×
New!

Bayan Al Islam Encyclopedia Mobile Application

Get it now!

இது இஸ்லாத்தின் உண்மையான நம்பிக்கை மேலும் இஸ்லாத்தில் இருந்தும் எதிர் வருகிறது (தமிழ்)

Подготовил: அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ்

இஸ்லாத்தின் உண்மையான நம்பிக்கை கோட்பாடும் அதற்கு எதிரானவைகளும்இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் விடயங்களும்

தொகுப்பு

மதிப்பிற்குரிய அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னி பாஸ் (ரஹ்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்

முகவுரை

சர்வ புகழும் அழ்ழாஹ்வுக்கே உரித்தாகட்டும்ஸலாத்தும் ஸலாமும் இறுதித்தூதரான நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாவதாக

சரியான நம்பிக்கைக் (அகீதா) கோட்பாடானது இஸ்லாமிய மார்க்த்தின் அடிப்படையாகவும் இச்சன்மார்க்கத்தின் அத்திவாரமாகவும் இருப்பதினால் எனது இச்சொற்பொழிவில் இத்தலைப்பு குறித்து உரையாற்றுவது பொருத்தமெனக் கருதுகிறேன். மிகச்சரியான இஸ்லாமிய அடிப்படைக் கோட்பட்டின் விளைவாக தோன்றும் வார்த்தைகளும் செயல்களும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது அல்குர்ஆன் அல்ஹதீஸின் ஆதாரங்களினால் அறியப்படுகின்ற விடயமாகும்.இந்த அடிப்படைக் கொள்கையின்படி அமையாத சொல் செயல்கள் வீணானவையாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் (இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன வேதம் கொடுக்கப்ட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களின் உணவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையாளர்களில் உள்ள கற்பொழுக்கமுள்ள பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டோரில் உள்ள கற்பொழுக்கமுள்ள பெண்களையும் ( நீங்கள்) கற்பொழுக்கம் பேணி விபச்சாரத்தில் ஈடுபடாமலும் வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்ளாமலும் அவர்களுக்குரிய மஹர்களை அவர்களுக்கு கொடுத்து (மணம் முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது) மேலும் எவர் நம்பிக்கைக் கொள்வதற்குப் பதிலாக நிராகரிக்கிறாரோ அவருடைய செயல் நிச்சயமாக அழிந்து போகும் மேலும் அவர் மறுமையில் நஷ்டவாளிகளில் உள்ளவராவார்) (அல் மாயிதா :5) மேலும் அழ்ழாஹ் கூறுகிறான் (நபியே) நீர் இணைவைத்தால் நிச்சயமாக உமது செயல்கள் அழிந்து விடும் மேலும் நீர் நஷ்டவாளர்களில் ஆகிவிடுவீர் என உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் நிச்சயமாக வஹி அறிவிக்கப்பட்டது) (அஸ்ஸுமர் : 65) இதே கருத்தைக் கொண்ட இன்னும் அதிகமான வசனங்கள் உள்ளன. அல்லாஹ்வையும் அவனது மலக்குகளையும்அவனால் இறக்கியருளப்பட்ட வேதங்களையும் அவனால் அனுப்பப்பட்ட தூதர்களையும் மேலும் நன்மையும் தீமையும் இறை விதியின் அடிப்படையிலேயே நிகழும் என ஈமான் கொள்வதுதான் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைக் கோட்பாட்டில் உள்ளடங்கியுள்ள விடயம் என்பதை இறைவேதமும் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவும் காட்டித்தருகிறது.ஆகவே இந்த ஆறு விடயங்களும் சரியான நம்பிக்கைக் கோட்பாட்டின் அடிப்படைகள் என அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்ட இறைவேதமும் அவனினால் அனுப்பப்பட்ட அவனின் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களின் கூற்றுக்களும் குறிப்பிடுகின்றன மறைவான விடயங்களில் ஈமான் கொள்ளவேண்டியவை தொடர்பாகவும் அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்த மற்ற அனைத்து விடயங்களும் இந்த அடிப்படைகளிலிருந்தே தோன்றுகின்றன இந்த ஆறு அடிப்படை விடயங்களுக்கான ஆதாரங்கள் அல் குர்ஆனிலும் நபிவழியிலும் மிக அதிகமாகக் காணப்படுகின்றன அவற்றுள் சில பின்வருமாறு (கிழக்கு மேற்குப் பக்கம் உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மையாகாது மாறாக அல்லாஹ்வையும் இறுதி நாளையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் ஈமான் கொள்வது நன்மையான விடயமாகும்) (அல்பகரா : 177) மேலும் அல்லாஹ் கூறுகிறான் (இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார் முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர் அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டுள்ளனர் அவனின் தூதர்கள் எவருக்கிடையிலும் நாம் வேறுபாடு காட்டமாட்டோம்) (அல் பகரா : 285) தொடர்ந்தும் அல்லாஹ் கூறுகிறான் (நம்பிக்கை கொண்டோரே !அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் அவன் தனது தூதருக்கு இறக்கி வைத்த வேதத்தையும், அதற்கு முன் அவன் இறக்கி வைத்த வேதத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வையும் அவனது வானவர்களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும்; இறுதி நாளையும் நிராகரிக்கின்றானோ நிச்சயமாக அவன் மிகப்பெரும் வழிகேட்டில் சென்று விட்டான் 136) ( அந்நிஸா : 136) தொடர்ந்தும் அல்லாஹ் கூறுகிறான் நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நன்கறிகிறான் என்பதை நீ அறியவில்லையா? நிச்சயமாக இவை (லவ்ஹுல் மஹ்பூல் எனும் ) ஏட்டில் உள்ளது நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகும் 70) (அல் ஹஜ் : 70) இவ்வடிப்படைகளுக்கு ஆதாரமாக அமையும் ஸஹீஹான ஹதீஸ்கள் அதிகமாக உள்ளன. அவற்றுள் இமாம் முஸ்லிம் அவர்கள் பதிவு செய்துள்ள அமீருல் முஃமினீன் உமர் (ரழி)அவர்களினால் அறிவிக்கப்பட்ட ஹதீஸ் முக்கியமானதாகும். அதில் ஜீ;ப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களிடம் ஈமான் குறித்து கேட்டார்கள் அதற்கு நபி ஸல்) அவர்கள்((அல்லாஹ்வையும் அவனின் மலக்குகளையும் அவனின் வேதங்களையும் அவனின் தூதர்களையும் மறுமைநாளையும் ஈமான் கொள்வதும் மேலும் நன்மை தீமை யாவும் இறைவிதியின் அடிப்படையில் நிகழும் என்றும் ஈமான் கொள்வதாகும் என்று பதிலளித்தார்கள்(1) ஹதீஸ் இந்த ஹதீஸை இமாம்களான புஹாரியும் முஸ்லிமும் அபூஹுரைராவின் ஹதீஸ்களில் ஒன்றாக பதிவு செய்துள்ளனர். இந்த ஆறு அடிப்டைகளிலிருந்துதான் ஒரு முஸ்லிம் அல்லாஹ் மற்றும் மறுமை தொடர்பாகவும் அது அல்லாத மறைவான விடயங்கள் குறித்தும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியமான விடயங்கள் பிரிந்து செல்கின்றன.

அல்லாஹ்வை நம்புதல் ( ஈமான் கொள்ளுதல்)

வணங்குவதற்கு மிகத்தகுதியான உண்மையான கடவுள் அல்லாஹ் வைத் தவிர வேறு எவரும் இல்லை என ஈமான் நம்பிக்கை கொள்வதே அல்லாஹ்வை நம்புதல் என்பதன் கருத்தாகும்

வணங்குவதற்கு மிகத்தகுதியான உண்மையான கடவுள் அல்லாஹ்த் தவிர வேறு எவரும் இல்லை என ஈமான) நம்பிக்கை கொள்வதற்கான காரணம் அவனே அடியார்களைப்படைத்து அவர்களுக்கு நன்மை புரிந்து அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு பொறுப்பேற்று அவர்களின் அந்தரங்கமான வெளிப்படையான விடயங்களை அறிந்திருப்பவனும் மேலும் அவர்களில் அவனுக்கு கட்டுப்பட்டு நடப்பவனுக்கு நற்கூலி வழங்கி அவர்களில் மாறு செய்வோருக்கு தண்டனை வழங்குபன் என்தினாலாகும். இவ்வாறு தனக்கு கட்டுபட்டு வணங்கவே அல்லாஹ் மனித ஜின் இனங்களை படைத்து அவர்களுக்கு இதனை கட்டளையிட்டுள்ளான். அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான் (ஜின்களையும்,மனிதர்களையும் என்னை வணங்குவதற்கே தவிர(வேறெதற்காகவும்)நான் படைக்கவில்லை) (அத்தாரியாத் :56) (அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நான் விரும்பவில்லை இன்னும் அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் எனவும நான் விரும்பவில்லை) (அத்தாரியாத் :57) (நிச்சயமாக அல்லாஹ்வே வாழ்வாதாரத்தைத் தருபவனும் பலமிக்கவனும் உறுதியானவனுமாவான்) (58) (அத்தாரியாத் :57) மேலும் அழ்ழாஹ் குறிப்பிடுகிறான் (மனிதர்களே நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் பொருட்டு உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இரட்சகனையே வணங்குங்கள்) (21 ) அல்பகரா(21) (அவனே உங்களுக்குப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் அமைத்தான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக வெளிப்படுத்தினான். ஆகவே நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்தாதீர்கள்) (அல் பகரா : 22) ஆகவே இந்த சத்தியத்தை தெளிவு படுத்தி அதன் பால் அழைக்கவும் இதற்கு எதிரான மற்றும் முரணானவைகளை விட்டு எச்சரிக்கை செய்யவுமே அல்லாஹ் தூதர்களை அனுப்பி வேதங்களை இறக்கியருளினான். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் (மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், 'அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்,(அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் அனைத்து) ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்). (அன்நஹ்ல் : 36) மேலும் அல்லாஹ் கூறுகிறான் (உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், ''நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹ்யி அறிவிக்காமலில்லை). (அல் அன்பியா :25) மேலும் அல்லாஹ்கூறுகிறான் (அலிப் லாம் றா இது இறை வேதமாகும் இதன். வசனங்கள் நேர்த்தியாக சீரமைக்கப்பட்டு பின்னர் யாவற்றையும் அறிந்த ஞானமிக்கவனிடமிருந்து அவை விபரிக்கப்பட்டுள்ளன) (அல்லாஹ்வை அன்றி (வேறு யாரையும) நீங்கள் வணங்காதீர்கள் நிச்சயமாக நான் உங்களுக்கு அவனிடமிருந்து எச்சரிக்கை செய்பவனும் நன்மாராயம் கூறுபனுமாவேன்) (ஹூத் : 1-2) வணக்கத்தின் உள்ளார்ந்த யதார்த்தமானது அடியார்கள் புரியும் வணக்கங்கள் யாவற்றிலும் அல்லாஹ்வை தனித்துவப்படுத்துவதில்தான் உள்ளது. அவை பிரார்த்தனை செய்தல், பயப்படுதல், ஆதரவு வைத்தல், தொழுதல், நோன்புநோற்றல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் போன்றவைகளிலும் அவைகள் அல்லாதவற்றிலும் இருக்க முடியும் இவ்வாறான இபாதத்துகளில் (வணக்கங்களில்) அல்லாஹ்வை முழுப்பற்றுக்கொண்டு அவனின் மகத்துவத்திற்கு பணிந்து அவனிடமே ஆதரவும் மதிப்பச்சமும் கொள்வதாகும். அல் குர்ஆனின் பெரும்பாலான வசனங்கள் இக்கருத்தை பிரதிபளித்து அருளப்பட்டுள்ளது என்பதை பின்வரும் வசனங்கள் காட்டுகின்றன. (அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு உளத்தூய்மையோடு வணங்குவீராக!) தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்) (அஸ்ஸுமர் : 2-3) தொடர்ந்தும் அல்லாஹ்கூறுகிறான் (உனது இரட்சகனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என உனது இரட்சகன் கட்டளையிட்டுள்ளான்) (அல் இஸ்ராஉ 23) மேலும் அல்லாஹ்கூறுகிறான் (ஆகவே நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களாக உளத்தூய்மையோடு பிரார்தனை செய்வீர்களாக) (ஹாபிர் :14) மேலும் இது குறித்து முஆத் (ரழி) அவர்கள் மூலம் அறிவித்த ஹதீஸ் புஹாரியிலும் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது ((அல்லாஹ்வுக்கு அடியார்கள் செய்ய வேண்டியது, அவனை உரிய முறையில் வணங்குவதும் அவனுக்கு எதனையும் இணைவைக்காது இருப்பதுமாகும்)) என நபி (ஸல்;) அவர்கள் கூறினார்கள் (2)

தனது அடியார்களின் மீது அல்லாஹ் விதியாக்கி கடமையாக்கிய இஸ்லாத்தின் வெளிப்படையான ஐம்பெரும் கடமைகளை விசுவாசம் கொள்ளுதல் (நம்புதல்)

அடியார்களின் மீது அல்லாஹ் விதியாக்கி கடமையாக்கியுள்ள இஸ்லாத்தின் வெளிப்படையான ஐம்பெரும் கடமைகளை நம்புவதும் அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் உள்ள ஓர் அம்சமாகும். அவைகளாவன அல்லாஹ்வைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லையெனவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரெனவும் சாட்சி கூறுவது தொழுகையை நிலைநாட்டுவது ஸகாத்தைக் கொடுப்பது றமழான் மாதத்தில் நோன்பு நோற்பது வசதி வாய்ப்பை பெற்றவர் அல்லாஹ்வின் புனித ஆலயத்தை தரிசித்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவது மேலும் இஸ்லாத்தின் புனித ஷரீஆ குறிப்பிடுகின்ற ஏனைய கட்டாய கடைமைகள் யாவும் இதில் உள்ளடங்குபவையாகும்.

அல்லாஹ்த் தவிர உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லையெனவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரெனவும் சாட்சி கூறுவதுமே இவ்வடிப்படைகளுள் மிக பிரதானமானதும் மிக மேலானதுமான விடயமாகும். அதாவது அல்லாஹ்வைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லையெனச் சான்றுபகர்வதும் அல்லாஹ்விற்கு மாத்திரம் வணக்கங்களை செலுத்தி அவனல்லாதவைகளுக்கு வணக்கங்களை செலுத்துவுதை விலக்கிக்கொள்வதையுமே இவ்வார்த்தைகள் வேண்டி நிற்கின்ற 'லாஇலாஹ இல்லழ்ழாஹ்வின் கருத்தாகும் இதன் விரிவான கருத்தாவது; உண்மையாக வணங்கப்படக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாறும் இல்லை என்பதாகும் அல்லாஹ்வை தவிர வணங்கப்படக்கூடிய மனிதன், மலக்கு, ஜின் அவை அல்லாதவைகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பான தவறான கடவுள்களாகும். உண்மையாக வணங்கப்படக்கூடியவன் அல்லாஹ் மாத்திரமே இது குறித்து அல்லாஹ்பின்வருமாறு குறிப்பிடுகிறான் (நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன் மேலும் அவனையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்பது போலியானதாகும்) (அல் ஹஜ் : 62) இவ்வடிப்படைக்காகவே மனித ஜின் இனங்களைப் படைத்து, அவர்களுக்கு கட்டளை பிரப்பித்து, நபிமார்களை அனுப்பி, வேதங்களை இறக்கினான் என்ற விபரம் ஏற்கனவே விபரிக்கப்பட்டுவிட்டது. அதிகமான முஸ்லிம்கள் இவ்வடிப்படை பற்றிய அறியாமையின் காரணமாக அல்லாஹ்வுடன் ஏனையவற்றையும் இணைத்து வணங்குவதை இது குறித்து சிந்திக்கின்ற போது அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அல்லாஹ்வுக்குரிய முழுமையான உரிமையை அவனல்லாதவற்றிற்கு கொடுத்து விட்டனர் அல்லாஹ்வே இதிலிருந்து பாதுகாத்து உதவி செய்யப் போதுமானவன்.

அல்லாஹ்வே இப்பிரபஞ்சத்தைப் படைத்தவன் அதன் விவகாரங்களை திட்டமிடுபவன் அவனது அறிவாலும் வல்லமையாலும் அவனின் விருப்பப் படி நடாத்திச் செல்பவன் என நம்புதல்.

அல்லாஹ்வே இப்பிரபஞ்சத்தைப் படைத்தவன் அதன் விவகாரங்களை திட்டமிடுபவன் அவனது அறிவாலும் வல்லமையாலும் அவனின் விருப்பப் படி நடாத்திச் செல்பவன் என நம்புதல். இம்மை மறுமை விமோசனத்தை அடைந்து கொள்ளதற்கு அதன் பால் அழைப்புவிடுத்து அடியார்களை சீர்திருத்துவதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்பி வேதங்களை இறக்கிவைத்தான். அல்லாஹ் கூறுவது போன்று இந்த விடயங்கள் அனைத்திலும் அவனுக்கு இணையாக எவரும் கிடையாது (அல்லாஹ்வே அனைத்துப் பொருட்களினதும் படைப்பாளன் மேலும் அவை யாவற்றிற்கும் அவனே பொறுப்பாளான்) ( அஸ்ஸுமர் : 62) மேலும் அல்லாஹ் கூறுகிறான் (நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) அமர்ந்தான் அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும்,சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்)அவனது கட்டளைக்கு கட்டுப்பட்டவையாக படைத்தான். (படைத்தலும்)படைப்பினங்களும்(அவற்றின்) ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து,வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன்) ( அல் அஃராப் : 54)

அல்லாஹ்வின் திருநாமங்களையும் உயர் பண்புகளையும் திரிபுபடுத்தாமலும் மறுக்காமலும் அமைப்பைக் கூறாமலும் உதாரணம் கூறாமலும் விசுவாசித்தல்

புனித அல்குர்ஆனிலும் அவனின் தூதரின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்ட அல்லாஹ்வின் திருநாமங்களையும் உயர் பண்புகளையும் திரிபுபடுத்தாமலும் மறுக்காமலும் அமைப்பைக் கூறாமலும் உதாரணம் கூறாமலும் நம்புதல் ஈமான் சார்ந்த விடயமாகும். அதாவது அல்லாஹ்வின் திருநாமங்களை அதன் வடிவத்தை( அமைப்பை) கூறாது அவை உள்ளடக்கியுள்ள உயர் கருத்துக்களை இருப்பது போன்றே ஈமான் கொள்வது அவசியமாகும். ஏனெனில் அவ்வுயர் திருநாமங்கள் பொதிந்துள்ளவை அவனின் பண்புகள் என்பதை தெரிந்து கொள்ளல் வேண்டும் மேலும் அவற்றை அல்லாஹ் குறிப்பிடுவது போன்று அவனின் படைப்புகளுக்கு ஒப்பாக்காது அவனுக்குத் தகுதியான முறையில் வர்ணிப்பது அவசியமாகும். (அவனைப்போன்று எதுவுமில்லை அவன் யாவற்றையும் கேட்பவன்; யாவற்றையும் பார்ப்பவன்). (அஷ்ஷூரா :11) மேலும் அல்லாஹ்கூறுகிறான் (ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறவேண்டாம். நிச்சயமாக அழ்ழாஹ் நன்கறிபவன் நீங்கள் அறியமாட்டீர்கள்) அன் நஹ்ல் (74) இது தான் நபித்தோழர்களினதும் அவர்களின் வழியை நல்ல முறையில் பின்பற்றியோரான அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நம்பிக்கை கோட்பாடாகும். இதைத்தான் 'அல்மகாலாத் அன் அஸ்ஹாபில் ஹதீஸ் வஅஹ்லிஸ்ஸுன்னா' என்ற நூலில் இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரிய் அவர்களும் ஏனைய அறிஞர்களும் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளனர் அல்அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ஸுஹ்ரியிடமும் மக்ஹூலிடமும் அல்லாஹ்வின் பண்புகள் பற்றிய அல்குர்ஆனிய வசனங்ள் குறித்து கேட்கப்பட்ட போது அது எவ்வாறு வந்துள்ளதோ அதை அவ்வாறே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள் அல் வலீது இப்னு முஸ்லிம்(ரஹ்) கூறுகிறார்கள். மாலிக், அல் அவ்ஸாயீ, லைஸ் இப்னு ஸஃது, சுப்யானுஸ் ஸெளரீ(ரஹ்) ஆகியோரிடம் ; அல்லாஹ்வின் பண்புகள் குறித்து வந்துள்ள ஹதீஸ்களைப் பற்றிக் கேட்கப்பட்ட போது, அவர்கள் அனைவருமே அவை எப்படி என்பதுபற்றி ஏதும் கூறாமல் அவை எவ்வாறு வந்துள்ளதோ, அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்கள். மேலும் அவ்ஸாயீ( ரஹ்) கூறுகிறார்கள். நாமும் தாபியீன்களில் பெரும்பாலானோரும் அல்லாஹ் தன் அர்ஷின் மீதானான் என்றே கூறுகிறோம் மேலும் ஹதீஸ்களில் கூறப்பட்ட அல்லாஹ் வின் பண்புகளையும் நம்பிக்கை கொள்கிறோம் என்றே கூறக்கூடியவர்களாக இருந்தோம் மாலிக்(ரஹ்) அவர்களின் ஷைக் ரபீஆ இப்னு அபூ அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் 'அல் இஸ்திவா'(அல்லாஹ் அர்ஷின் மீதாகுதல்) பற்றிக் கேட்கப்பட்டபோது 'அல் இஸ்திவா (என்ற வார்த்தை) யாவரும் அறிந்த விடயமாகும் அது எவ்வாறு என்பதுதான் அறிவுக்கு எட்டாதது! அல்லாஹ்விடமிருந்து தூது கிடைக்கப்பெற்றுள்ளது அதை (அப்படியே) அறிவிப்பது ரஸுல் (ஸல்) அவர்களது கடமை அதை உண்மை என நம்புவது நம்மீது கடமை எனக் குறிப்பிட்டார்கள் இது பற்றி மாலிக்(ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டபோது 'அல் இஸ்திவா' என்பது எல்லோராலும் அறியப்பட்டவிடயமாகும் அது எவ்வாறு என்பது யாரும் அறியாத விடயமாகும் அப்படி ஒரு பண்பு ;அல்லாஹ்வுக்கு உள்ளது என நம்புவது நமது கடமை. அது பற்றி தேவையற்ற கேள்வி கேட்பது பித்அத் எனும் வழிகேடு என பதிலளித்தார். பின்னர் இந்தக் கேள்வி கேட்டவரைப் பார்த்து நீ ஒரு மகாகெட்ட மனிதன் எனக் காண்கிறேன் என்று கூறி அவரை வெளியேற்றுமாறு உத்தரவிட அவரை அங்கிருந்தவர்கள் வெளியேற்றிவிட்டனர். முஃமின்களின் தாயாகிய உம்முஸலமா(ரழி) அவர்கள் மூலமும் இதே கருத்து அறிவிக்கப்பட்டுள்ளது இமாம் அபூஅப்திர் ரஹ்மான் இப்னுல் முபாரக் (ரஹ்)அவர்கள் குறிப்பிடும் போது எங்கள் இரட்சகன் வானங்களுக்கு மேலால் அமைந்துள்ள அர்ஷின்மேல் தனது படைப்பினங்களிலிருந்து வேறுபட்டவனாக உள்ளான் என எங்கள் இரட்சகன் பற்றி நாம் அறிந்துவைத்துள்ளோம் என்றார்கள் அல்இஸ்திவா குறித்த இத்தலைப்பு பற்றி அறிஞர்களின் கருத்துக்கள் அதிகமாக உள்ளன. இவ்வுரையில் அவையனைத்தையும் குறிப்பிடுவது முடியாத விடயமாகும் யாராவது அவற்றை அறிய விரும்பினால் நபி வழியில் நடந்த இஸ்லாமிய பேரறிஞர்கள் எழுதியவற்றைப் பார்வையிடவும் உதாரணமாக,; இமாம் அஹ்மது (ரஹ் )அவர்களின் மகன் அப்துல்லாஹ் அவர்களின், 'அத்தௌஹீது', அபுல் காஸிம் அல்--லாலகாயி அத்தபரீ அவர்கள் எழுதிய அஸ்ஸுன்னா', அபூபக்கர் இப்னு; அபூ ஆஸிம் அவர்கள் எழுதிய 'அஸ்ஸுன்னா' ஆகிய நூல்களையும், 'ஹமாத் வாசிகளுக்கு ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் அளித்த பதில் ஆகியவற்றையும் பார்வையிடவும் அது அதிகம் பயனுள்ள ஒரு பதிலாகும் அதில் அவரகள் அஹ்லுஸ்ஸுன்னாவினரின் அகீதா (நம்பிக்கை கோட்பாடு) பற்றி மிகவும் சிறந்த முறையில் தெளிவுபடுத்தியுள்ளார் அது மாத்திரமல்லாது நன்நெறிசார்ந்த முன்னோர்களான- ஸலபுஸ்ஸாலிஹீன்களில் உள்ள அறிஞர்களின் கூற்றுக்களையும் மேற்கோள் காட்டியுள்ளதுடன் அஹ்லுஸ்ஸுன்னாக்காளின் நிலைப்பாடு சரி என்பதற்கு ஷரீஆ ரீதியிலானதும் பகுத்தறிவுரீதியிலானதுமான ஆதாரங்களை முன்வைத்துள்ளதுடன் இதற்கெதிரான நிலைப்பாடு கொண்டோரின் கூற்றுக்கள் பிழையானது என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார் மேலும் அவரின் அத்ததம்முரிய்யா என்ற நூலில் அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாக்களின் கருத்தை மார்க்க அடிப்படையிலும் அறிவு ரீதியாகவும் விரிவாகவும் விளக்கியுள்ளார் உண்மை வெளிப்படும் வகையிலும் அசத்தியத்தை நிர்மூலமாக்கும் வகையிலும் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு அதிலே மறுப்புக்களை வழங்கியுள்ளார் அவர்கள் எந்தப் பண்புகளை ஏற்று எவற்றை மறுக்கிறார்களோ அவற்றில் அவர்களின் முரண்பாட்டை தெளிவாக்கியுள்ளார் யாராவது ஒருவர் நல்லெண்ணத்துடனும் சத்தியத்தை அறியும் நோக்கிலும் இந்நூலில் உள்ளவற்றை அவதானித்தால் அவர் இப்பேருண்மையை அறிந்து கொள்வார். அஹ்லுஸ்ஸுன்னாக்களைப் பொருத்தவரை அவர்கள் அல்லாஹ் தனது வேதத்தில் தனக்கென்று எப்பண்புகளும் பெயர்களும் இருப்பதாக உறுதிப்படுத்தி கொண்டானோ அவற்றையும், அவனின் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது வழிமுறையில் -ஸுன்னாவில் அல்லாஹ்வுக்கு இருப்பதாக உறுதிப்படுத்திய விவரித்த பெயர்கள் பண்புகள் அனைத்தையும் அப்படியே நம்பிச் செயல்படுவார்கள் அவர்கள் அல்லாஹ்வின் ஸிபாத்துகளுள் -பண்புகளுள-; எதையும் இல்லை என்று மறுக்காமலும் அவனது படைப்புக்களுள் எதனுடனும் அவனை ஒப்பிடாமலும் அவனை தூய்மைப் படுத்துவார்கள் மேலும் அவர்கள் இது தொடர்பான எல்லா ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தியதானால் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்ளாது; வெற்றி பெற்றனர் தூதர்கள் மூலம் அனுப்பப்பட்ட சத்தியத்தை உரிய விதத்தில் பின்பற்றி இதயசுத்தியோடு உழைப்போருக்கு அல்லாஹ் சத்தியத்தை தெரிந்து கொள்வதற்கான நல்வாய்ப்பை வழங்குவதும் அவனின் சான்றாதாரங்களை வெளிப்படுத்துவதும் அல்லாஹ்வின் விதியாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இது பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது (மாறாக நாம் சத்தியத்தின் மூலம் அசத்தியத்தை தெளிவுபடுத்துகிறோம் அதனால் அது அசத்தியத்தை பலமாக தாக்கி அடக்கி விடுகிறது அப்பொழுது அது முற்றாக அழிந்தும் விடுகிறது) (அல் அன்பியா :18) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: (உம்மிடம் அவர்கள் எந்த உதாரணத்தைக் கொண்டுவந்த போதும் நாம் சத்தியத்தையும் (அதைவிட) அழகான விளக்கத்தையும் உம்மிடம் கொண்டுவராமல் இல்லை) 331) (அல் புர்க்கான் :33) (உங்கள் இரட்சகனான அல்லாஹ் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் பின்னர் அர்ஷின் மீதானான் )அல்அஃராப் -54 என்ற அல்லாஹ்வின் திருவசனத்திற்கு அல்ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் அவரின் பிரபல்யமான அல் குர்ஆன் விரிவுரையில் இத்திருவசனம் குறித்து மிகவும் சிறந்த ஒரு கருத்தை குறிப்பிடுகிறார். இவ்விடத்தில் அதன் மிகப் பெரும் பயன் கருதி குறிப்பிடுவது பொருத்தம் எனக் கருதுகிறேன். இமாம் இப்னு கதீர் அவர்களின் கூற்று பின்வருமாறு; இந்த விடயம் குறித்து அதிகமான கருத்துக்கள் மக்களிடம் (அறிஞர்களிடம்) காணப்படுகின்றன அவற்றையெல்லாம் இவ்விடத்தில் விரிவாக குறிப்பிட்டு எழுதுவதற்குரிய இடமல்ல என்பதால் இவ்விடயத்தில் நன்நெறிசார்ந்த ஸலபுகளான இமாம் மாலிக், அவ்ஸாஈ, ஸவ்ரி, லைஸ் இப்னு ஸஃத்,ஷாபிஈ, அஹ்மத், இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி போன்றோரினதும், ஸலபுகளின் கருத்தில் வாழ்ந்து மறைந்த வாழந்து கொண்டிருப்போரின் வழிமுறையே எமது வழிமுறை என்பதை குறிப்பிடுகிறோம். அதாவது 'அல் இஸ்திவா' என்ற பண்பு இருப்பதை மறுக்கமாலும் உவமைகூறாமலும் அமைப்பைக் கூறாமலும் அதனை ஏற்றுக் கொள்வதாகும். அல்லாஹ்விற்கு உவமைக்கற்பிப்போரின் கற்பனையில் உதிக்கும் விடயங்களைவிட்டும் அல்லாஹ் மிகவும் தூய்மையானவன். அவன் படைப்பினங்களில் எதற்கும் ஒப்பானவனாக இல்லை அவனைப்போன்று எதுவுமில்லை அவன் நன்கு செவிமடுப்போனாகவும் எல்லாவற்றையும பார்ப்பவனாகவும் உள்ளான் என்ற விடயமே வெளிப்படையான உறுதியான விடயமாகும். மேலும் இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் ஆசிரியரான நுஅய்ம்; இப்னு ஹம்மாத் அல் ஹுஸாஇய்யி (ரஹ்) அவர்கள் கூறுவது போல்; அல்லாஹ்வின் படைப்பினங்களுடன் அல்லாஹ்வை ஒப்பிடுபவன் இறை நிராகரிப்பாளனாவான். அல்லாஹ் தனக்குரிய பண்புகளில் எவற்றை கொண்டு தன்னை வர்ணித்துள்ளானோ அவற்றை மறுப்பவன் காஃபிராவான். (இறை நிராகரிப்பாளனாவான்) அல்லாஹ் வும் அவனது தூதரும் அல்லாஹ் வுக்கு என்ன பண்புகள் இருப்பதாக வர்ணித்தார்களோ அவற்றில் எந்த ஒப்பு உவமையும் கிடையாது தெளிவான அல் குர்ஆன் வசனங்களிலும் உறுதியான நபி மொழிகளிலும் வந்துள்ளபடி, அல்லாஹ்வுக்கு தகுதியான முறையில் குறைகளை விட்டும் அவனைப் பரிசுத்தப் படுத்தி, அவனது பண்புகளை கூறக் கூடியவர்கள் தாம் நேர்வழியில் நடப்போராவர்.

வானவர்(மலக்கு)களை நம்புதல் ( ஈமான் கொள்ளுதல்)

வானவர்க(மலக்குக)ளை ஈமான் கொள்வது என்பது அவர்கள் குறித்து விரிவாகவும் சுருக்கமாகவும் நம்புவது என்ற இரு விடயங்களை உள்ளடக்கியுள்ளதுஅல்லாஹ் தனக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்காக அவர்களைப்படைத்துள்ளான். அவர்கள் சங்கைமிகு அடியார்கள் பேச்சால் அவனை முந்தமாட்டார்கள் அவனது கட்டளைக்கேட்பவே அவர்கள் செயல்படுவார்கள் அல்குர்ஆன் இவர்கள் குறித்து பின்வருமாறு கூறுகிறது: (அவர்களுக்கு முன்னால் உள்ளவற்றையும் அவர்களுக்கு பின்னால் உள்ளவற்றையும் அவன் நன்கு அறிவான் அவன் பொருந்திக்கொண்டவருக்கேயன்றி வேறு எவறுக்கும் அவர்கள் பரிந்துரை செய்யமாட்டார்கள். மேலும் அவர்கள் அவன்மீதுள்ள அச்சத்தினால்; நடுங்குபவர்களாகவும் இருக்கின்றனர்) (அல் அன்பியா :28) அவர்களில் பல பிரிவினர் உள்ளனர்; அவர்களுள் அழ்ழாஹ் வின் அர்ஷைச் சுமப்பதற்கும் சுவர்க்க நரகத்தின் காவலர்களாக சிலரும் மற்றும் சிலர் அடியார்களின் செயல்களைக் கண்காணிக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்வும் அவனது ரஸூலும் பெயர் குறிப்பிட்டுக் கூறியுள்ள ஜிப்ரீல் மீக்காயில் நரகைக் காக்க நியமிக்கப்பட்ட மாலிக்ஸூர் ஊதுவதற்கென்று நியமிக்கப்பட்டுள்ள இஸ்ராபீல் ஆகியோரை விரிவான முறையில் நாம் நம்பவேண்டும். இவர்கள் குறித்த ஆதார்பூர்வமான பல ஹதீஸ்கள் வந்துள்ளன.அவற்றுள் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட ஹதீஸ் ஸஹீஹ் (முஸ்லிமில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. "வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்"கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார்" இமாம் முஸ்லிம் தனது ஸஹீஹில் பதிவு செய்துள்ளார்.

இறை வேதங்களை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்)

இதே போன்றுதான் அல்லாஹ் மக்களைத் தனது நேரான பாதையை நோக்கி அழைக்கவும், உண்மையை விளக்கவும் தன் தூதர்களுக்கு வேதங்களை இறக்கி அருளினான் என இறைவேதங்கள் குறித்து சுருக்கமாக ஈமான் கொள்ளவது அவசியமாகும்இது பற்றி பின்வருமாறு அல்லாஹ் குறிப்பிடுகிறான் (நிச்சயமாக நாம் எமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மனிதர்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக தராசையும் இறக்கினோம்) (அல் ஹதீத்: 25) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்) (அல் பகரா : 213) தௌராத், இன்ஜீல், ஸபூர், அல்குர்ஆன் போன்ற அல்லாஹ் பெயர் குறிப்பிட்டுக் கூறிய வேத நூல்களை விரிவான முறையில் விசுவாசிப்போம். அவைகளுள் அல்குர்ஆன் தான் அவை அனைத்தையும் விட மிகவும் சிறந்ததும்;இறுதியானதுமாகும். மேலும் அல்குர்ஆன் அவற்றை மிகைக்கக் கூடியதாகவும் உண்மைப்படுத்தக் கூடியதுமாக விளங்குகின்றது. அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களையும் பின்பற்றி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது சமுதாயத்தில் அனைவர் மீதுள்ள கடமையாகும் ஏனெனில் அல்லாஹுதஆலா முஹம்மத் நபி(ஸல்) அவர்களை ஜின்,மனித இனங்களுக்கு பொதுவாக அனுப்பி வைத்தான் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்கு அல்குர்ஆனை அவர்கள் மீது இறக்கி வைத்தான் மேலும் உள்ளத்திற்கான நோய்நிவாரணியாகவும் எல்லாவற்றுக்கும் தெளிவான விளக்கமாகவும் விசுவாசிகளுக்கு அருட்கொடையாகவும் நேர்வழியாகவும் அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியுள்ளான் இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் (இது நாம் இறக்கிய அருள்பொதிந்த வேதமாகும் ஆகவே, நீங்கள் இதனையே பின்பற்றுங்கள் மேலும் நீங்கள் அருள்செய்யப்படும் பொருட்டு ( அல்லாஹ்வைப்) பயந்து கொள்ளுங்கள்) (அல் அன்ஆம் :155) மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் (எல்லாவற்றுக்கும் விளக்கமாகவும் முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும்,அருளாகவும், நேர்வழியாகவும் இவ்வேதத்தை உம்மீது நாம் இறக்கி வைத்தோம்) (அன்நஹ்ல் : 89) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: (நபியே நீங்கள் கூறுங்கள் மனிதர்களே ! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்குமான அல்லாஹ்வின் தூதராவேன் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியன (உண்மையாக) வணங்கப்படத்தகுதியானவன் அவனைத்தவிர வேறு யாருமில்லை. அவனே உயிரளித்து மரணிக்கச் செய்கிறான். (என்று நபியே நீர் கூறுவீராக)ஆகவே நீங்கள் அல்லாஹ்வையும் எழுத்தறிவற்ற உம்மி நபியாகிய அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள் அவரும்அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்பபிக்கை கொள்கிறார்கள் நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அவரையே பின்பற்றுங்கள்) (அல அஃராப் : 158) இதே கருத்தில் அதிகமான திரு வசனங்கள் வந்துள்ளன

இறைத்தூதர்களை நம்புதல் (ஈமான் கொள்ளல்)

இது போலவே சுருக்கமாகவும் விரிவாகவும் இறைத் தூதர்களை நம்புவதும் கடமையாகும். அல்லாஹ் தனது அடியார்களிடம் சில தூதுவர்களை நன்மாறாயம் கூறக்கூடியவர்களாகவும்,அச்சமூட்டி எச்சரிக்கைசெய்பவர்களாகவும்,உண்மையின் பக்கம் அழைக்கக் கூடியவர்களாகவும் அனுப்பியுள்ளான். எவர் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்களோ அவர்கள் நற்பாக்கியத்தால் வெற்றி பெற்றனர். எவர் அவர்களுக்கு மாறு செய்தார்களோ அவர்கள் கைசேதமடைந்தவர்களாகவும் நஷ்டப்பட்டவர்களாகவும் ஆகிவிட்டனர். அவ்விறைத்தூதர்களுள் இறுதியானவரும் மிகச்சிறப்புக்குரியவரும் எமது நபி முஹம்மது இப்னு அப்தில்லாஹ் (ஸல்) அவர்களாவார்கள். அல்லாஹ் இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறான் (அல்லாஹ்வை வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்)தாகூத்தை விட்டும் விலகிக்கொள்ளுங்கள் எனக்கூறும் தூதரை நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அனுப்பிவைத்தோம் (அன்நஹ்ல் : 36) மேலும் அல்லாஹ் கூறுகிறான் (அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு யாதொரு வழியும் இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப் பின்னரும் பல தூதர்களை (சுவர்க்கத்தைக் கொண்டு) நற்செய்தி கூறுகின்றவர்களாகவும், (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (நாம் அனுப்பி வைத்தோம்) (அந்நிஸா : 165) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: (முஹம்மத் அவர்கள் உங்களது ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை எனினும் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கின்றார்கள்) (அல் அஹ்ஸாப் : 40) நபிமார்களில் அல்லாஹ் பெயர் குறிப்பிட்டுக் கூறிய அல்லது நபி(ஸல்) அவர்களால் பெயர் குறிப்பிடப்பட்ட நூஹ், ஹூத், ஸாலிஹ், இப்ராஹீம் போன்ற இறைத் தூதர்களையும் இவர்கள் போன்றோரையும் விரிவாகவும் குறிப்பாகவும் நாம் ஈமான் கொள்ள வேண்டும். அவர்கள் மீதும் எங்கள் நபியின் மீதும் சிறப்புமிகு ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

இறுதி நாள் மீது விசுவாசம் கொள்ளுதல்

மறுமை நாளை ஈமான் கொள்ளுதல் (நம்புதல்)

மறுமை நாளைப்பற்றி ஈமான் கொள்வதைப் பொருத்தவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் அம்மறுமை குறித்து அறிவித்த அனைத்தும் இதில் உள்ளடங்குகின்றன. அவற்றுள் மரணத்திற்குப் பின்னர் நிகழும் கப்ரின் சோதனை மற்றும் அதன் இன்பமும் வேதனையும் உள்ளடங்குகிறது. மேலும் மறுமை நாளில் ஏற்படும் அமலிதுமலிகள், பயங்கர துன்பங்கள் கஷ்டங்கள். ஸிராத் எனும் பாலம், நன்மை தீமை நிறுக்கப்படும் தராசு, விசாரணை மற்றும் கூலி வழங்கப்படுதல், மக்கள் மத்தியில் அவர்களின் (நன்மை தீமை பற்றிய) ஏடுகள் விரித்துக்காட்டப்படுதல், அந்த ஏடுகளை வலது கரத்தில் அல்லது இடது கரத்தில் அல்லது பின்புறமாகப் பெறுதல் போன்றனவும்; மறுமை நாளை ஈமான் கொள்வதில் உள்ளடங்கும் விடயங்களாகும். மேலும்; மறுமை நாளை ஈமான் கொள்வதில் எமது நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்குரிய ஹவ்ல் எனும் தடாகம் பற்றி விசுவாசம் கொள்வதும் உள்ளடங்குகிறது. மேலும் சுவர்க்கம் நரகம், முஃமீனான அடியார்கள் இறைவனை காண்பது,அவனுடன் உரையாடுவது போன்ற விடயங்கள் மற்றும் இவை தவிர புனித அல் குர்ஆனிலும் ஆதார பூர்வமான ஹதீஸ்களிலும் வந்துள்ளவையும் இதில் உள்ளடங்கின்றன. இவை அனைத்தையும் அல்லாஹ்வும் அவனின் தூதரும் தெளிவு படுத்தி விவரித்த முறையில் ஈமான் கொள்வது அவசியமாகும்.

இறை விதியை ஈமான் கொள்ளல் (நம்புதல்)

இறை விதியை (நம்புவது) ஈமான் கொள்ளல் என்பது நான்கு விடயங்களை உள்ளடங்கியுள்ளன. அவை பின்வருமாறு;

முதலாவது விடயம் : இதுவரை நடந்தவை இனியும் நடக்க இருப்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான். மேலும் தன் அடியார்களின் நிலமைகள் குறித்தும் அவர்களது வாழ்வாதாரம் அவர்களது ஆயுற் காலம் அவர்களது செயல்பாடுகள் மற்றும் இவைகள் அல்லாத அவர்களது விவகாரங்கள் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான். இவற்றுள் எதுவும் அவனுக்கு மறைவாகாது என நம்புதல், இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் (நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாவான்.) (அல் பகரா : 231) மேலும் அல்லாஹ்கூறுகிறான் (நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றழுடையவன் என்றும் நிச்சயமாக அல்லாஹ் அறிவால் யாவற்றையும் முழுமையாக அறிபவன் என்றும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக (இவ்வாறு படைத்தான்) (அத்தலாக் : 12) இரண்டாவது விடயம்: படைப்புகள் குறித்து அல்லாஹ் தீர்மானித்து முடிவு செய்தவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூலில் ) பதிவுசெய்யப்பட்டுள்ளது என நம்பவேண்டும். இது பற்றி அல்லாஹ்;பின்வருமாறு குறிப்பிடுகிறான்: (இறந்தபின்) அவர்களிலிருந்து (அவர்களின் உடலை எந்த அளவு) பூமி (தின்று) குறைத்திருக்கிறது என்பதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கிறோம், மேலும், (அவர்களின் செயல்கள் பதியப்பட்டு) பாதுகாக்கப்பட்ட புத்தகம் நம்மிடத்தில் இருக்கின்றது) (காப் : 4) மேலும் அல்லாஹ் கூறுகிறான் (ஒவ்வொரு பொருள் குறித்தும் தெளிவான ஏட்டில் அதை நாம் கணக்கிட்டு வைத்துள்ளோம்) (யாஸீன் :12) மேலும் அல்லாஹ் கூறுகிறான் (நிச்சயமாக அல்லாஹ்வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நன்கறிகிறான் என்பதை நீ அறியவில்லையா? நிச்சயமாக இவை (லவ்ஹுல் மஹ்பூல் எனும் ) ஏட்டில் உள்ளது நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகும் 70) (அல் ஹஜ் : 70) மூன்றாவது விடயம் :அல்லாஹ்வினால் இப்பிரஞ்சத்தின் அமுலாகும் நாட்டத்தை ஈமான் கொள்ளல் அதாவது அவன் நாடியது நடக்கும் எதை நாடவில்லையோ அது நடக்காது இது குறித்து அழ்ழாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: (நிச்சயமாக அல்லாஹ் நாடியதை செய்கிறான்) (அல் ஹஜ் : 18) மேலும் அல்லாஹ்கூறுகிறான் (அவன் எந்தவொன்றை (படைக்க) நாடினாலும் அதற்கு 'குன்' ஆகுக எனக்கூறுவதுதான் உடனே அது ஆகிவிடும்) (யாஸீன் : 82) மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் (எனினும், அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்). (அல் இன்ஸான் : 30) நான்காவது விடயம் : இப்பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற அனைத்தையும் அவனே படைத்தான் வேறுபடைப்பாளனோ பரிபாலிப்பவனோ இல்லை என நம்புதல் அல்லாஹ் இது பற்றிக் குறிப்பிடுதாவது: (அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்; அவனே எல்லா பொருள்களின் பொறுப்பாளன்) ( அஸ்ஸுமர் : 62) மேலும் அல்லாஹ் கூறுகிறான் (மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கிறானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகிறீர்கள்?) (பாதிர் : 03) விதியை நம்புவது (ஈமான்) கொள்வது என்பது அஹ்லுஸ்ஸுன்னாவினரிடத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நான்கு விடயங்களை ஈமான் கொள்வதை உள்ளடக்கியதாகும். இவற்றுள் சிலவற்றை பித்அத் வாதிகளாகிய மாற்றுக் கருத்துக்கொண்டோர் மறுக்கின்றனர்.

ஈமான் என்பது சொல்லும் செயலுமாகும். அது அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன் மூலம் அதிகரிக்கும்; மாறு செய்வதன் மூலம் குறைந்து விடும்

அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் 'ஈமான் என்பது சொல்லும் செயலுமாகும். அது அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன் மூலம் அதிகரிக்கும் மாறு செய்வதன் மூலம் குறைந்து விடும் என்று நம்புவதும் உள்ளடங்கும். மேலும் முஸ்லிம்களில் எவரையும்; இணை வைத்தல் இறைவனை நிராகரித்தல் தவிர்ந்த பெரும் பாவங்களான விபச்சாரம் செய்தல் திருடுதல் வட்டி கொடுக்கள் வாங்கள் போதைப்பொருள் பாவனை பெற்றோரை நோவினை செய்தல் போன்றவையும் இவை போன்ற பெரும்பாவங்களை ஒருவர் (ஹலாலானது) இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என்று கருதாத வரையில்; காஃபிர் என்று தீர்ப்பளிப்பது கூடாது. ஆனால் அவர்; இவற்றை ஹலால்' எனக் கருதினால் அவர்கள் காஃபிராகி விடுவார் இதற்கான ஆதாரமாக பின்வரும் திருவசனம் அமைந்துள்ளது (நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான் அது தவிர ஏனையவற்றை தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான்) ( அந்நிஸா : 48) மேலும் இதற்கு சான்றாக நபியவர்களிடமிருந்து வந்துள்ள முதவாதிரான ஹதீஸ்களும் உள்ளன. அவைகளுள் பின்வரும் ஹதீஸ் முக்கியமானது "யாருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ளதோ. அவர்களை நரகை விட்டும் அல்லாஹ் வெளியேற்றி விடுகிறான" என்பதாகும்.

நேசம் கொள்வதும் வெறுப்பதும் உறவு வைத்துக் கொள்வதும் பகைத்துக் கொள்வதும் அல்லாஹ்வுக்காகவே

அல்லாஹ்வை ஈமான் கொள்ளும் விடயங்களுள் அல்லாஹ்வுக்காகவே நேசம் கொள்வதும் அல்லாஹ்வுக்காகவே வெறுப்பதும் அல்லாஹ்வுக்காகவே உறவு வைத்துக் கொள்வதும் அல்லாஹ்வுக்காகவே பகைத்துக் கொள்வதும் உள்ளடங்குகின்றன. ஆகவே முஃமின்கள் ஏனைய முஃமின்களை நேசம் கொள்வதுடன் அவர்களுடன் ஒப்புறவோடு நடந்து கொள்வதுடன் காஃபிர்களின் செயற்பாடுகள் குறித்து வெறுப்புக்கொள்வதும்; அவர்களுடன் நற்புறவு கொள்ளாது இருத்தல் வேண்டும். இந்தச் சமூகத்தில் முஃமின்களுள் நபித்தோழர்கள் பிரதானமானவர்கள். எனவே அஹ்லுஸ்ஸுன்னாக்கள் அவர்களைப் மிகவும்- நேசிக்கின்றனர் அவர்ளுடன் நற்புறவு பேணி நடக்கின்றனர் நபிமார்களுக்குப் பின் அவர்கள் தாம் மனிதர்களிலேயே சிறப்பானவர்கள் எனவும் நம்புகின்றனர். நபித்தோழர்கள் குறித்து இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் ((சமுதாயத்தில் மிகச் சிறந்தோர் எனது நூற்றாண்டில் வாழும்; என் தோழர்கள், பின்னர் மிகச் சிறப்புக்குரியோர் அதனைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டில் வாழ்ந்தோர் அதன் பின்னர் சிறப்புக்குரியோர் அதனைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டில் வாழ்ந்தோர் ஆவார்கள்)) (4) இந்த நபிமொழி ஸஹீஹானது என்பது ஏகோபித்த கருத்தாகும் அந்த நபித் தோழர்களில் மிகச் சிறந்தவர் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) பின்னர் உமருல் பாரூக்(ரழி) பின்னர் உஸ்மான்(துன்னூரைன் ரழி) பின்னர் அலி அல்முர்தழா (ரழி) ஆகியோராவார்கள். இவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! சுவர்க்கத்தைக் கொண்டு நற்மாராயம் கூறப்பட்ட பத்துப் பேர்களுள் மேற்குறிப்பிட்ட நால்வரைத்தவிர எஞ்சியவர்களும், ஏனய நபித்தோழர்களும் சிறந்தவர்கள் என்றும் நம்புகிறார்கள். மேலும் நபித்தோழர்களுக்கு மத்தியில் நடந்த சில கருத்து வேறுபாடுகளை உண்மையான அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தை சேர்ந்தோர் விமர்சிக்காது தவிர்ந்து கொள்வதுடன் அவர்கள் இப்பிரச்சினை குறித்து சரியான நிலைப்பாட்டை அறிய பாடுபட்ட முஜ்தஹிதுகள் என்று ஏற்றுக்கொள்வதுடன் இப்பிரச்சினை தொடர்பாக யார் சரியான நிலைப்பாட்டை பெற்றுகொண்டாரோ அவருக்கு இரண்டு கூலியும், தனது ஆய்வில் சரியானதைப் யார் பெற்று கொள்ளவில்லையோ அவர் (முயற்சி செய்தமைக்காக) ஒரு கூலியும் இருக்கிறது எனவும் நம்பிக்கை கொள்கிறார்கள். மேலும் அவர்கள் (அஹ்லுஸ்ஸுன்னாக்கள்) நபி அவர்களின் குடும்பத்தினரில் நபியவர்களை நபியாக ஏற்று விசுவாசம் கொண்டவர்களையும் நபி(ஸல்) அவர்களின் மனைவியரான முஃமின்களின் தாய்மார்கள் அனைவரையும் நேசம் வைத்து விரும்புவதுடன் அவர்கள் எல்லோரையும் பொருந்தியும் கொள்கிறார்கள்.அத்துடன் நபி(ஸல்) அவர்களின் தோழர்களை வெறுத்து திட்டுகின்ற அல்லாஹ் குறிப்பிட்ட அந்தஸ்தை விட நபியவர்களின் குடும்பத்தினரை அதிகமாக உயர்த்துகின்ற ராபிழாக்களின் வழி முறையை விட்டும் நீங்கி இருப்பதுடன், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினரை சொல்லாலும் செயலாலும் துன்புறுத்தக் கூடிய (நவாஸிப்) என்ற கூட்டத்தினரின் வழிமுறையை விட்டும் நீங்கி இருக்கிறரார்கள் (4)

எமது இந்த சுருக்கமான இவ்வுரையில் நாம் மேலே குறிப்பிட்ட அனைத்தும் சரியான இஸ்லாமிய கொள்கையில் (அகீதாவில்)உள்ளடங்கும் விடயங்களாகும். அக் கொள்கையை நிலைநாட்டவே முஹம்மது (ஸல்) அவர்களை தூதராக அல்லாஹ் அனுப்பினான். இது தான் ஈடேற்றம் பெற்ற பிரிவினரான 'அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் கொள்கையாகும். இது பற்றி நபி(ஸல்) அவர்கள்: (( எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் உதவி செய்யட்ட நிலையில் எப்போதும் சத்தியத்தில் நிலைத்திருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் அவர்களுக்கு முரணாக நடக்கும் எவராலும் அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது எனக் கூறியுள்ளார்கள்))(5) மேலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் ((யூதர்கள் (71) எழுபத்தியொரு கூட்டமாகப் பிரிந்தனர், கிறித்தவர்கள் (72) எழுபத்திரண்டு கூட்டமாகப் பிரிந்தனர். எனது இந்த சமுதாயத்தினர் (73) எழுபத்தி மூன்று கூட்டமாகப் பிரிவர். இவற்றுள் ஒரேயொரு கூட்டத்தினர் தவிர மற்றையோர் அனைவரும் நரகிற்கு உரியவர்கள்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டபோது, 'அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?' என நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது 'நானும் எனது தோழர்களும் எந்த வழியில் இருக்கின்றோமோ அந்த வழியில் இருப்பவர்கள்' என பதிலளித்தார்கள்)) (6) இது தான் சரியானதும் ஏற்று நடக்கத்தக்கதும்; உறுதியாக கடைப்பிடிக்க வேண்டியதுமான இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையாகும். இதற்கு முரணாக காணப்படும் அனைத்தை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியமாகும்

சரியான இந்த அகீதாவை விட்டும் நெறிபிறழ்ந்தோரும் இக்கொள்கைக்கு எதிராக நடப்போரும்;

நெறிபிரழ்ந்தோர் வகையினர்:

இந்த சரியான அகீதாவை விட்டும் நெறிபிறழ்ந்தோரும், இதற்கு முரணான கொள்கையில் செல்லக் கூடியவர்களும் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுள் சிலைகளையும் விக்ரகரங்களையும் வணங்குவோர், வானவர்களையும் அவ்லியாக்களையும் (இறை நேசர்களையும்) ஜின்களையும் வணங்குவோர், மரங்களையும் கற்களையும் மற்றும் ஏனயவைகளை வணங்குவோர்கள் உள்ளனர். இவர்களும் குறைஷிகள் மற்றும் அரபுகளில் உள்ள ஏனைய பிரிவினரும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து கொண்டது போல் நபியின் ஏகத்துவ அழைப்பை ஏற்காது அவர்களுக்கு முரணாக நடந்து, அவர்களது பிழையான கொள்கையில் மனமுரண்டாக இருந்தார்கள். இச்சரியான கொள்கையை ஏற்க மறுத்தோர் தாங்கள் வணங்கும் தெய்வங்களிடம் தங்களது.தேவைகளை நிறைவேற்றுமாறும்,நோயாளிகளை குணப்படுத்துமாறும் எதிரிகளுக்கு எதிராக தமக்கு உதவி செய்யுமாறும் அவற்றிடம் கேட்கின்றனர். மேலும் தங்களின் தெய்வங்களுக்கு அருத்துப்பலியிடுவதுடன் நேர்ச்சையையும் நிறைவேற்றுகின்றனர் இவர்களின் இச்செயற்பாடுகளை நபியவர்கள் மறுத்துரைத்து அல்லாஹ்வுக்கு மாத்திரம் இதயசுத்தியுடன் வணக்கத்தை செலுத்துங்கள் என்று கட்டளையிட்ட போது அதனை புதுமையான ஒரு விடயமாக கருதி அவர்களின் அழைப்பை மறுத்து அவர்களைப்பார்த்து பின்வருமாறு கூறினர்; ( இவர் பல கடவுள்களை ஒரு கடவுளாக மாற்றிவிட்டாரா? நிச்சயமாக இது ஆச்சரியமான விடயமல்லவா)என்று கூறினர் (ஸாத்: 05) நபியவர்கள் தொடர்ந்து அவர்களை அல்லாஹ்வின்பால் அழைத்த வண்ணம் இருந்ததுடன் இணைவைத்தலை எச்சரிப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் அழைக்கும் கொள்கையின் யதார்த்தத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்தவே அவர்களில் சிலருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினான் அதனைத் தொடர்ந்து கூட்டம் கூட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தினுள் அச்சமூகத்திள் உள்ளோர் நுழைந்தனர். எனவே நபிவர்களினதும் அவர்களின் தோழர்களினதும் அவர்களை தொடர்ந்து வந்த தாபியீன்களின் தொடரான பிரச்சார முன்னெடுப்பினாலும் நீண்ட இறைவழிப்போராட்டதினாலும் இச்சன்மார்கமானது ஏனைய அனைத்து மதங்களையும் மிகைத்த பெரும் மார்கமாக மாறியது.இதனைத் தொடர்ந்து நிலமைகள் மாறி பெரும்பாலானேரிடத்தில் இம்மார்க்கம் குறித்த அறியாமையினால் மீண்டும் ஜாஹிலிய்யா கால நிலைக்கு மாறி நபிமார்கள் அவ்லியாக்களை நேசிக்கும் விடயத்தில் எல்லைமீறி அவர்களிடம் துஆ இறைஞ்சுதல் உதவிகோரல் போன்ற இவை அல்லாத இணைவைப்பின் எல்லா விடயங்களையும் செய்தனர். எந்தளவுக்கெனில் லாஇலாக இல்லல்லாஹ் என்ற கலிமாவின் பொருளை அரபுக்காபிர்கள் விளங்கிக்கொண்ட அளவாவது இவர்கள் விளங்கவில்லை. அல்லாஹ்தான் இந்நிலைமையிலிந்து அவர்களைப் பாதுகாக்கப் போதுமானவன்

இந்த இணைவைப்பானது இஸ்லாம் பற்றிய அறியாமை மற்றும் நபித்துவத்ததின் நீண்ட இடைவெளியின் காரணமாக எமது இக்காலம் வரையில் மிகவும் வேகமாகவும் பரவிக் கொண்டிருக்கிறது.

(அகீதா) இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடு குறித்த பிற்பட்ட காலத்தில் வந்தோரின் சந்தேகமானது ஆரம்பகால ஜாஹிலிய்ய மக்களின்; சந்தேகத்தை ஒத்தது என்பதையும் அவரகளின் இறைநிராகரிப்பை ஏற்படுத்தும் சில நம்பிக்கைகள் பற்றியும் குறிப்பிடுதல்

அல்லாஹ்வைத் தூய்மையான முறையில் வணங்குதல் என்ற விடயத்தில் பிற்பட்ட காலத்தில் வந்தோரிடத்தில் ஆரம்ப கால மக்களின் சந்தேகங்களையே காணக் கூடியதாக உள்ளது. அதாவது இவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அவ்லியாக்கள் குறித்து ஜாஹிலிய்ய மக்கள் குறிப்பிட்ட விடயத்தையே இவர்களும் கூறுகிறார்கள். அதாவது இந்நல்லடியார்கள் (அவ்லியாக்கள்) அழ்ழாஹ்விடத்தில் பரிந்து பேசுவோர் இவர்கள் எம்மை அல்லாஹ்விடத்தில் நெருக்கிவைப்பவர்கள் என்பதனால் நாம் வணங்குகிறோம் என்கிறார்கள். அல்லாஹ் பற்றிய இந்நம்பிக்கை வீணானது எவ்வித அர்த்தமுமற்றது என்று கூறி அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு எதை வணங்கினாலும் அவன் இணைவைத்து அல்லாஹ்வை மறுத்துவிட்டான் என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவு படுத்துகிறான். (அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையையோ அவர்களுக்கு நன்மையையோ செய்ய சக்தியற்றவர்களை அவர்கள் வணங்குகின்றனர் மேலும் ' இவர்கள் அல்லாஹ்விடத்தில் எமக்காகப் பரிந்துரை செய்வோர்' என்று கூறுகின்றனர்) ( யூனுஸ் : 18) மேலும் அல்லாஹ் அவர்களின் இந்நிலைப்பாட்டை மறுத்து பின்வருமாறு பதிலளிக்கிறான் (வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் அறியாதவை (இருப்பதாக நினைத்து அவை) பற்றி நீங்கள் அவனுக்கு அறிவித்துக்கொடுக்கிறீர்களா? அவன் தூய்மையானவன் மேலும் அவர்கள் இணைவைப்பதை விட்டும் மேலானவனாகிவிட்டான் என்று நபியே கூர்வீர்களாக) ( யூனுஸ் : 18) ஆகவே அல்லாஹ்வைத் தவிர்த்து நபிமார்களையும் அவ்லியாக்களையும் வணங்குவது மிகப்பெரும் இணைவைத்தல் என்பதாகவும் இதனை செய்வோர் வேறுபட்ட பெயர்களை சூட்டிக்கொண்டாலும் அது பிழையானது என்பதாகவும் அல்லாஹ் இத்திருவசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான் மேலும் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: (எவர்கள் அவனையன்றி பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் எமக்கு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்திவைப்பதற்காகவே நாம் இவர்களை வணங்குகிறோம் (எனக் கூறுகின்றனர்) (அஸ்ஸுமர் : 3) இவ்வாறு கூறிய அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கிறான் (அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதில் அவர்களுக்கிடையே நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான் நிச்சயமாக அல்லாஹ் பொய்யனையும் நிராகரிப்பவனையும் நேர்வழியில் செலுத்தமாட்டான்) (அஸ்ஸுமர் : 3) அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம், அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆக் கேட்டல்,மற்றும் பயப்படுதல், ஆதரவு வைத்தல், போன்ற ஏனைய காரியங்கள் அனைத்தும் அவனை நிராகரிக்கும் செயல் என்பதை தெளிவுபடுத்தி விட்டான். மேலும் அவர்கள் வணங்கும் கடவுள்கள் அவனிடம் தம்மை நெருக்கி வைப்பார்கள் என்ற அவர்களின் கூற்றையும் பொய்ப்படுத்திவிட்டான். சரியான இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமானதும், நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த கொள்கைக்கு முரணானதுமான கொள்கைகளுள் இக்காலத்தில் மக்களை நாத்திகம் இறைநிராகரிப்பின் பால் அழைத்து கொண்டிருக்கும் கால்மார்க்ஸ், லெனின் ஆகியேரின் சித்தாந்தாங்களை பின்பற்றியவர்களின் நாத்திகக் கொள்கையாகும். அவர்கள் இக்கொள்கைக்கு சோசலிசம் என்றோ கம்யூனிஸம் என்றோ பாத்திஸம் (தேசியவாத சித்தாந்தம்) என்றோ மற்றும் இதுவல்லாத எப் பெயரிட்டுக் கொண்டாலும் இவைகள் அனைத்தும் சரியான இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான நம்பிக்கைகளாகும். அத்துடன் இக்கோட்பாடுகளின் அடிப்படைகளாக கடவுள் மறுப்பு, வாழ்கை என்பது வெறும் ஓரு சடம் சார்ந்த அம்சம் என்பதாகும். அத்துடன் மறுமை வாழ்க்கை சுவர்க்கம், நரகம் ஆகியவற்றை மறுப்பதும் எல்லா மார்க்கங்களையும் மதங்களையும் நிராகரிப்பதும் இவர்களது மற்றொரு அடிப்படையாக உள்ளது. இவர்களது புத்தகங்களை ஆழமாக படிப்பவர்கள் இவற்றை மிகத் தெளிவாக அறிந்து கொள்வர். இக்கொள்கையானது அல்லாஹ்வால் அருளப்பட்ட வானுலக மதங்கள் அனைத்திற்கும் முரணாக உள்ளது என்பதிலும் இதைப் பின்பற்றுவோர் இவ்வுலகிலும் மறு உலகிலும் மிக சோகமான முடிவுகளுக்கு ஆளாவார்கள் என்பதிலும் எவ்விதச் சந்தேகமும் இல்லை அல்குர்ஆன்,அல்ஹதீஸ்களுக்கு மறைபொருள் உண்டென்று கூறும் பாத்தினிய்யாக்கள்,மற்றும் சூபிய்யாக்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் கொள்கையும் உண்மையான இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரணானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் இவர்கள் அவ்லியாக்கள் என்ற பெயரால் அழைப்பவர்களுள் சிலர் அல்லாஹ்வுடன் இணைந்து இவ்வுலகை நிர்வகிக்கின்றனர் எனக் கூறி அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றனர். அந்த அவ்லியாக்களுக்கு 'குத்புகள்' (இப்பிரபஞ்ச இயக்கத்திற்கு அச்சாணி போன்றவர்கள்;) 'அவ்தாது' (மார்க்கத்தை நிலை நாட்டுவதில் பிரதானிகள்,முளைக்குச்சி போன்றவர்கள்) 'கவுஸுகள்' (பாதுகாத்து இரட்சிப்பவர்கள்;) என்றெல்லாம் பெயர் சூட்டுகின்றனர். இது ';தவ்ஹீதுர்ருபூபிய்யாவில்' அதாவது படைத்துப் பரிபாலிக்கும் இறைத் தன்மையில் வைக்கப்படும் மிக மோசமான (ஷிர்க்) இணைவைத்தலாகும். அறியாமைக் கால அரபிகளின் இணை வைத்தலை விட இது மோசமானதாகும். ஏனெனில், அரபு இறைநிராகரிப்பாளர்கள் 'ரூபூபிய்யாவில்' இணை வைக்கவில்லை, மாறாக அவர்கள் வணக்க வழிபாடுகளில் மட்டுமே இணைவைத்தனர். அவர்களது செல்வ செழிப்பான நிலையின் போதே அல்லாஹ்வுக்கு இணைவைத்தனர். ஆனால் கஷ்டமான நிலைகளில் தங்களது வணக்கத்தைத் அல்லாஹ்வுக்கு மட்டுமே செலுத்தினர்; இது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: (மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர்) (அல் அன்கபூத் : 65) "ருபூபிய்யா' என்ற படைத்துப் பரிபாலித்தல் என்ற விடயத்தை அவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என ஏற்றுக்கொள்கின்றனர். இது பற்றி அல்லாஹ் கூறுகின்றான் (அவர்களை படைத்தவன் யார் என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ்தான் என்று உறுதியாகக் கூறுவார்கள்) (அஸ்ஸுஹ்ருப் : 87) மேலும் அல்லாஹ் கூறுகிறான் (வானம் மற்றும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும் பார்வைகளையும் உரிமையாக்கிக்கொள்கிறவன் யார்? (உயிரற்றவற்றிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துபவனும், உயிருள்ளவற்றிலிருந்து உயிரற்றதை வெளிபடுத்துபவனும் யார் மேலும் அகிலத்தின் காரியத்தை நிர்வகிப்பவன் யார்? என்று நபியே! நீர்கேட்பீராக அதற்கவர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள். அவ்வாறாயின் நீங்கள் அவனை அஞ்சி நடக்க வேண்டாமா? என நீர் கேட்பீராக!) (யூனுஸ் : 31) இதே கருத்தில் அதிகமான திரு வசனங்கள் வந்துள்ளன என்பதைக் கருத்திற் கொள்ளவும்

தற்போதுள்ள இணை வைப்பாளர்கள் முற்காலத்தில் இருந்த இணைவைப்பாளர்களை விட அதிகப்படுத்திய அம்சங்கள் ;

தற்போதுள்ள இணைவைப்பாளர்கள் முற்காலத்து இணை வைப்பாளர்களை விடவும் இரண்டு விடயத்தை அதிகப்படுத்தியுள்ளனர். அவற்றுள் ஒன்று: 'படைத்து பரிபாலித்தல் எனும் (தவ்ஹீதுர்) 'ருபூபிய்யா' விடயத்தில் இணை வைத்தல். இரண்டாவது: செல்வசெழிப்பிலும் கஷ்ட துன்பத்திலும் இணை வைத்தல், இதனை அவர்களுடன் கலந்து அவர்களின் நிலைகள் பற்றி ஆழமாக அறியும் போது காணமுடிகிறது. எகிப்து நாட்டில் ஹூஸைன், பதவி மற்றும் பலருடைய கப்ருகளில் மக்கள் என்ன செய்கின்றனர் என்பதையும் பார்த்தால் இதனை நன்கு புரிந்து கொள்ள முடியும் அது மட்டுமல்லாது ஏடனில் 'அல் அய்த்ரூஸ்' அவர்களின் கப்ரிலும் எமனில் 'ஹாதி' அவர்களின் கப்ரிலும், சிரியாவில் 'இப்னு அரபியின்' கப்ரிலும், இராக்கில் 'ஷைக் அப்துல் காதிர் ஜீலானி' அவர்களின் கப்ரிலும் இது தவிர மற்ற பிரபலமானவர்களின் கப்ருகளிலும் என்ன நடக்கிறது என நாம் அவதானித்தால் பொதுமக்கள் இங்கே வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடியும். அல்லாஹ்வுக்குச் செலுத்தவேண்டிய கடமைகளில் பெரும்பாலானவற்றை இவற்றுக்குச் செலுத்துகின்றனர். தனது தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும், அவர்களுக்கு முன்னர் வந்த நபிமார்களும் கொண்டு வந்த ஏகத்துவத்தின் உண்மை நிலையை விளக்கிக் கூறுவோரும் மேற்கண்ட அனாச்சாரங்களை மறுத்து அவர்களைத் தடை செய்வோரும் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே உள்ளனர். இது மிகப் பெரும் சோதனையாகும். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.(நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். இன்னும் நாம் அவனிடமே திரும்பக் கூடியவர்களும் ஆவோம்) அவர்களுக்கு நேர்வழி கிடைக்கவேண்டுமெனவும், அவர்களுக்கு மத்தியில் நேர் வழியில் அழைக்கும் அழைப்பாளர்கள் அதிகரிக்கவும், இந்த ஷிர்க்கை எதிர்த்துப் போராடுகின்ற, அதனையும் அதன் வழிகளையும் முற்றாக ஒழிப்பதற்கு பல்வேறு வழிகளில் பாடுபடுகின்ற ,அறிஞர்களுக்கும், முஸ்லிம் தலைமகளுக்கும் நல்வாய்ப்பும் வெற்றியும் கிடைக்க அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறோம். நிச்சயமாக அவனே அனைத்தையும் கேட்பவனாகவும் அடியார்களுக்கு மிகவும் நெருக்கமானவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்வின் பெயர்கள் (அஸ்மாஉ) அல்லாஹ்வின் பண்புகள் ( ஸிபாத் ) விடயத்தில் முஃதஸிலா ஜஹ்மிய்யா என்ற பிரிவினரின் கொள்கையும் இந்த வழியில் நடக்கின்ற மற்ற பித்அத்வாதிகளின் கொள்கையும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமான கொள்கையே. அதாவது அவர்கள் அல்லாஹ்வுக்கு இருக்கின்ற அனைத்துப் பண்புகளையும் தன்மைகளையும் மறுக்கின்றனர். அவனுக்குள்ள நிறைவான தன்மைகளையெல்லாம் மறுத்து வீணாக்கிவிட்டு, அவனுக்குத் தகாத தன்மைகளையும் பிற உயிரற்ற திடப் பொருளுக்கு இருக்கின்ற தன்மைகளையும் வர்ணனைகளையும் அவனுக்கு உரித்தாக்குகின்றனர். இவர்களின் இது போன்ற தவறான கூற்றுக்களை விட்டும் அல்லாஹ் தூய்மையாகிவிட்டான். இப்பிரிவில் அழ்ழாஹ்வுக்குச் சில பண்புகள் உண்டெனக் கூறிச் சிலவற்றை மறுக்கின்ற அஷ்அரிய்யாக்களும் அடங்குவர்.அந்தவகையில் அழ்ழாஹ்வின் பண்புகளில் அவர்கள் மறுத்து வியாக்கியானம் செய்த ஆதாரங்களைப் போன்று அவர்கள் உறுதிப்படுத்தும் பண்புகளையும் அவ்வாறு செய்தல் வேண்டும் இதில் அவர்கள் செவிவழி மற்றும் பகுத்தறிவுரீதியிலான ஆதாரங்களுக்கு முரணாக இருப்பதுடன் இவ்விடயத்தில் மிகப்பெரும் முரண்படுகின்ற நிலையும் காணப்படுகிறது (26) அஹ்லுஸ்ஸுன்னாக்களைப் பொருத்தவரை அல்லாஹ் தனக்கென எந்தெந்தப் பெயர்களையும் பண்புகளையும் உறுதிப்படுத்தியுள்ளானோ அவற்றையும் அவன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்னென்ன பெயர்களையும் பண்புகளையும் அல்லாஹ்வுக்கு இருப்பதாக உறுதிப்படுத்தினார்களோ அவற்றையும் முழுமையான முறையில் உறுதிப்படுத்துவோராவர். மேலும் அவனது படைப்பினங்களுக்கு அவனை ஒப்பாக்குவதை விட்டும் அல்லாஹ்வுக்குரிய பெயர்களையும் உயர்பண்புகளையும் நிராகரிக்காது அவனை முழுமையாக தூய்மைப் படுத்துகின்றனர் மேலும் அவர்கள் அனைத்து ஆதாரங்களையும் திரிபுபடுத்தாமலும் ஆதரப்படுத்தியும் செயல்படுத்துகின்றனர்.அத்துடன் மற்றவர்கள் சிக்கியிருக்கும் முரண்பாடுகளை விட்டும் தங்களை காத்தும் கொண்டனர் இது குறித்த விபரம் முன்னரே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது இவ்வழிமுறைதான் வெற்றிக்கானதும் இம்மை மறுமையின் மகிழ்சிக்கானதுமான பாதையாகும். மேலும் இச்சமுதாயத்தின் இமாம்களும் நன்நெறிசார்ந்த முன்னோர்களின் நேரான பாதையுமாகும். அத்தகைய முன்னோர்கள் எந்த வழியில் நடந்து சீர்பெற்றனரோ அவ்வாறான பாதையைப் பின்பற்றி சென்றாலே தவிர இச்சமூகத்தின் தற்போது வாழ்ந்து கொண்டிருப்போரும் சீர்பெற முடியாது. சீர்பெறுதலானது புனித அல் குர்ஆனையும் ஸுன்னாவையும் பின்பற்றி அதற்கு மாற்றமான அனைத்தையும் விட்டு வாழ்கின்றபோதே சாத்தியமாகும.

அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதன் அவசியமும் அல்லாஹ்வின் எதிரிகளுக்கு எதிராக வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த தெளிவும்

பருவ வயதை அடைந்த முஸ்லிமின் மீதுள்ள கடமைகளுள் மிக முக்கியமானது வானங்கள் பூமியின் மகத்தான அர்ஷின் இரட்சகனான அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதாகும். கண்ணியமான தனது வேதத்தில்அல்லாஹ் இது குறித்துப் பின்வருமாறு கூறுகிறான். (நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) அமர்ந்தான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும்,சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்)அவனது கட்டளைக்கு கட்டுப்பட்டவையாக படைத்தான். (படைத்தலும்)படைப்பினங்களும்(அவற்றின்) ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து,வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன்) ( அல் அஃராப் : 54) அல்குர்ஆனின் மற்றொரு இடத்தில், அல்லாஹ் தன்னை வணங்குவதற்காகவே ஜின் மற்றும் மனித இனங்களைப் படைத்ததாகக் குறிப்பிடுகிறான்: ( நான் ஜின் மனித வர்க்கத்தை என்னை வணங்குவதற்காவே அன்றி படைக்கவில்லை) என்று கூறுகிறான் (அத்தாரியாத் :56) ஜின் மற்றும் மனித இனங்களை அல்லாஹ் வணங்கி வழிபடுவதற்கு படைத்திருப்பதானது அனைத்துவகையான வணக்க வழிபாடுகளினூடாகவும் அல்லாஹ்வை ஒருமைப்படுபடுத்துவதற்ககேயாகும். அதாவது தொழுகை, நோன்பு, ஸகாத ஹஜ் குனிந்து ருகூவு செய்தல், பணிந்து சிரம்தாழ்த்துதல்(ஸுஜுது செய்தல்) கஃபாவை வலம்வருதல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல், பயப்படுதல், ஆதரவு வைத்தல், அபயம் தேடுதல், உதவி தேடுதல், பாதுகாப்பு கோரல் அனைத்துவைகையான இறைஞ்சுதல்கள் போன்றவற்றால் அவனை ஒருமைப் படுத்துவதாகும். மகத்துவமிக்க அவனின் வேதமும், நேர்மையான அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறையும் காட்டித்தந்துள்ள அனைத்து கட்டளைகள் மற்றும் விலக்கல்கள்; அனைத்திலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதும் இதில் உள்ளடங்குகின்றது. எந்த வணக்கத்தை நிறைவேற்றி வாழ அல்லாஹ் ஜின் மற்றும் மனித இனங்களைப்படைத்தானோ அவற்றை அனைவரும் பின்பற்றி வாழ கட்டளையிட்டுள்ளான். ஏனெனில் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வேதங்களை இறக்கியமை இந்த இபாதத் குறித்து தெளிவுபடுத்துவதற்காகவும் இதன் பால் அழைப்பதற்காகவும் அவன் ஒருவனுக்கு மட்டுமே வணக்கம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்குமே அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான்: (மனிதர்களே நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் பொருட்டு உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இரட்சகனையே வணங்குங்கள்) (21 ) அல்பகரா(21) மேலும் அல்லாஹ்கூறுகிறான் (உமது இரட்சகள் தன்னையன்றி (வேறு எவரையும் எதையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்யுமாறும் கட்டளையிட்டுள்ளான்) (அல் இஸ்ராஉ 23) இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள 'கழா' என்ற வார்த்தைக்கு விதித்திருக்கின்றான், கட்டளையிட்டுள்ளான், உபதேசம் செய்கின்றான் என்ற பொருளாகும். மேலும் அல்லாஹ் கூறுகிறான் (நேரிய வழி நின்று கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு அல்லாஹ்வை வணங்குமாறும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாருமே தவிர அவர்கள் ஏவப்படவில்லை இதுதான் நேரிய மார்க்கமாகும்) (அல் பய்யினா :5) அல்குர்ஆனில் இதே கருத்தில் மேலும் பல வசனங்கள் வந்துள்ளன மேலும் அல்லாஹ்கூறுகிறான் (இத்தூதர் உங்களுக்கு எதை வழங்கினாரோ அதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ அதை விட்டும் விலகிக்கொள்ளுங்கள் இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் நிச்சயமாகஅல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்) (அல் ஹஷ்ர் : 07) மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் (நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையும், அழகான முடிவும் ஆகும்.) (அந்நிஸா : 59) மேலும் அல்லாஹ்கூறுகிறான் (யார் இறைத்தூதருக் கட்டுப்படுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராவார் ) (அந்நிஸா : 80) மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் (இது குறித்து அல்லாஹ் கூறுகிறான் அல்லாஹ்வை வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்)தாகூத்தை விட்டும் விலகிக்கொள்ளுங்கள் எனக்கூறும் தூதரை நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அனுப்பிவைத்தோம்) (நஹ்லு : 36) மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் (நிச்சயமாக என்னைத் தவிர ( உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாறுமில்லை. ஆகவே என்னையே வணங்குங்கள் என நபியே நாம் உமக்கு முன்னர் வந்த எந்தத் தூதருக்கும் வஹி அறிவிக்காமல் அவரை தூதராக நாம் அனுப்பவில்லை) (அல் அன்பியா :25) மேலும் அல்லாஹ் கூறுகிறான் (அலிப் லாம் றா இது இறை வேதமாகும். இதன் வசனங்கள் நேர்த்தியாக சீரமைக்கப்பட்டு பின்னர் யாவற்றையும் அறிந்த ஞானமிக்கவனிடமிருந்து அவை விபரிக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வை அன்றி (வேறு யாரையும) நீங்கள் வணங்காதீர்கள் நிச்சயமாக நான் உங்களுக்கு அவனிடமிருந்து எச்சரிக்கை செய்பவனும் நன்மாராயம் கூறுபவனுமாவேன்) (ஹூத் : 1-2) அல்லாஹ்வின் வேதத்தில் இடம் பெற்றுள்ள இத் தெளிவான வசனங்களும் இதே கருத்தில் வந்துள்ள இவை போன்ற பிற வசனங்களும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே தூய்மையாக வணக்த்தை செலுத்துவன் அவசியம் குறித்து குறிப்பிடுகின்றன. ஏனெனில் இதுவே இம்மார்கத்தின் அடிப்படையும் அடித்தளமுமாகும். மேலும் ஜின் மற்றும் மனித இனம் படைக்கப்பட்டு தூதர்கள் அனுப்பப்பட்டமைக்கும் வேதங்கள் இறக்கப்பட்ட பட்டமைக்கான நோக்கத்தை இவ்வசனங்கள் தெளிவு படுத்துகின்றன. ஆகவே இவ்விடயம் குறித்து கவனம் செலுத்துவதும், தெளிவு பெறுவதும் பருவ வயதடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். மேலும் பெயரளவில் முஸ்லிமாய் இருப்போரில் அதிகமானோர் நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களில் எல்லை மீறிய நேசம் கொண்டு அவர்களின் மன்னறைகள் மீது கட்டடம் எழுப்பி அதனைத் தொழும் இடமாக ஆக்கிக் கொள்வதும் அதன் மீது மாடம் அமைத்து இறந்து விட்ட அந்நல்லடியார்களிடம் தமது தேவைகளைக் கேட்பதும், உதவி தேடுவதும்; புகழிடம் கோருவதும் உள்ளது. இவைகள் யாவும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் காரியங்களாகும். அது மாத்திரமின்றி தமது தேவைகள் நிறைவேறவும் கஷ்டங்கள் நீங்கவும் நோயாளர்கள் நிவாரணம் பெறவும் பகைவர்கள் மீது வெற்றி கிட்டவும் அவர்களிடம் வேண்டுகின்ற அதே நேரம் இன்னும் இறைவனுக்கு இணை வைக்கின்ற இது போன்ற பல செயல்களைச் செய்கின்றனர். அவர்கள் வீழ்ந்துள்ள இவ்வாறான தீமைகளை விட்டு அவர்களைத் தடுப்பதும் எச்சரிப்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை ஆகும். இவை தொடர்பாக அல்லாஹ் தனது வேதத்தில் குறிப்பிடப்பட்டது போன்றே நபி(ஸல்) அவர்கள் கூறியதும் அமைந்துள்ளது. முஆத்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் புஹாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது நபி(ஸல்) அவர்கள். "முஆதே ! 'அடியார்களுக்கு அல்லாஹ் செய்ய வேண்டியதும் அடியார்கள் அல்லாஹ் வுக்குச் செய்யவேண்டிய கடமைகள் எவை என்பது பற்றி உமக்குத் தெரியுமா எனக் கேட்டார்கள். அதற்கு முஆத்(ரழி) அவர்கள், ' இது பற்றி அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்' எனக் கூறிய போது, நபி(ஸல்) அவர்கள், 'அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டியது அவனை மட்டுமே வணங்கி எதையும் அவனுக்கு இணையாக்கமால் இருப்பதுமாகும். அடியார்களுக்கு அல்லாஹ் செய்ய வேண்டியது அவனுக்கு எதையும் இணையாக்காது நடந்து கொண்டவர்களைத் தண்டிக்காமல் இருப்பதாகும்" என விளக்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது "அல்லாஹ்க்கு இணை கற்பித்து அதே நிலையில் யாராவது இறந்தால் அவர் நரகில் நுழைவார்" நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லியில் பதிவாகியுள்ளது ((அழ்ழாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பவன் சுவனம் நுழைவான் மேலும் அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பவன் நரகம் நுழைவான்)) இதே கருத்தில் அதிகமான ஹதீஸ்கள் வந்துள்ளன. இந்த விவகாரமானது அதி முக்கியத்தும் நிறைந்த மிகப்பெரும் விடயமாகும். ஏகத்துவத்தின் பக்கம் மக்களை அழைக்கவும், இணைவைத்தலை விட்டுத் தடுக்கவும் தான் தனது நபி முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அல்லாஹ் தன்னை எதற்காக அனுப்பினானோ அதை நபி(ஸல்) அவர்கள் உரிய விதத்தில் நிறைவேற்றினார்கள். இதற்காக அல்லாஹ்வின் பாதையில் கடுமையான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள். அத்துடன் இந்த ஏகத்துவ அழைப்பின் போது எதிர்கொண்ட இத்துன்பங்கள் அனைத்தையும் அவர்களும் அவர்களது அருமைத் தோழர்களும் பொறுமையுடன் இறைத்திருப்தியை நாடி ஏற்றுக்கொண்டனர். இறுதியாக அவர்கள் வாழ்ந்த அரபுத் தீபகற்பத்திலிருந்து நபியவர்களின் வெற்றிகரமான பிரச்சாரத்தால் எல்லாச் சிலைகளையும், விக்கிரகங்களையும் அல்லாஹ் அகற்றிவைத்தான். இதனால் மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். கஃபாவின் உள்ளேயும் வெளியேயும் அதனைச் சுற்றிலும் இருந்த சிலைகள் நிர்மூலமாக்கப்பட்டன. லாத், உஸ்ஸா, மனாத் ஆகிய விக்ரகங்களும் அழிக்கப்பட்டன. அரபுக் கோத்திரத்தாரின் எல்லாச் சிலைகளும் உடைத்து நொறுக்கப்பட்டன. அரபுத் தீபகட்பமெங்கும் அல்லாஹ்வின் கலிமா உயர்ந்தோங்கியது. பின்னர் அரபுத்தீபகற்பத்திற்கு அப்பால் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் அறப் போர்களில் முஸ்லீம்கள் ஈடுபட்டனர். அப்பொழுது அடியார்களில் யாருக்கு இப்புனித மார்க்கம் முந்திக் கிடைத்ததோ, அவர்களின் மூலம் அல்லாஹ் நேர்வழி காட்டினான், இவர்களினால் உலகெங்கும்; உண்மையையும் நீதியையும் அல்லாஹ் பரவச் செய்தான் இதனால் அவர்கள் நேர்வழியை காட்டும் இமாம்களாகவும் உண்மையின் பால் வழிகாட்டும் உத்தமத் தலைவர்களாகவும், நீதி மற்றும் சீர்திருத்தத்தின் அழைப்பாளர்காகவும் மாறினர். அவர்களது வழியைப் பின்பற்றிய தாபியீன்களும், அவர்களை தொடர்ந்த நேர்வழி நடந்த இமாம்களும் மற்றும் இஸ்லாமிய அழைப்பாளர்களும் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்பினார்கள். தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைத்தார்கள்; இதற்காக தங்களது உடலாலும் பொருளாலும் அரும் பாடுபட்டார்கள். இப்பிரச்சாரத்தில் எவரின் விமர்சனத்திற்கும் அவர்கள் அஞ்சவில்லை ஆதலால் அவர்களை அல்லாஹ் பலப்படுத்தி உதவிகள் புரிந்தான்; அவர்களை எதிர்த்தோரை மிகைத்து அவர்களை மேன்மைப்படுத்தி அவர்களுக்கு வாக்களித்ததை நிறைவாக வழங்கி கௌரவித்தான். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். (ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து, உங்கள் பாதங்களை உறுதியாக்கி வைப்பான்) முஹம்மத் ( 07) மேலும் அல்லாஹ்கூறுகிறான் (அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ்வும் உதவி செய்வான் நிச்சயமாகஅல்லாஹ் வலிமை மிக்கவன் யாவற்றையும் மிகைத்தவன்)) (இவர்கள் எத்தகையோர் என்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால், தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.) (அல் ஹஜ் :40-41) காலவோட்டத்தில் இக்கொள்கையைப் பின்பற்றுவதில் மக்களிடம் மாற்றம் ஏற்பட பல பிரிவுகளாகப் தங்களுக்குள் பிரிந்தனர்; அறப் போரில் ஈடுபடுவதில்; அலட்சியமாய் இருந்தனர் சுக வாழ்வையும் மன இச்சைகளைப் பின்பற்றுவதையும் மிகவும் நேசித்தனர்; அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர அதிகமானோரிடத்தில் வெறுக்கத் தக்க செயல்கள் தோன்றின. எனவே அல்லாஹ்; அவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்ற நன்நோக்கில் மாற்றம் ஏற்படுத்தினான். மேலும் அவர்கள் செய்த தீயசெயல்களுக்காக அவர்கள் மீது எதிரிகளை அல்லாஹ்; சாட்டிவிட்டான் என்றாலும் அல்லாஹ்; தனது அடியார்களுக்கு ஒரு போதும் அநியாயம் இழைப்பவன் அல்லன். எப்போது அல்லாஹ்வின் கட்டளைகள் மீறப்படுகிறதோ அப்போது இந்நிலை ஏற்படும் என்பதை அவர்களுக்கு உணர்த்தவே இதனை செய்கிறான். அல்லாஹ் இது குறித்து பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்; (எந்த ஒரு சமுதாயம் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அதற்கு வழங்கிய எந்த அருட்கொடையையும் மாற்றி விடுபவனாக இல்லை) (அல் அன்பால்: 53) எனவே அரசாங்கங்கள், சமூகங்கள் என்றவகையில் முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் மீளுவதும் அவனுக்கு மாத்திரமே தூய்மையான முறையில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதும் தங்களினால் நிகழ்ந்துவிட்ட குற்றம் குறைகளுக்காக அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதும் அவசியமாகும். அல்லாஹ் அவர்களுக்கு கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என விதித்தவற்றை நிறைவேற்ற விரைவதும், அவர்களுக்கு எதை தடைசெய்துள்ளானோ அவற்றை விட்டு விலகியிருப்பதும் இந்த விடயங்களில் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொள்வதும் பரஸ்பரம் உதவிக் கொள்வதும் கட்டாயக் கடமை ஆகும்.

இந்த வகையில் இஸ்லாமிய ஷரீஆ குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் எல்லா விவகாரங்களிலும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை அமுல்படுத்தி தீர்வு வழங்குவதும், தீர்ப்புகளுக்கு ஷரீஆசட்டத்தை நாடிச்செல்வதும் இவற்றுள் மிகப் பிரதான விடயங்களில் ஒன்றாக உள்ளது.மேலும் அல்லாஹ்வின் ஷரீஆ சட்டத்திற்கு முரணான, மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களைக் கைவிட்டு விட்டு மக்கள் அனைவரும் இஸ்லாமிய ஷரீஆவின் தீர்ப்பினை நடைறை படுத்த வலியுறுத்த வேண்டும். இது போலவே மக்களுக்கு மார்க்கச் சட்ட திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்துவதும்,அவர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய விளிப்புணர்வை ஏற்படுத்துவதும் மார்க்க அறிஞர்கள் மீதுள்ள கடமையாகும். மேலும் உண்மையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் பரஸ்பரம் உபதேசம் செய்வதும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும்; இதன்படி நடக்க ஆட்சியாளர்களை ஊக்குவிப்பதும் மார்க்க அறிஞர்கள் மீதுள்ள பாரிய பொறுப்பாகும். இது போன்றே சோசலிசம் பாத்திஸம் மற்றும் வரட்டு தேசியவாதம் போன்ற மோசமான,பேரழிவை ஏற்படுத்தும் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணான கோட்பாடுகளை எதிர்த்துப் போராடுவதும் மிக முக்கியான விடங்களில் ஒன்றாகும். இதன் மூலம் அல்லாஹ் முஸ்லீம்களை இவ்விழி நிலையிலிருந்து காத்து சீர்படுத்தி முன்னோர்கள் பெற்றிருந்த சிறப்பை மீளவும் பெற வாய்ப்பை ஏற்படுத்துவான். மேலும் எதிரிகளை வெற்றி கொள்ள உதவிசெய்வான் மேலும் இந்த பூமியில் ஆட்சியதிகாரங்களையும் வழங்குவான். இதனையே அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் (நம்பிக்கையாளர்களான முஃமின்களுக்கு உதவி செய்வது எம்மீது கடமையாகும்) (அர்ரூம் : 47) மேலும் அல்லாஹ் கூறுகிறான் (உங்களில் நம்பிக்கைகொண்டு நல்லறம் புரிந்தோருக்கு இவர்களுக்கு முன்னுள்ளோரை அதிபதிகளாக்கியது போன்று இவர்களை ஆக்குவதாகவும், இவர்களுக்காக அவன் பொறுந்திக்கொண்ட இவர்களது மார்க்கத்தை உறுதிப்படுத்துவதாகவும் இவர்களது அச்சத்திற்குப் பின்னர் பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும் வாக்களிக்கிறான். இவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னரும் யார் நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாம் பாவிகள்) (அந்நூர்; :55) மேலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் (நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும் நம்பிக்கைகொண்டோருக்கும் இவ்வுலக வாழ்விலும் சாட்சிகள் எழுந்து நிற்கும் நாளிலும் உதவிசெய்வோம்) (ஹாபிர்: 51) (அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்களின் சாக்குப்போக்குகள் பயனளிக்காது.மேலும் அவர்களுக்கு சாபமும் மோசமான தங்குமிடமும் உண்டு.) (ஹாபிர்: 52)

இறுதியாக இவவுலகில் முஸ்லிம் தலைவர்களையும் பொதுமக்களையும் சீர்படுத்தி, மார்க்க விளக்கத்தை அவர்களுக்கு வழங்கி, இறையச்சத்தில் ஒன்றிணையவும், அவர்கள் அனைவரும் நேரான பாதையில் வழி நடக்கவும் உண்மைக்கு உதவுபவர்களாகவும், தீமையைத் தடுப்போராகவும் இறையச்சத்திற்கும் நற்காரியங்களுக்கும் உதவி செய்வோராகவும் சத்தியத்தைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் பரஸ்பரம் உபதேசம் செய்துகொள்வோராகவும் ஆக்க அல்லாஹ்வே சிறந்த உதவியாளனகவும் ஆற்றளுடையவனகாவும் மிகச் சிறந்த பொறுப்பாளனாகவும் உள்ளான். அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாகிய படைப்புகளில் மிகச்சிறந்வருமான எங்கள் தூதர் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக! வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹு.

معلومات المادة باللغة العربية