிடுகிறார்? எனக் கேட்டேன்.அல்லாஹ்வை வணங்கும் படியும்,அவனுக்கு எதனையும் இணை யாக்காமல் இருக்கும் படியும்,கட்டளை யிடுகிறார். முன்னோர்கள் வணங்கி வந்த வற்றை வணங்க வேண்டாம் என்று தடுக்கிறார். தொழும் படியும், தர்மங்கள் செய்யும் படியும், கற்பை பேணி வரும் படியும், ஒப்பந்தத்தை நிறைவேற்றும் படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருட்களை பாதுகாப்பாக திருப்பி ஒப்படைக்கும் படியும் உங்களுக்கு கட்டளையிடுவதாக பதிலளித்தீர்.
எந்த இறைத்தூதர் வர இருப்பதாக நான் அறிந்திருந்தேனோ அவருடைய பண்புகள் தாம் இவைகள்! ஆனால் அவர் உங்களிலிருந்து வருவார் என்று நான் அறிந்திருக்க வில்லை.
(அபூசுப்யானே) நீர் சொன்னது உண்மையா யிருப்பின் எனது இவ்விரு பாதங்கள் பதிந்துள்ள இந்த இடத்திற்கு விரைவில் அவர் அதிபதியாவார் (ஆட்சிசெய்வார்). நான் அவரிடம் (முஹம்மது நபியிடம்) சென்றடைய முடிந் தால் நிச்சயம் நானே வலியச் சென்று அவரைச் சந்திப் பேன். அவரிடத்தில் நான் இருந்திருப்பேனே யாயின் அவரது பாதங்களை கழுவியிருப்பேன் என்று மன்னர் கூறினார்.
அதன் பின் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனுப் பிய கடிதத்தை கொண்டுவருமாறு மன்னர் உத்தரவிட்டார். கடிதம் (அரசவையில்) மன்னருக்கு (மீண்டும்) வாசித்துக் காட்டப் பட்டது.அதில் பின்வருமாறு எழுதப்பட்டி ருந்தது.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அல்லாஹ்வின் அடியானும் தூதருமாகிய முஹம்மதிட மிருந்து ரோமபுரியின் மன்னர் ஹிர்கலுக்கு!
நேர்வழியைப் பின்பற்றுபவர் மீது (இறைவனின்) சாந்தி பொழியட்டும்
நிற்க, நான் உங்களை இஸ்லாத்தை ஏற்கும் படி அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீங்கள் புறக்கணித்தால் உங்களது குடிமக்களின் பாவமும் உங் களைச் சாரும்.
வேதத்தையுடையவர்களே! நாம் அல்லாஹ்வை தவிர வேறெதனையும் வணங்கக் கூடாது அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ்வை விட்டு விட்டு நம்மில் சிலர் சிலரை கடவுளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான ஒரு கொள்கையை நோக்கி வாருங்கள். நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக நாங்கள் முஸ்லிம் கள் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக ஆகிவிடுங்கள். (அல்குர்ஆன் 3:64) என்று எழுதப்படிட்டிருந்தது.
(அபூசுப்யான் கூறுகிறார்.கடிதம் வாசிக்கப்பட்டு) மன்னர் பேசி முடிந்தவுடன் அவரைச் சுற்றிக் குழுமியிருந்த ரோம் நாட்டு அதிகாரிகளின் குரல்கள் (சப்தங்கள்) உயர்ந்து அவர்களுடைய கூச்சல்கள் அதிகரித்தன.
கூச்சல்கள் அதிகரித்த வேளையில் அவர்கள் என்ன சொன்னார்கள் என்று அறிய முடியாமல் போனது. அவையிலிருந்து எங்களை வெளியே கொண்டு செல்லுமாறு உத்தர விட்டப்பட்டது. நாங்கள் வெளியேற்றப்பட்டோம்.
எனது தோழர்களுடன் வெளியில் வந்த நான் அவர்களுடன் தனிமையில் இருந்த போது முஹம்மதின் விவகாரம் வலிமைப் பெற்றுவிட்டது. ரோம் மன்னர் அவரைக் கண்டு அஞ்சுகிறாரே என்றேன்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்ம துடைய மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பி வந்தேன். நான் இஸ்லாத்தை வெறுத்த போதும் இறுதியில் அல்லாஹ் எனது உள்ளத்திலும் இஸ்லாத்தை நுழைத்து விட்டான். (நானும் முஸ்லிமாகி விட்டேன்)
ஆதாரம் : புகாரி (06, 2940)
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்